Blog

/Blog
நவராத்திரி கவிதைகள் – 2

நவராத்திரி கவிதைகள் – 2

நவராத்திரி கவிதைகள் – 2(30-9-2019) இடைவெளியே இல்லா இவள் கருணை கிட்ட தடை – வெளியே இல்லை தனக்குள் – மடையை அடைக்கும் அகந்தை அடித்தே உடைத்தால் கிடைக்குமே சக்தி கனிவு . சிறகசைத்துப் பாடுகிற சின்னப் பறவை உறவென்று வானத்தை உன்னும் _ பிறவியினைப் பெற்றவர்க் கெல்லாம் பராசக்தி தாய்தானே உற்றிந்த உண்மை உணர். உன்னில் ஒரு துளியாய் உள்ளாள் அவளைநாம் உன்னும் பொழுதே உருத்தெரிவாள் – இன்னும் தொடரும் பிறவித் துயர்நீங்க தேவி சுடரடிகள் ...
நவராத்திரி கவிதைகள்-1

நவராத்திரி கவிதைகள்-1

| நவராத்திரி கவிதைகள் – 1(29/9/2019) கரும் பட்டு வானில் போர்த்து கண் தூங்கச் சொன்னாள் தேவி வரும் ஒற்றைக் கதிருக்குள்ளே விதையாக நிற்கும் நீலி ஒரு வார்த்தை சொல்வாள் என்றே உலகமே ஏங்கும் நேரம் கருவாகும் வேதத்துள்ளே கலையாகி நின்ற காளி ஆற்றோர நாணல் தூங்க ஆராரோ பாடும் அன்னை நேற்றோடு நாளை இன்றி நிகழ் கணம் சமைத்தாள் முன்னை காற்றாகிப் புயலாய் மாறி கடுங்கோபம் தீர்ந்த பின்னை ஊற்றாகி ஒளியும் ஆவாள் உயிர்ப்பித்துத் தந்தாள் ...

அஞ்சலி: எங்கள் தலைமை ஆசிரியர் -திரு பி.வி.பத்மநாபன்

ஆசிரியர் ஒருவர் தன் பணியை ஆழமாக நேசித்து மாணவர்கள் மேல் நிபந்தனையில்லாத நம்பிக்கையும் கொண்டிருந்தால் அவர் காலங் காலமும் நினைக்கப்படுவார் என்பதற்கு நிகரற்ற உதாரணம் எங்கள் தலைமை ஆசிரியர் திரு பிவி பத்மநாபன் அவர்கள் நான் மணி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தபோது அவர் உதவித் தலைமை ஆசிரியர். இரண்டு ஆண்டுகளில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார் அவர் என் வாழ்வில் பல திருப்புமுனைகளுக்குக் காரணமாக போகிறார் என்பது எனக்கு அப்போது தெரியாது நான் பத்தாவது படிக்கும்போது ...

பிறவி வாசனை!

(14.04.2019 அன்று கோவையில் “வாசனைகளால் ஆனது வாழ்வு “எனும் பொதுத்தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில் பிறவி வாசனை எனும் தலைப்பில் வாசித்த கவிதை. தலைமை: பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் ) மண்ணனுப்பும் வாசனையோ முகிலுக்காக மலர்களது வாசனையோ வண்டுக்காக கொண்டுவந்த பழையபல வாசனைகள் கடந்தகாலம் எண்ணுகிற நினைவுக்காக பண்டுபல பிறவிகளாய் வந்து வந்து பூட்டிவைத்த வாசனைகள் எதற்கோ என்றால் உண்டாக்கி வரும்பிறவி வேரறுத்து உயிர்கரைந்து போகின்ற முக்திக்காக எத்தனையோ பிறவிகளை எடுத்ததுண்டு ஏதேதோ வடிவெடுத்து வந்ததுண்டு இத்தனைபேர் அரங்கினிலே ...
“ஈஷா உள்ளே வெளியே”

“ஈஷா உள்ளே வெளியே”

 “ஈஷா  உள்ளே வெளியே” என்ற இந்த நூல் ஈஷாவைப் பற்றிய விளக்கங்களை தரும் நூல் மட்டுமல்ல.மனிதன் தான் அகரீதியான உணர்வுகளை எவ்வாறு உணர்ந்து இறைவழி அதை அனுஷ்டிக்க வேண்டும் என்பதை விவரிக்கும் ஒரு வேத நூலாகவே இந்நூல் விளங்குகிறது. இங்கு அறியப்படும் ஒரே ஆற்றல் அது பேறாற்றலான ஆதிசிவன் மட்டுமே.இதை ஒவ்வொரு வரிகளிலும் நாம் உணரும் வண்ணம் , ஆசிரியர் எழுதியிருப்பது அவர் ஞானத்தை வெளிப்படுத்தும் ஞானசாரமாகவே இந்நூல் திகழ்கிறது. “ஈஷா” எப்படி உயிரின் ஆற்றலை அறிவியலோடு ...
தமிழ்ப்பேராயம் வழங்கும் மகாகவி

தமிழ்ப்பேராயம் வழங்கும் மகாகவி

                                                             பாரதியார் விருது பெறுகிறேன்   எஸ்ஆர்எம் குழுமங்கள் நிறுவியுள்ள தமிழ்ப்பேராயம் வழங்கும் மகாகவி பாரதியார் விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன் எனும் தகவலை அறிந்து அகம் மிக மகிழ்கிறேன். நான் பார்த்து வியக்கும் படைப்பாளிகள் ...
More...More...More...More...