Blog

/Blog

அபிராமி அந்தாதி – 8

கடையும் மத்தும் கடையூர்க்காரியும் பால் போன்றதுதான் உயிர். அதில் விழும் வினைத்துளிகளில் உயிர் உறைந்து போகிறபோது வந்து கடைகிறது மரணத்தின் மத்து. மரணம் மட்டுமல்ல, மரணத்துக்கு நிகரான எந்த வேதனையும் உயிரை மத்துப்போல்தான் கடையும். சீதையைப் பிரிந்து இராமன் உற்ற துயரை அனுமன் சீதைக்குச் சொல்லும்போது, “மத்துறு தயிரென வந்து சென்றிடைத் தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுற பித்து நின் பிரிவினிற் பிறந்த வேதனை” என்கிறான். குளிர்ந்த தயிரை மத்தால் கடைந்தால் துனி பறக்கும். ஆனால் உயிராகிய ...

அபிராமி அந்தாதி – 7

ஓர் உணர்வு நமக்குள் பிரத்யட்சமாக உருவாகிவிட்டால் அதையே திரும்பத் திரும்பச் சொல்வதுதான் நம் இயல்பு. காய்ச்சல் கண்டவர்கூட, ‘குளிருதே! குளிருதே!’ என்றே ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார். தன்னுடைய சிரசின் மேல் அம்பிகையின் பாதங்கள் பதிந்த அனுபவம் அபிராமிபட்டரின் உச்ச அனுபவம். அதையே மகிழ்ந்து மகிழ்ந்து சொல்கிறார். தன் சிரசின் மீது அம்பிகையின் மலரனைய திருவடிகள் பதிந்திருப்பதையும் அது பொன்போல் ஒளிர்வதையும் சதாசர்வ காலம் மனக்கண்ணால் காணும் பேறு பெற்றவரல்லவா அவர். “சென்னியது உன்பொன் திருவடித்தாமரை” என்கிறார். திருவடி ...

அபிராமி அந்தாதி – 6

கடலைக் கடைந்ததே வேண்டாத வேலை! திரிபுரங்களை ஆள்பவள் திரிபுரசுந்தரி. மனிதனின் உடல் மனம் உயிர் ஆகிய முப்புரங்களையும் அவளே ஆள்கிறாள். இந்த முப்புரங்களிலும் உள்ளும் புறமுமாய்ப் பொருந்துகிற அபிராம வல்லியின் திருமுலைகள் செப்புக் கலசங்களைப் போன்றவை. தனபாரங்களால் அம்பிகையின் இடைகள் வருந்துகின்றன. சைவ சித்தாந்தத்தில் அம்பிகைக்குத் தரப்பட்டிருக்கும் மிக முக்கியமான திருநாமம் மனோன்மணி. நெற்றிப் புருவங்கள் நடுவிலான பீடம் அவளுடையது. மனவுறுதிக்கும் மேம்பட்ட ஆத்மசாதனைக்கும் அவளே அதிபதி. கடலின் அலைகள் சலசலக்கின்றன; நடுக்கடல் சலனமில்லாமல் இருக்கிறது. சலனம் ...

அபிராமி அந்தாதி – 5

அபிராமியின் அடிதொழும் அன்பர்களின் பட்டியலை வெளியிடுகிறார் அபிராமிபட்டர். இது முழுப்பட்டியல் அல்ல. முதல் பட்டியல். தேர்தல் காலத்தில் வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஒன்று வெளியாகுமல்லவா! அப்படித்தான் இதுவும். “மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக் குனிதரும் சேவடிக்கே கோமளமே” அம்பிகையை வழிபடுவதில் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் மாயா முனிவர்களுக்கும் போட்டா போட்டிதான். இதில் மாயா முனிவர் என்பது நீண்டகாலம் சூட்சும வடிவில் வாழும் முனிவர்களைக் குறிக்கும் அதே நேரம் திருக்கடவூரில் மரணமில்லாத சிரஞ்சீவி நிலைபெற்ற மார்க்கண்டேயரையும் குறிக்கும். அம்பிகையை ...

அபிராமி அந்தாதி 4

அவளைப் புரிந்தால் அனைத்தும் புரியும்! ஞானிகளுக்கு கல்வி தேவையில்லை. நாம் வாசிக்கும் அளவு அவர்கள் வாசிக்கிறார்களா என்பதுகூட ஐயமே. ஆனால் நாம் நினைத்தும் பாராத பல நுட்பங்கள் அவர்களுக்குப் புரிபடுகின்றன். காணாதன காண்கிறார்கள். காட்டாதன காட்டுகிறார்கள். ஒரு நூலைப் புரட்டிய மாத்திரத்தில் அதன் உட்பொருள் இன்னதென உணர்த்துகிறார்கள். ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஒருமுறை சொன்னார். “ஒரு புத்தகத்தைப் புரட்டிய மாத்திரத்தில் அதை எழுதியவரின் மனம் எத்தகையது என்று பிடிபடுகிறது. அந்த மனத்திலிருந்து என்ன ...

அபிராமி அந்தாதி 3

3. விரலருகாய்….. வெகு தொலைவாய்…. அம்பிகைமீது அன்புச் சதோதரர் இசைக்கவி ரமணன் எழுதிப்பாடும் பாடல்களில் ஒரு வரி… “விரலருகாய் வெகுதொலைவாய் இருக்கின்றாய்.. உன்னை வென்றோம் என்றவர் நெஞ்சில் அமர்ந்து விழுந்து விழுந்து சிரிக்கின்றாய்.” சென்றடையாச் செல்வம் என்று நாயன்மார்கள் இறைவனைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு அதே இறைவன் தொடரும் துணையாய் வந்து கொண்டேயிருக்கிறான். முந்தைய அந்தாதிப் பாடல் அம்பிகையை விழுத்துணை என்கிறது. வழித்துணை, இல்லறத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கைத்துணை, செய்யும் தொழிலில் உதவும் வணிகத்துணை, இவற்றில் பல வழியிலேயே ...
More...More...More...More...