சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் கங்கையுடன் காவிரியும் சங்கமமாய் பொங்கும் எங்குமுள்ள தீர்த்தங்களும் இங்குவந்து தங்கும் வானமழை வந்துவந்து தேனமுதம் சிந்தும் ஞானியெங்கள் சத்குருவும் தந்தருளும் குண்டம் சூர்ய…

ஆடும் திருவடி தெரிகிறது ஆனந்தம் அலைபோல் எழுகிறது பாடும் திருமுறை ஒலிக்கிறது பரமனின் திருவருள் இனிக்கிறது ராவணன் தோள்களில் பதிந்தபதம் ஜாமத்தில் சுடலையில் உலவும் பதம் ஆரூர் வீதியில் நடந்த பதம் ஆடிய பாதமே சாசுவதம் தீயென எழுந்தது திருமேனி தாமரைப் பதந்தனில் இவன்தேனீ தாயென்றும் வருவான் சிவஞானி தாண்டவ ஜதிசொல்லு மனமேநீ காலனை…

என்னுடைய 50ஆவது நூலாகிய திருக்கடவூர் பற்றி தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்களில் ஒருவராகிய முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்அவர்கள் நிகழ்த்திய திறனாய்வுரையினை இக்காணொளியில் காணலாம்.இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நண்பர் தஞ்சை செழியன் அவர்களுக்கு நன்றி. http://www.youtube.com/watch?v=5M1kn-mpTdw

(சத்குரு தந்த கருத்தோட்டத்தின் அடிப்படையில் சூர்ய குண்டம் பிரதிஷ்டைக்காக எழுதிய பாடல் இது) பல்லவி தண்ணீரே தண்ணீரே பூமியின் உயிரே நீதானே மண்ணோடும் விண்ணோடும் ஆள்கிற அழகே நீதானே தாகம்தீர தாகம்தீர உன்னைக் குடித்தேனே தீர்த்தமென்று தேடிவந்து உன்னில்…

(நாகப்பாம்பு பற்றிய சத்குருவின் ஆங்கிலக் கவிதையை வாசித்தேன். அதைத் தமிழில் எழுத முயன்றேன்) பூமியிலே தவழ்ந்து போகும் நாகப்பாம்பே- நீ புற்றுக்குள்ளே ஒளிந்திருப்பாய் நாகப்பாம்பே மேனியெங்கும் கோடுகொண்டாய் நாகப்பாம்பே-நீ நீலநஞ்சை சேர்த்துவைத்தாய் நாகப்பாம்பே சாம்பசிவன்தலையிலேஏறும்…

சூர்ய குண்டம் பிரதிஷ்டையின்போது பாம்பு பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு விளக்கமளித்தார்.அப்போது நாகதோஷம் என்றால் என்ன என்றொரு கேள்வியை தியான அன்பர் ஒருவர் கேட்டார். அதற்கு மிகவும் புதிய பரிமாணம் ஒன்றில் சத்குரு வழங்கிய…

அழித்தலுக்கான கடவுளென்று சிவனைச் சொல்வார்கள்.அவன் ஆடுமிடம் சுடுகாடென்பார்கள்.அவனுக்கு தாய்தந்தை இருந்திருந்தால் இப்படி மயானத்தில் ஆட விட்டிருப்பார்களா என்று பாடியவர்கள்சிவனடியார்கள். அடியவர்களிலேயே சிவனுக்கு அம்மா முறை கொண்டாடியவர் காரைக்கால் அம்மையார்.கொண்டாடியவர் அவர் மட்டுமல்ல. சிவனும்தான். பேய்வடிவெடுத்து…

என் பால்ய நண்பன் அருண் அமெரிக்காவின் காதலன்.அவன் பாஸ்டனில் இருந்த நாட்களில் அவனுடன்காரில் டி.எம்.எஸ் பாடல்களைக் கேட்டுக் கொண்டே நயாகரா சென்றபோது அவன் சொன்னது இன்றும் நினைவிருக்கிறது.” America is an Idea”.மனித சமூகம்…

ராதே பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு சத்குரு வருவாரா என்கிற கேள்வி எல்லோருக்கும் உண்டு. ஊரிலிருந்தால் வருவார் என்ற பதில் வரும், “ஊரிலிருக்கிறாரா?”என்ற அடுத்த கேள்வி எழும். அவரையே நேரில் பார்த்து அழைப்பிதழ் தந்தால் உண்மை தெரிந்துவிடும்…

அற்புதரின் பிரதேசம் மௌனத்தால் ஆனது. அங்கெழும் அத்தனை ஓசைகளும் மௌனத்தின் மடியில். நிகழ்பவை. மண்ணில் மழைத்துளி விழுகிற ஓசையும், புல்லில் பனித்துளி படிகிற ஓசையும் துல்லியமாகக் கேட்கும் விதமாய் அங்கே நிலைகொண்டிருந்தது மௌனம். அற்புதரின்…