நாட்டியப்பள்ளி ஒன்றில் கர்ணன் குறித்த நாட்டிய நாடகம் கேட்டார்கள். கூடுமானவரை ஒரே சந்தத்தில் இருந்தால் நல்லதென்று சொன்னார்கள். ஆறு அத்தியாயங்களாய் எழுதிக் கொடுத்தேன். வலைபூவில் சுலபத் தவணை முறையில் இடுவதாகத்திட்டம்.. …
பாடிடச் சொன்னவள் அவள்தான் -இந்தப் பாதையைத் தந்தவள் அவள்தான் தேடிய வெளிச்சமும் அவள்தான்-உள்ளே தெரிகிற ஜோதியும் அவள்தான் வீணையை மீட்டிடும் விரலாய்-என் விதியினை ஓட்டிடும் குரலாய் காணென்று காட்டிடும் அருளாய்-என் கண்முன்னே வருபவள் அவள்தான்…
காற்றிலாடும் பனைமரங்கள் கனவுகண்டன கற்பகமாய் மலர்வதுபோல் நினைவுகொண்டன நோற்பதுபோல் ஒற்றைக்காலில் நின்றிருந்தன நனவாகும் நமதுகனா என்றிருந்தன சாமமாகும் போதுகூட விழித்திருந்தன சாவிலாத வாழ்வுகாணத் துடித்திருந்தன தாமதமேன் என்றுசொல்லித் தவித்திருந்தன தூயமகன் வரவையெண்ணி சிலிர்த்திருந்தன உதயவேளை தன்னிலங்கே ஒருவன் தோன்றினான் ஓலைகளைப் பறித்தெடுத்துக் கொண்டுபோயினான் பதப்படுத்தி ஆணிதொட்டு வரையலாயினான் புண்ணியப்பூங் கவிதைகளைப் புனையலாயினான் தேனலைகள் புரண்டெழுந்து திசைநனைத்தன…
உலகின் அன்னை என்ற தலைப்பில் அன்னை தெரசா பற்றிய என் பாடல்களடங்கிய முதல் இசை ஆல்பம் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றிருந்த நேரமது. சுஜாதா,ஸ்வர்ணலதா, ஹரிணி போன்றவர்கள் உருக்கமாகப் பாடியிருந்தார்கள். என்னை ஊக்குவிப்பதற்காக கவிஞர்…
ரொம்ப வருஷங்களுக்கு முன்னர்,ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு பாடல் எழுத அழைத்தார்கள்.”முக்கியமான பாட்டுங்க…இந்தியத் தொலைக்காட்சியில் முதல்முறையாக ஜேசுதாஸ் ஒரு சீரியலுக்கு பாடப் போறாரு.நீங்கதான் பாட்டு எழுதப் போறீங்க.டூயட் சாங்”என்றார்கள்.. சீரியல் பேரு என்னங்க? அது இன்னும்…
ஜாலங்காட்டி நடக்குது ஜன நாயக சமையல்-பல காய்கறிகள் கலந்துபோட்டு கூட்டணி அவியல் கேழ்வரகின் நெய்பிசைந்து கசகச துகையல் கடுகுபோல படபடக்கும் கோபத்தின் பொரியல் உப்புபோலத் தொட்டுக்கிட ஜாதி ஒழிப்பு-அட ஊறுகாயப் போல்பழசு ஊழல் ஒழிப்பு…
சிவபெருமானுடன் மோதிய நக்கீரரும்,திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும்,திருஈங்கோய்மலை எழுபது பாடிய நக்கீரதேவ நாயனாரும் ஒருவர்தானா,வெவ்வேறு ஆட்களா என்கிற கேள்வி காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு வருகிறது. பக்திப்பெருக்கெடுக்கும் நக்கீரரும் பயங்கர கோபக்காரரான நக்கீரரும் ஒரே ஆளாக இருக்க முடியாது…
சிறுகதைகள்,நாவல் ஆகிய இரட்டைக் குதிரைகளிலும் வெற்றிச் சவாரி செய்யக்கூடியவர்கள் மிகச்சிலர். அந்த மிகச்சிலரில் குறிப்பிடத்தக்க மூத்த எழுத்தாளர் திரு.ஆ.மாதவன். ஆழ்ந்த உறக்கத்தில்,இரண்டு கனவுகளின் இடைவெளியில் மனதில் மின்னலிடக்கூடிய வரிகள் அவருடையவை. பேறு காலத்தில் ஒரு…
படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த மும்முரத்தில் தான் காணத் தவறிய பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறிய கடவுள் செய்த ஏற்பாடு,கவிதை. கவிதையின் கண்கள் வழியாக கவிஞனுக்கு நிகழும் தரிசனங்கள் அசாத்தியமானவை.அத்தகைய பதிவுகளுக்கேற்ப ஒவ்வோர் எழுத்து வகையும் ஒவ்வொரு…
தஞ்சை பெருவுடையார் கோயிலில் 14.11.2010.அன்று நடைபெற்ற 1025ஆவது ஆண்டு சதய விழா கவியரங்கில், “கவிஞர்கள் பார்வையில் இராசராசன் ‘என்னும் பொதுத்தலைப்பில்-தந்தையாக என்னுந் தலைப்பில் பாடிய கவிதை. தலைமை :இசைக்கவி ரமணன். சிந்தையெலாம் சிவபக்தி செழித்திருக்க…




