நற்றுணையாவது நமச்சிவாயவே!-4
நான்காம் திருமுறை உரை ஆனால் நாவுக்கரசரிடத்தில் பெருகின்ற நகைச்சுவை இருக்கிறதே மிக அபாரமான நகைச்சுவை. அவர் என்ன சொல்கிறார், சிவபெருமான் கையிலையில் வீற்றிருக்கிறார். இடப்பகுதியிலே உமையம்மை வீற்றியிருக்கிறாள். உமையம்மை ஏதோ சொல்லிவிட்டு திடீரென திரும்புகிற போது அவர் கழுத்தில் கடந்த பாம்பு திரும்பி இருக்கிறது. திடீரென அந்த பாம்பு கண்களில் பட்டதும் ஒரு விநாடி தூக்கிப் போட்டுவிட்டது. உமையம்மையை தூக்கிபோட்டு விட்டது. தூக்கிபோட்டதும் அவர்கள் திரும்பியதும் உமை திரும்பிய சாயலைப் பார்த்து நம்மைக் கொத்த மயில் வந்துவிட்டது ...
நற்றுணையாவது நமச்சிவாயவே!-3
நான்காம் திருமுறை உரை பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே என்கிறார் சேரமான் பெருமான் நாயனார். இந்த வண்ணங்களை சொல்லி வழிபாடு செய்கிற பதிகம் பாடுகிற இந்த முறையை சேரமான் பெருமான் நாயனாருக்கு முன்னதாக யார் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர் பெருமான் அதையும் செய்து இருக்கிறார். அவர் சொல்லுகிறார், பெருமானுடைய ...
நற்றுணையாவது நமச்சிவாயவே!-2
நான்காம் திருமுறை உரை இங்கே எனக்குத் தரப்பட்டு இருக்கிற நேரத்தில் நான்காம் திருமுறையில் நாவுக்கரசர் பெருமானுடைய பங்களிப்புகள் பற்றி ஒரு நிரல்பட யோசிக்க வேண்டும் என்று கருதுகிறேன். முதல் விஷயம் பெரிய புராணத்தில் 63 நாயன்மார்கள், நம்முடைய 9 தொகையடியார்கள், இவர்களைப் பற்றிய குறிப்புகள் வருவதற்கு எது மூலம் என்பது நமக்குத் தெரியும். திருத்தொண்டத் தொகை நமக்கு மூலம். ஆனால் திருத்தொண்ட தொகையினுடைய பாடல் பாணிக்கு எது மூலம் என்பதை நாம் யோசிக்க வேண்டும். இதே திருவாரூர்க்கு ...
நற்றுணையாவது நமச்சிவாயவே!-1
நான்காம் திருமுறை உரை பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக் கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே! திருமுறைகளின் அருமைப்பாடுகளை ஓதி உணரவும், உணர்ந்து பின்பற்றும் விதமாக தொடர்ந்து இயங்கி வருகிற அரனருள் அமைப்பினுடைய பன்னிரு திருமுறை திருவிழாவில் கலந்துகொண்டு நான்காம் திருமுறை நன்நாளாகிய இன்று நற்றுணையாவது நமச்சிவாயவே என்கிற தலைப்பில் நாவுக்கரசர் பெருந்தகையினுடைய அருளிச்செயல்கள் சிலவற்றை ...
குரு சந்நிதி
ஒளிவந்த பின்னாலும் இருள்வாழுமா ஒவ்வாத சொந்தங்கள் உடன்வாழுமா வெளியேறி நாம்காண வானமுண்டு வெளிவந்து திசைகாணும் ஞானமுண்டு கருவங்கள் கண்டாலும் காணாமலே கண்மூடி நாம்வாழ்ந்தோம் நாணாமலே பருவங்கள் திசைமாறும் பொழுதல்லவா பகையின்றி நடையேகல் நலமல்லவா காற்றோடு நான்சொன்ன கதையெத்தனை கண்ணார நான்பார்த்த வகையெத்தனை நேற்றோடு கிரணங்கள் நீங்கட்டுமே நிலவிங்கு தன்பாதை நடக்கட்டுமே சுயமாக அகல்கொண்டு சுடரேற்றலாம் சுகமான நினைவோடு வழிபோகலாம் தயவென்ன பயமென்ன இனிநிம்மதி தயக்கங்கள் தீரத்தான் குருசந்நிதி மரபின் மைந்தன் முத்தையா ...