Blog

/Blog

நற்றுணையாவது நமச்சிவாயவே!-9

நான்காம் திருமுறை உரை பாரதியார் ஒன்று சொன்னார். எனக்கு இந்த பூமிக்கு வந்த வேலையென்ன தெரியுமா என்றார். நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப் பொழுதும் சோரதிருத்தல். இதைக் கேட்டதும் ஒருவனுக்கு கேள்வி வந்தது, இதுதான் உன்னுடைய வேலையென்றால் சோற்றுக்கு என்ன செய்வாயென்று. அப்போது, பாரதி சொன்னான், நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல். உமக்கு நீயே மைந்தன் கணநாதன் சிந்தையே வாழ்விப்பான். இந்த மூன்றும் செய். நீ உன் வேலையை செய். இந்த ...

நற்றுணையாவது நமச்சிவாயவே!-8

நான்காம் திருமுறை உரை அண்மையில் மகாசிவராத்திரியின் பொழுது கோவையில் என்னுடைய குருநாதர் ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்திருந்தார். பிரதமர் வந்து திறந்து வைத்தார். நம்முடைய திருவாவடுதுறை சன்னிதானங்கள் நம்முடைய குருநாதர்கள் தலைமையில் அருளாளர்கள் எல்லாம் எழுந்தருளினார்கள். இதில் என்ன முக்கியமென்றால் ஆதியோகியாக பரமனை காணுகிற பெற்றிமை நம்முடைய மரபில் உண்டு என்பதற்கு திருமுறைகளில் உதாரணங்கள் இருக்கின்றன. சிவபெருமான் தவம் செய்தான் என்பதை கருவூர் தேவர் பாடுகிறபோது ‘யோகு செய்வான்’ என்கிறார். யோகம் ...

நற்றுணையாவது நமச்சிவாயவே!-7

நான்காம் திருமுறை உரை சின்ன வயதிலேயே அந்தப் பற்று, அந்த ஈடுபாடு வர வேண்டும். இளமையில் இறை சிந்தனையை விட்டு பின்னால் போய்ப் பிடிக்கிறோம். அதை அழகாகச் சொல்கிறார். வயதான பிறகு சிவநாமம் சொல்லாலமென்று வாயை திறப்போம்; இருமல்தான் வரும். இந்த முதுமை எப்படியென்று அருணகிரிநாத சாமி சொல்கிறார். தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி தொண்டு கிழவ னிவரா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே ...

நற்றுணையாவது நமச்சிவாயவே!-6

நான்காம் திருமுறை உரை இந்த அருமையான பாடலைப் பார்க்கும் போது எப்படியெல்லாம் சிவபெருமான் சிந்தையில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம். உலகியலோடும் வாழ்வியலோடு ஒத்துப்போக வேண்டும் என்று நம்முடைய விழாத்தலைவர் பேசுகிறபோது சொன்னார். இந்த உலகியலை ஒத்துப்போவதற்காகத்தான் பழமொழிகள் வந்தன. ஒருமுறை கவியரசு கண்ணதாசன் அழுகை என்ற தலைப்பில் கவிதை பாடினார். வாழ்க்கையில் எவ்வளவு முறை அழுவீர்கள் என்று அவரை கேட்டபோது, கண்ணதாசன் சொன்னார். நான் எல்லாவற்றையும் பட்டுபட்டுதான் திருந்தியிருக்கிறேன். அவர் சொன்னார், அனுபவத்தினால் அறிந்தார் ...

நற்றுணையாவது நமச்சிவாயவே!-5

நான்காம் திருமுறை உரை நகைச்சுவைக்கு இன்னொரு உதாரணம். சிவபெருமானுடைய பல்வேறு செயல்பாடுகள் நமக்கே தெரியும். கங்கையை தலையில் சூடி இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும். மங்கைக்கு இடப்பாகம் கொடுத்து இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும். அவர் சாமகானம் பாடுகிறார்; இது எல்லோருக்கும் தெரியும். நடனம் ஆடுகிறார்; இது எல்லோருக்கும் தெரியும். இவை நான்கும் தனிதனியான வேலையென்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாவுக்கரசர் சொல்கிறார் அப்படியெல்லாம் இல்லை. இது ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்கிறார். இது எப்படி ஒன்றுகொன்று தொடர்புடையது-? ...

பட்டுக்கோட்டையார்- எளிமையின் பிரம்மாண்டம்

“புழலேரி நீரிருக்க போகவர காரிருக்க பொன்னுச்சாமி சோறிருக்க தங்கமே தங்கம் – நான் போவேனோ சென்னையை விட்டு தங்கமே தங்கம்” இன்றளவும் சென்னையில் செயல்படும் பொன்னுச்சாமி ஹோட்டல் சாப்பாட்டை சிலாகித்து பட்டுக்கோட்டையார் எழுதியகுறுங்கவிதை இது. அதே உணவகத்தில் காரசாரமாகக் காடை சாப்பிட்டதன் விளைவையும் அவர் கவிதையாக்கி இருக்கிறார். 29 ஆண்டுகளுக்குள் ஏகப்பட்ட தொழில்கள் செய்து குறுகிய காலமே பாடல்களெழுதினாலும் பாட்டுக்கோட்டையாகவே நிலைநின்று புரட்சிகரமானபாடல்கலைஎழுதியபட்டுக்கோட்டையாரின் குறும்பு முகத்தின் அடையாளம் பொன்னுச்சாமி உணவகம் பற்றிய பாடல்கள் இசைப்பாட்டுக்கு இயைபு மிகவும் ...
More...More...More...More...