அபிராமி அந்தாதி – 14
மூத்தவளா? ஏத்தவளா? தென்காசியில் ரசிகமணி டி.கே.சி விழா. அவருடைய இல்லமாகிய பஞ்சவடியில் அவர்தம் பெயரர்கள் திரு.தீப.நடராஜன், திரு.தீப.குற்றால லிங்கம் ஆகிய பெருமக்களின் அன்பு விருந்தோம்பலில் திளைத்துக் கொண்டிருந்தோம். ராஜாஜி, ஜஸ்டிஸ் மஹராஜன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், வித்வான் ல.சண்முகசுந்தரம் போன்ற பெரியவர்கள் அமர்ந்து கலை இலக்கியங்களை அனுபவித்த சந்நிதானம் அது. கலை இலக்கிய ரசனையில் டி.கே.சி என் ஆதர்சம். கம்பனில் பல மிகைப்பாடல்களை அடையாளம் கண்டதுடன் சில திருத்தங்களையும் செய்திருக்கிறார். அதனால் வாழுங்காலத்திலும் சரி, அதன்பின்பும் சரி, சில ...
அபிராமி அந்தாதி – 13
எது புண்ணியம்? ஒரு மனிதனின் வாழ்வில் எது புண்ணியம் என்ற கேள்விக்கு அபிராமிபட்டர் வழங்கும் பதில் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில்தான் எத்தனை பொருத்தம். ஒரு மனிதன். தான் விரும்பியதை வாழ்வில் செய்வதும், அதே மன அதிர்வலையில் இருப்பவர்களுடன் உறவில் இருப்பதும்தான் அவன் மிகுந்த புண்ணியம் செய்தவன் என்பதற்கான அடையாளம். இன்று பலருக்கும் நினைத்த நினைப்புக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தமில்லை. இன்னும் பலருக்கோ படித்த படிப்புக்கும் கிடைத்த பிழைப்புக்கும் சம்பந்தமில்லை. நினைப்புக்கும் நிதர்சனத்துக்கும் பாலம் கட்ட முடியாத பரிதவிப்பிலேயே ...
அபிராமி அந்தாதி – 12
எங்கே அவளின் திருவடிகள் சின்னஞ்சிறிய சம்பவம் ஆயினும், பொன்னம் பெரிய அற்புதம் ஆயினும், அது யாருக்கு என்ன அனுபவத்தை தருகிறதோ அதன் அடிப்படையில்தான் அது வகைப்படுத்தப்படும். அந்த அனுபவம் வெறும் உணர்ச்சியின் எல்லையில் நின்றால் போதாது. அறிவும் அதனை அங்கீகரிக்க வேண்டும். ஓர் இனிப்பை சாப்பிடுகையில் ஏற்படும் மகிழ்ச்சி, நிலையானதா? இல்லை. நீரிழிவு நோய் வர வாய்ப்புண்டு என்ற எச்சரிக்கையை அறிவு பிறப்பிக்கிறது. ஒன்றை உயர்ந்த அனுபவமென உணர்வும் அறிவும் ஒருங்கே ஒப்புக் கொள்கிறபோதுதான் அதன் நம்பகத்தன்மை ...
அபிராமி அந்தாதி – 11
ஒருவர் செய்து கொண்டிருக்கிற செயலுக்கும், அவர் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் நினைவுக்கும் சம்பந்தமிருக்க வேண்டும் என்றில்லை. பழக்கப்பட்ட பாதையில் வண்டிமாடு பயணம் செய்யும் போது வண்டிக்காரர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். தான் பயணம் செய்கிறோம் என்றுகூட அவருக்குத் தெரியாது. ஆனால் அவர் வண்டியை ஓட்டிக் கொண்டிருப்பதாகத் தான் எல்லோரும் சொல்வார்கள். அதே போல சதாசர்வ காலமும் அம்பிகையின் திருவுருவை தியானம் செய்யும் ஒரே வேலையைத்தான் செய்கிறார் அபிராமிபட்டர். அவருடைய உடம்பு தான் நிற்கிறது, படுக்கிறது, அமர்கிறது, நடக்கிறது. ...
அபிராமி அந்தாதி – 10
https://www.youtube.com/watch?v=ys7U27Xn_EA அந்தாதியில் அம்பிகையின் திருமுலைகள் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடங்களில் தென்படுகின்றன. அவை பிரபஞ்சத் தாய்மையின் பெருஞ் சின்னங்கள். பரஞானம் அபரஞானம் ஆகியவற்றின் அடையாளங்கள். அம்பிகையின் அளப்பரிய கருணைப் பெருக்கத்தின் குறியீடுகள். அதன் பேரருட்தன்மையைத் தாங்கும் திறன் யாருக்கும் இல்லாததால் அவள் உண்ணாமுலையம்மை என்று குறிக்கப்படுகிறாள். அன்னையின் திருமுலைப்பாலை அவளே குழைத்து ஊட்டி ஞானக் குழந்தைகளை உய்விக்கிறாள். அன்னையின் திருமுலைகள் கருத்திருக்கின்றன. சிவபெருமானின் திருவிழிகள் ஒத்திருக்கின்றன. இங்கொரு கேள்வி எழலாம். சிவபெருமானுக்கு ...
அபிராமி அந்தாதி – 9
வாழ்க்கை என்பதே வினைநீக்கும் ஏற்பாடுதான். அது எவ்விதம் நிகழ்கிறது என்பதில்தான் எல்லாம் நிகழ்கிறது. தன்னுடைய உயிரின் வினைகள் நீங்கப்பெற வேண்டும் என்னும் விருப்புணர்வோ இல்லாமலும்கூட எத்தனையோ பிறவிகளாய் பாசமாம் பற்றை வளர்த்து வருகிறோம். செவ்வண்ணப் பேரழகியாம் அபிராமி எவ்வண்ணம் அந்த வினைகளை அகற்றுகிறாள் என்பதை சுவைபடச் சொல்கிறார் அபிராமிபட்டர். அவளைப் பேரழகி என்ற கையோடு “எந்தை துணைவி” என்றும் அழுத்தம் தருகிறார். சிவபெருமான் பேரழகனாகவும் இருக்கிறான். அகோர மூர்த்தியாகவும் இருக்கிறான். அவருக்கேற்ற பேரழகி என்றும் சொல்லலாம். அவரைவிட ...