Blog

/Blog

ஜெயமோகனின் நீலம்- வாசிப்பனுபவம்

“அதோ நீல மயில் ஒன்று தோகை விரித்தாடுகிறது என்றாள் சம்பகலதை. அதோ இன்னொரு இன்று மயில்  அதோ என்று கை நீட்டிக் கூவினர் கோபியர். நதிக்கரையில் மலைச்சரிவில் மரக்கிளைகளில் அலர்ந்தெழுந்தன ஆயிரமாயிரம் பீலி விழிகள். வான்நோக்கி பிரமித்து நின்றன பித்தெழுந்த நீல பார்வைகள்”   .”நீலம்” நாவலில் ஜெயமோகன்.   வெண்முரசு நாவல் வரிசையில் கிருஷ்ணார்ப்பணமாய் மலர்ந்திருக்கும் நாவல் நீலம். ஆயிரம் ஆயிரம் மயிற் பீலிகள் கண்களாய் விரிய கண்ணனைக் கண்டது போன்ற அனுபவத்தை இந்த நாவல் ...

ஆ.மாதவன் – நிழல்விழப்பறந்த கிருஷ்ணப் பருந்து

  ஆ மாதவன் என்றதுமே நினைவுக்கு வருபவை எள்ளலும் எதார்த்தமும் கைகோர்க்கும் அவருடைய சிறுகதைகள். பூனைகளின் அட்டூழியம் மிகுந்த குடியிருப்பில் இருப்பவள் கருக்கொண்டு தனக்குள் ஒரு பூனையே ஒரு கொண்டு வளர்வதாக பேறு காலம் வரை பதைபதைத்துப் போவாள். குழந்தை பிறந்த மயக்கத்தில் இருப்பவளுக்கு” மகாலட்சுமி போல பெண் குழந்தை” என்பது “மகா லட்சணமாய் பூனைக் குழந்தை” என்று காதில் விழும். வறுமையை பொருட்படுத்தாமல் இலக்கிய நண்பரை உபசரித்து இருப்பதையெல்லாம் வைத்து ஒப்பேற்றி ஒரு வழியாய் ரயில் ...
கணக்கிலே தோற்றாள்

கணக்கிலே தோற்றாள்

மழைக்கொரு கணக்கு வைத்தாள்; முளைத்திங்கே மெல்ல மெல்லத் தழைக்கிற பயிருக்கெல்லாம் தயாபரி கணக்கு வைத்தாள்; இழைக்கொரு கணக்கு வைத்தாள்; இங்கேநான் நாளும் செய்யும் பிழைக்கொரு கணக்கு வைக்கப் பராசக்தி முயன்று தோற்றாள்;   பார்வையின் எல்லைக்குள்ளே பத்திரமாய்த்தான் வைத்தாள் ஆர்வத்தால் வினைகள் சேர்த்தால் அவள்பாவம் என்ன செய்வாள்? சேர்வதைப் பெருக்கித் தள்ளி செத்தையைக் கூட்டித் தள்ளி சோர்வுடன் நிமிர்வாள் -நானோ சேற்றினைப் பூசி நிற்பேன்   சொன்னசொல் கேளாப் பிள்ளை செல்லமாய் வளர்த்து விட்டால் என்னதான் சிரமம் என்றே என்வழி அறிந்து கொண்டாள் இன்னமும் பொறுமை காத்தே இதமாக சொல்லிப் பார்த்தே தன்வழி திருப்பப் பார்க்கும் தயையினை என்ன சொல்வேன்!   கோபத்தில் காளியாமே? கோரமாய் சிரிப்பா ளாமே? ...
கண்ணதாசன் – ஆதார சுருதி

கண்ணதாசன் – ஆதார சுருதி

    எவ்வளவு பெரிய சங்கீதக் கலைஞராக இருந்தாலும் அவர்கள் சின்னதாய் ஒரு ராகத்தை முணுமுணுக்க விழைந்தாலும் அதற்கு உடனே சுருதி தேடுவார்கள். ஆரோகணம் அவரோகணம் எல்லாவற்றிலும் ஆல வட்டம் போடும் ஆற்றல் இருந்தாலும் கூட ஆதார சுருதி இன்றி அவர்களுக்கு அணுவும் அசையாது.   மறைந்து 39 ஆண்டுகள் ஆனபிறகும் கூட கவியரசர் கண்ணதாசன் இவ்வளவு தூரம் கொண்டாடப்படுவதற்கு காரணம் அவர் நம் வாழ்வின் ஆதார சுருதியாய் அமைந்ததுதான்.   காதல் -குடும்பம் –துரோகம்- உயர்வு- ...

கவியரசர் நினைவுநாள்

கலையானவன் -நீ – நிலையானவன் கவிவாணர் தமக்குள்ளே தலையாயவன் சிலையாவன் -தமிழ் -மலையானவன் சிந்தைக்குள் தினம் வீசும் அலையானவன்   காற்றானவன் – நீ – காற்றானவன் காற்றோடு கலக்கின்ற பாட்டானவன் நேற்றானவன் -நீ இன்றானவன் நிலையாகப் பெருகிவரும் ஊற்றானவன்   இசையானவன் – நீ- இசையானவன் என்றைக்கும் யாம்செல்லும் திசையானவன் விசையானவன் -உந்து விசையானவன் விம்முகிற கண்களிலே கசிவானவன்   நதியானவன் – ஜீவ – நதியானவன் விதிகூட விழுங்காத மதியானவன் கதியானவன் – எங்கள்- ...
பாரதியாரின் நண்பர் மகன் கோவையில் வாழ்கிறார்

பாரதியாரின் நண்பர் மகன் கோவையில் வாழ்கிறார்

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் வீட்டுமனை குடியிருப்பு ஒன்றில் சில ஆண்டுகள் முன் ஒரு வில்லா வாங்கியிருந்தேன் .வார இறுதிகளில் அங்கு செல்வது வழக்கம். அக்கம்பக்கத்தவர்கள் அன்பானவர்கள். அவர்களுக்கு அக்டோபர் மாத நமது நம்பிக்கை இதழை அன்பளிப்பாக வழங்கினேன். நடைப்பயிற்சி முடிந்து வருகையில் ஒரு வீட்டிலிருந்து பெரியவர் ஒருவர் வந்தார்.பலமுறை பார்த்திருக்கிறேன். பார்க்கும் போதெல்லாம் பரஸ்பரம் வணக்கமும் புன்னகையும் பரிமாறிக் கொள்வோம். “ஒரு நிமிஷம்” என்றபடியே வந்தவர் கைகளில் நமது நம்பிக்கை இதழின் ஒரு பக்கம் மடித்து ...
More...More...More...More...