• மழைக்கொரு கணக்கு வைத்தாள்;
  • முளைத்திங்கே மெல்ல மெல்லத்
  • தழைக்கிற பயிருக்கெல்லாம்
  • தயாபரி கணக்கு வைத்தாள்;
  • இழைக்கொரு கணக்கு வைத்தாள்;
  • இங்கேநான் நாளும் செய்யும்
  • பிழைக்கொரு கணக்கு வைக்கப்
  • பராசக்தி முயன்று தோற்றாள்;

 

  • பார்வையின் எல்லைக்குள்ளே
  • பத்திரமாய்த்தான் வைத்தாள்
  • ஆர்வத்தால் வினைகள் சேர்த்தால்
  • அவள்பாவம் என்ன செய்வாள்?
  • சேர்வதைப் பெருக்கித் தள்ளி
  • செத்தையைக் கூட்டித் தள்ளி
  • சோர்வுடன் நிமிர்வாள் -நானோ
  • சேற்றினைப் பூசி நிற்பேன்

 

  • சொன்னசொல் கேளாப் பிள்ளை
  • செல்லமாய் வளர்த்து விட்டால்
  • என்னதான் சிரமம் என்றே
  • என்வழி அறிந்து கொண்டாள்
  • இன்னமும் பொறுமை காத்தே
  • இதமாக சொல்லிப் பார்த்தே
  • தன்வழி திருப்பப் பார்க்கும்
  • தயையினை என்ன சொல்வேன்!

 

  • கோபத்தில் காளியாமே?
  • கோரமாய் சிரிப்பா ளாமே?
  • ஆபத்தில் அள்ளிக் கொள்ளும்
  • அன்பைத்தான் நானும் கண்டேன்
  • நாபிக்குள் ஓங்காரத்தின்
  • நாதத்தில் பொலிந்து தோன்றும்
  • ரூபத்தில் அழகின் எல்லை
  • ருணம் நீக்கும் செஞ்சொல் கிள்ளை ;

Comments

  1. ஆரவத்தால் வினைகள் சேர்த்தால்
    அவள் பாவம் என்ன செய்வாள். ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *