Blog

/Blog
தமிழ்ப்பேராயம் வழங்கும் மகாகவி

தமிழ்ப்பேராயம் வழங்கும் மகாகவி

                                                             பாரதியார் விருது பெறுகிறேன்   எஸ்ஆர்எம் குழுமங்கள் நிறுவியுள்ள தமிழ்ப்பேராயம் வழங்கும் மகாகவி பாரதியார் விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன் எனும் தகவலை அறிந்து அகம் மிக மகிழ்கிறேன். நான் பார்த்து வியக்கும் படைப்பாளிகள் ...

ஆனந்த கீதனுக்கு அஞ்சலி

              என் பள்ளிப் பருவத்தில் என்னினும் சற்றே மூத்த சிலர் கல்லூரி மாணவர்களாக இருந்த வண்ணம் தமிழ் மேடைகளில் புதியன பலவும் செய்தார்கள். அத்தகைய குழுக்கள் கோவையில் வளர்ந்தன. அரசு பரமேசுவரன் தென்றல்ராஜேந்திரன், உமா மகேசுவரி, போன்றோர் உருவாக்கிய கலைத்தேர் இலக்கிய இயக்கத்தில் நான் இணைந்தேன். அதே காலகட்டத்தில் கோவை என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் உருவான அமைப்பு இளமை இலக்கியக் கழகம். அவைநாயகன் காளிதாஸ் பி.பி. ஆனந்த் போன்றோர் ...

எதை தேர்வு செய்வீர்கள்?

குழந்தைகள் பெற்றோரிடம் தங்கள் தேவைகளை பட்டியலிடுவது பழக்கம். அன்று தொடங்கியது இந்த வழக்கம். மனிதனின் தேவைகள் எப்போதும் தீர்வதேயில்லை. தேவைகளை தீர்மானிக்க ஆர்வம் அடிப்படை. ஒரு குழந்தையை இனிப்புக் கடையில் விட்டால் ஆர்வம் காரணமாய், தீர்மானிப்பதற்குள் தடுமாறிப் போகிறது. அதேநேரம் அந்த இனிப்புகளை தின்னத் தொடங்கி திகட்டினாலோ, விட்டால் போதும் என்று தோன்றுகிறது. காலப்போக்கில் அந்த கடைக்கு போனதைக்கூட அந்த குழந்தை மறந்துவிடக் கூடும். ஆனால் மனிதனைப் பொறுத்தவரை ஆர்வத்தின் அடிப்படையில் எழுகிற தேவைகளும் தேடல்களும் நிர்ப்பந்தங்கள் ...

முனைவர் த ராஜாராம்

            மடி நிறைய தானியங்களுடன், விதைக்கும் விருப்பமுடன் கழனிக்கு வருபவர்கள் தான் எல்லோரும் .   அவர்கள் விரும்பிய விதமாய் விதை விதைத்து எண்ணம் போலவே பயிர் வளர்த்து விதமாய் மகசூல் காண்பவர்கள் எத்தனை பேர்? மேற்கொண்ட பணியை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்து முடித்தோம் என்னும் நிறைவு கொண்டவர்கள்  எத்தனை பேர்? இந்தக் கேள்விகளுடன்தான் கலைஞர்களும் இலக்கியவாதிகளும் தரும் பங்களிப்பை நாம் எடைபோட வேண்டியிருக்கிறது.   உயர்ந்த ரசனையும் ...
வளைக்கைகள் அகலேந்தி வருக

வளைக்கைகள் அகலேந்தி வருக

திரிமீது ஒளிமேவும் தருணம் திசையெட்டும் அழகாக ஒளிரும் விரிகின்ற இதழ்போல சுடரும் விரிவானின் விண்மீனாய் மிளிரும் விழியோடு சுடரேந்தி வருக வளைக்கைகள் அகலேந்தி வருக எழிலான கோலங்கள் இடுக எங்கெங்கும் ஆனந்தம் நிறைக கதிர்வேலன் மயில்வந்து ஆட கலைவாணி யாழ்மீட்டிப் பாட மதிசூடும் திருவண்ணா மலையான் முற்றத்தில் மூவுலகும் கூட ஜகஜோதி யாய் மின்னும் இரவு ஜகங்காக்கும் மஹாசக்தி வரவு அகஜோதி அவளேற்றித் தருவாள் அவளேநம் உயிரெங்கும் நிறைவாள் ...
2018 நவராத்திரி – 10

2018 நவராத்திரி – 10

          சீறிய சிங்கத்தில் ஏறிய சக்திக்கு சந்ததம் வெற்றியடா-அவள் சங்கல்பம் வெற்றியடா கூறிய போற்றிகள் கூவிடும் வேதங்கள் கும்பிட்டு வாழ்த்துமடா-அவள் கொற்றங்கள் வெல்லுமடா பண்டோர் அசுரனைப் போரில் வதைத்தவள் புன்னகை ராணியடா-அவள் பல்கலை வாணியடா கண்டவர் நெஞ்சினைக் கோயிலாய்க் கொள்பவள் காருண்ய ரூபியடா – அவள் காலத்தின் சாவியடா எண்ணிய நன்மைகள்யாவும் நிகழ்வுற எங்கும் நலம்பெருக- சக்தி இன்றே அருள்தருக புண்ணியம் ஓங்கவும் பாவங்கள்நீங்கவும் பொன்மனம் இரங்கிடுக -எங்கள் புஜங்களில் இறங்கிடுக ...
More...More...More...More...