Blog

/Blog

இருவேறு-எழுத்துலக இயற்கை

சமீபத்தில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் வித்தியாசமான அனுபவம் ஒன்று நேர்ந்தது. விழாவில் பேசிய ஒருவர் “இப்போதெல்லாம் புத்தகங்களே விற்பதில்லை. வாசகர்கள் குறைந்து விட்டார்கள். இந்தச் சூழலில் புத்தகம் வெளியிடுவதே பெரிய விஷயம். இதில் எழுத்தாளர்களுக்கு ராயல்டி தருவதெல்லாம் சாத்தியமேயில்லை” என்று பேசினார். இன்னொருவர், “அப்படியெல்லாம் இல்லை. இன்று வாசகர்கள் தேடித் தேடிப் படிக்கிறார்கள். வாசிப்பு குறைந்து விட்டது என் ...

சர்ச்சைச் சிலந்தி படரும் எழுத்துலக மாளிகைகள்

தமிழில் மட்டும் என்றில்லை. பொதுவாகவே இது குறுஞ்செய்திகளின் காலம். சின்னச் சின்ன தீக்குச்சிகள் உரசி அதன் வழியே பற்றிப் பரவும் நெருப்பில் குளிர்காய உலகம் தயாராக இருக்கிறது. காத்திரமான எழுத்துகளை எழுதுபவர்கள் இதுபோன்ற உரசல்களை உற்பத்தி செய்பவர்களாகவும் இருப்பதுதான் சோகம். ஏனெனில் அவர்களின் உரமிக்க எழுத்துகளை வாசிப்பவர்கள் எண்ணிக்கையை விட இத்தகைய சர்ச்சைகள் வழி அவர்களை அறிந்து வைத்திருப்பவர்களே அதிகம். இந்த சர்ச்சையின் நூல்பிடித்தபடி அதனை எழுப்பியவரின் எழுத்துலகுக்குள் வந்து சேர்பவர்களும் உண்டென்று வாதிடலாம். அந்த எண்ணிக்கை ...

நற்றுணையாவது நமச்சிவாயவே!-10

ஈரோட்டில் நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன். ஒரு இலக்கிய ரசிகர் அவர். பெண் பேச்சாளர்கள் வந்தால் தட்டிக்கொடுத்து பாராட்டுவார். நல்ல முரடர். நாகப்பட்டிணத்திலிருந்து சென்ற ஓர் அம்மாள் அவரை ஓங்கி அறைந்தார். அவரை கிண்டலாக திருமேனி தீண்டுவார் என்று முன்பெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். இப்போது அப்பாலும் அடி சார்ந்தார் ஆகிவிட்டார். சிவத்தொண்டு மட்டுமில்லை. சமூகத் தீமைகளை எதிர்த்தாலும் கூட தொண்டர்களுடைய வீரம் நமக்கு வர வேண்டும் என்று சொல்கிறேன். அப்போது நாவுக்கரசர் சொல்லுகிறார். நான் அடியவன்தான் சிவனை வணங்குபவன்தான். ஆனால் ...

நற்றுணையாவது நமச்சிவாயவே!-9

நான்காம் திருமுறை உரை பாரதியார் ஒன்று சொன்னார். எனக்கு இந்த பூமிக்கு வந்த வேலையென்ன தெரியுமா என்றார். நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப் பொழுதும் சோரதிருத்தல். இதைக் கேட்டதும் ஒருவனுக்கு கேள்வி வந்தது, இதுதான் உன்னுடைய வேலையென்றால் சோற்றுக்கு என்ன செய்வாயென்று. அப்போது, பாரதி சொன்னான், நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல். உமக்கு நீயே மைந்தன் கணநாதன் சிந்தையே வாழ்விப்பான். இந்த மூன்றும் செய். நீ உன் வேலையை செய். இந்த ...

நற்றுணையாவது நமச்சிவாயவே!-8

நான்காம் திருமுறை உரை அண்மையில் மகாசிவராத்திரியின் பொழுது கோவையில் என்னுடைய குருநாதர் ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்திருந்தார். பிரதமர் வந்து திறந்து வைத்தார். நம்முடைய திருவாவடுதுறை சன்னிதானங்கள் நம்முடைய குருநாதர்கள் தலைமையில் அருளாளர்கள் எல்லாம் எழுந்தருளினார்கள். இதில் என்ன முக்கியமென்றால் ஆதியோகியாக பரமனை காணுகிற பெற்றிமை நம்முடைய மரபில் உண்டு என்பதற்கு திருமுறைகளில் உதாரணங்கள் இருக்கின்றன. சிவபெருமான் தவம் செய்தான் என்பதை கருவூர் தேவர் பாடுகிறபோது ‘யோகு செய்வான்’ என்கிறார். யோகம் ...

நற்றுணையாவது நமச்சிவாயவே!-7

நான்காம் திருமுறை உரை சின்ன வயதிலேயே அந்தப் பற்று, அந்த ஈடுபாடு வர வேண்டும். இளமையில் இறை சிந்தனையை விட்டு பின்னால் போய்ப் பிடிக்கிறோம். அதை அழகாகச் சொல்கிறார். வயதான பிறகு சிவநாமம் சொல்லாலமென்று வாயை திறப்போம்; இருமல்தான் வரும். இந்த முதுமை எப்படியென்று அருணகிரிநாத சாமி சொல்கிறார். தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி தொண்டு கிழவ னிவரா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே ...
More...More...More...More...