கோலாலம்பூர் கம்பன் விழா மேடையில் இருந்த போது கிடைத்த செய்தி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மனைவியார் மரணமடைந்த செய்தி. விழாவில் முதல்நாள் பங்கேற்று அடுத்த சில மணிநேரங்களில் விமானம் ஏற இருந்த கவிப்பேரரசு…

  அவள்தான் அவள்தான் அடைக்கலம் அருளே அவளின் படைக்கலம் கவலை முழுதும் எரித்திடும் கருணை அவளின் சூத்திரம் சாகச மனம்செய்யும் சேட்டைகளில் அவள் சாட்சி மாத்திரமே சாட்டை அடிகளும் வாட்டி வதைக்கையில் சாபல்யம் அவள்பதமே…

நேற்றொரு பாதையில் நடக்கவிட்டாள்-இன்று நான்செல வேறொரு திசையமைத்தாள் காற்றினில் இலைபோல் மிதக்கவிட்டாள்-இளங் காட்டுப்புறாவின் சிறகளித்தாள் ஆற்றின் வெள்ளங்கள் கடக்கவிட்டா ள்-அவள் அமிலக் கொதிப்புகள்  குளிரவிட் டாள் ஊற்றெழும் வினைப்பயன் தூரவைத்தாள்-அந்த உத்தமி தன்னிழல் சேரவைத்தாள் சூரியன் போகிற வழிபார்த்தே -ஒரு…

 வானங் கறுத்தது வானங் கறுத்தது வஞ்சி முகம் போலே-இடி கானமிசைத்தது கானமிசைத்தது காளிகுரல் போலே தேனுமினித்தது தேனுமினித்தது தேவியவள்போலே  -இனி நானுந் தொலைந்திட நீயுந் தொலைந்திடு நங்கையருளாலே தேகத்தின் இச்சைகள் தூண்டி விடுவது தாயவள் மாயையன்றோ-உள்ளே நாகத்தின் வேகத்தில் ஓடிடும்…

யாரிவளோ

October 11, 2010 0

மாத்திரைப் போதவள் முகந்தெரியும்-ஒரு மின்னற் பொழுதினில் மறைந்துவிடும் ஊர்த்துவம் ஆடிடும் சலங்கையொலி-மிக உற்றுக் கவனிக்கக் காதில்விழும் தீர்த்தக் கரைகள் எங்கணுமே -எங்கள் தேவியின் காலடி பதிந்திருக்கும் வார்த்தைகள் தேடிடும் வேளையிலே-அவள் வண்ணப்பொன் அதரங்கள் முணுமுணுக்கும் சந்நிதி சேர்கிற வேளையினில்-நெஞ்சின் சஞ்சலம் கண்களில் பொங்குகையில் என்கதி…

காரிருள் நிறத்துக் காரிகை ஒருத்தி காலடி சலங்கை கேட்கும்-அவள் மூரி நிமிர்ந்து முதலடி வைத்ததும் மூளும் வினைத்தொடர் தீரும் கூரிய முனையினில் குருதியின் சிவப்பினில் குங்கும சூலம் ஒளிரும் மாரி அவள்வரும் வேளையில் தீநிறம் மேலைத் திசையினில் மலரும்  ஒன்பது…

 காலம் தனக்கென வைத்திருக்கின்றது கால காலமாய் உண்டியல் ஒன்று; முதன்முதல் வானம் உதிர்த்த விண்மீன், முதல்முகில் பொழிந்த மழையின் முதல்துளி வளைத்த தனுசு முறிந்த பொழுது தெறித்து விழுந்த தங்க மணிகள். கொடைக்கரம் இழுத்த மேகலையிருந்து நகைத்துச் சிதறிய நன்முத்துக்கள்; கந்தையில் மீந்த…

நீர்க்குடத் தளும்பலின் நிமிஷத் தெறிப்பாய் வேர்த்தடம் தெரியும் வேம்பின் நிழலாய் பூத்துச் சிரிக்கப் போகிற அரும்பாய் சேர்த்து வைத்த மயிலிறகுகளாய் உள்ளே சிலிர்க்கிற சிலுசிலுப்புக்குள் ஊடே வருபவை உன்ஞாபகங்கள்.. பிரியாப் பிரிவின் பார இலகுவை சரியாய்…

பத்திரம்  மிக்கது பத்திரம் அற்றது உன் கருணை   நித்தியம் மிக்கது நிச்சயம் அற்றது என்நிலைமை   பூவென மலர்வது பூகம்பம் அதிர்வது உன் கருணை   சுடரென ஒளிர்வது சருகென அலைவது என் நிலைமை…

கம்பிகள் நடுவே பாம்பாய் -அவள் கால்தொட நெளிகிற கூட்டம் செம்பொன் சிங்கா தனத்தே-எங்கள் சுந்தரி ஆள்கிற கோட்டம் நம்பி வருபவர்க்கு அன்னை-எங்கள் நாயகி மதுரை மீனாள் கும்பிடும் கைகளில் அவளே -துள்ளிக் கொஞ்சிடும் குழந்தையென்றானாள்…