Blog

/Blog
மரபின் மைந்தன் முத்தையாவுக்கு தருமை ஆதீனப் புலவர் விருது!

மரபின் மைந்தன் முத்தையாவுக்கு தருமை ஆதீனப் புலவர் விருது!

சைவத்திருமடங்களில் முதன்மை திருமடமாக விளங்கும் தருமபுர ஆதீனம் இயல் தமிழ், இசை தமிழ் மற்றும் நாடகத் தமிழ் வல்லுனர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை குமார கட்டளை முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவின்போது தருமபுர ஆதீனம் 27- ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மரபின் மைந்தன் முத்தையாவுக்கு தருமை ஆதீனப் புலவர் என்ற விருதும் தங்கப் பதக்கமும் வழங்கி ஆசீர்வதித்தார். இவ்விழாவில் மதுரை ஆதீனம் ...
பௌர்ணமிப் புன்னகை

பௌர்ணமிப் புன்னகை

சமீபத்தில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது” தெரியுமா சபேசன் ஐயாவுக்கு கொஞ்சம் சரியில்லை” என்றார். சொன்னவர் குரலில் கவலை தோய்ந்திருந்தது. சாலமன் பாப்பையா அவர்களுக்கு பேராசிரியர் கண சிற்சபேசன் ஆசிரியர்.கவிக்கோ அப்துல் ரகுமான் கவிஞர் அப்துல் காதர் போன்றோரும் அவருடைய மாணவர்களே. நகைச்சுவை நாவரசர் என அறியப்பட்ட பேராசிரியர் கண சிற்சபேசன் நகைச்சுவை அலைகள் ஓங்கி ஒலிக்கும் இலக்கியக் கடல். ஆழ்ந்த புலமையும் அனாயசமான எளிமையும் கலந்த கலவை அவர். நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆகிய அரசர்களைப் ...

சனாதன தர்மம் என்றால் என்ன?

. விநாயக வழிபாடு முருக வழிபாடு சக்தி வழிபாடு சிவ வழிபாடு திருமால் வழிபாடு சூரிய வழிபாடு ஆகிய அறுவகை சமயங்கள் ஒன்றாக சனாதனம் என்று சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக திருமந்திரத்தின் முதல் பாடல் இந்த அறுவகை வழிபாடுகளில்அந்தந்த தெய்வமாக சிவனே நிற்கிறான் என்னும் பொருளில் ஆறென விரிந்தான் என்கிறது. எனவே ஆதிகாலத்திலிருந்தே இந்த அறுவகை சமயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை, ஒன்றை ஒன்று ஒப்புக் கொள்பவை என்பது தெளிவாகிறது. இவற்றின் பொதுப்பெயராக சனாதன தர்மம் என்பது ...

ஓஷோ மரபும் மீறலும் ஜெயமோகன் உரைகளின் தொடர்ச்சியில்..

    ஓஷோ பற்றிய உரைகள் நிகழ்த்திய மற்ற இரண்டு நாட்களும் ஜெயமோகன் ஓஷோ உருவான பின்புலம் பற்றி பேசவே அதிக நேரம் அர்ப்பணித்தார். ஓஷோ புதுமையானவர்தான் ஆனால் புதியவர் அல்ல என்பதை வெவ்வேறு தரவுகளைக் கொண்டு நிறுவ முற்பட்டார். பண்டைய ரிஷிகள் வகையறாவில் ஓஷோ சேர்க்கப்படலாம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு அவர் தந்த விளக்கங்கள் ஏற்கத் தக்கவையாக இருந்தன. ரிஷி என்ற சொல் மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் என்கிற பொருளில் மட்டுமே காலங்காலமாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ...

ஓஷோவும் கோவில்பட்டி கடலை மிட்டாயும்(ஜெயமோகனின் முதல்நாள் உரை)

பலரையும் போலவே என் பதின் பருவத்தில் தான் ஓஷோவை வாசிக்கத் தொடங்கினேன்.ரிபெல் என்கிற புத்தகம்தான் நான் முதலில் வாசித்த ஓஷோவின் புத்தகம். ஓஷோ எழுத்துகள் ஒரு சுகமான சுழல். உள்வாங்க உள்வாங்க உற்சாகமாக உள்ளிழுத்துக் கொண்டே செல்லும். தமிழின் ஆன்மீக நூல்களில் பரிச்சயம் இருந்தால் வாசிக்க வாசிக்க புதிய திறப்புகளை ஓஷோ வழங்கிக் கொண்டே இருப்பார். 91 –92 வாக்கில் இந்த வாசிப்பின் முற்றிய மனநிலையில் முன்பின் நான் உணர்ந்திராத அனுபவத்துக்கு ஆளானேன். எங்கேனும் நடந்து போய்க்கொண்டு ...

பக்தி என்ன செய்யும்?

  இதுபோன்ற கேள்விகளுக்கு திரும்பத் திரும்ப கவியரசர் கண்ணதாசனிடமிருந்தும் எனக்கு பதில்கள் கிடைக்கும். இன்று அதிகாலை புதுக்கோட்டையில் நடை பழக்கத்துக்குக் கிளம்பி செய்துகொண்டிருந்த பனிக்கு பயந்து காப்பிக் கடை ஒன்றில் ஒதுங்கினேன். தஞ்சாவூர் கவிராயர் வர்ணிப்பதுபோல வயிற்றில் விபூதி குங்குமம் பூசி இருந்த பாய்லரும், நெற்றியில் விபூதி குங்குமம் பூசி இருந்த சரக்கு மாஸ்டரும் தங்கள் வேலைகளை தொடங்கி இருந்தார்கள். கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா என்பதுபோல கேட்டதுமே காப்பி கிடைத்தது. குவளையுடன் அமர்ந்தபோது கவியரசரின் பாடல் ...
More...More...More...More...