ஒரு கனவின் கதை
நானொரு கனவில் திளைத்திருந்தேன் – அது நாளும் வருமென்று நினைத்திருந்தேன் தேனொரு கையில் இருக்கிறது – அதில் தேவ மூலிகை மணக்கிறது தானாய் ஒருதுளி பருகிவிட்டால் – பின்னர் தேவரும் மூவரும் வரந்தருவார் ஆனால் கைதான் அசையவில்லை – இதன் அர்த்தம் நெடுநாள் புரியவில்லை நீண்ட காலம் யோசித்தேன் – பல நூல்களைத் தேடி வாசித்தேன் மீண்டும் கனவு வரவுமில்லை-அதன் மூல ரகசியம் புரியவில்லை தூண்டும் தேடல் துரத்தியதால் – எனைத் துளைத்துத் துளைத்து சிந்தித்தேன் ஆண்டுகள் கொஞ்சம் ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-23
வாழ்க்கை விளையாட்டு! எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் மனிதனைப் பைத்தியமாய் அலையவிடும் ஆளுமை கிரிக்கெட் விளையாட்டுக்கு உண்டு. நம் தேசத்திற்கென்று சில பாரம்பரிய விளையாட்டுகள் உண்டு. அவையெல்லாம் வெறும் விளையாட்டுகள் அல்ல. வாழ்க்கை என்றால் என்னவென்று புத்தி சொல்கிற உத்திகள். அந்த விளையாட்டுகளின் கதையைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இப்போது, உலக அளவில் “இன்&டோர் – கேம்ஸ்” பிரபலமாகியுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அத்தகைய விளையாட்டுகளில் இந்தியாவுக்கென்று தனி முத்திரை உண்டு. அதிலும் பரமபதம் என்றொரு விளையாட்டு. பாம்புகளும் ஏணிகளும் ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-22
வீட்டுக்கு வீடு வார்த்தைப்படி “ஆதியில் வார்த்தைகள் இருந்தன. வார்த்தைகள் தேவனோடு இருந்தன. வார்த்தைகள் தேவனாகவே இருந்தன” என்கிறது விவிலியம். வார்த்தைகள் நாம் வெறும் கருத்து வாகனமென்று கணித்து விடக்கூடாது. நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் நம் வாழ்வின்மேல் சில தாக்கங்களை ஏற்படுத்தவல்லவை. சில கடைகளில் சென்று, “அரிசி இருக்கிறதா” என்று கேட்டால், “பருப்பு இருக்கிறது” என்று பதில் சொல்வார்கள். இது சம்பந்தமில்லாத பதிலல்ல. இயன்ற வரை ‘இல்லை’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை என்கிற உணர்வின் வெளிப்பாடே அது. ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-21
இது மகாபாரத காலமாம்… இதென்ன கலாட்டா! “ஒரு யோகியின் சுயசரிதை” என்ற நூலை நீங்க படித்திருக்கக் கூடும். அதனை எழுதியவர் ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர். அவருக்கு குருநாதர், ஸ்ரீ யுக்தேஸ்வர்கிரி. அவர் 1894ல் “புனித விஞ்ஞானம்” என்கிற தலைப்பில் ஆய்வுநூல் ஒன்றை எழுதினார். அதன் அடிப்படையில், “இப்போது நாம் இருப்பது துவாபரயுகம்” என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லைஃப் பாஸிடிவ் எனும் காலாண்டிதழில் (ஜூலை-செப்டம்பர் 2002) மெகோலா மஜீம்தார் என்பவர் இந்தக் கருத்தை மையப்படுத்தி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-20
சிரிக்கச் சிரிக்க வாழ்க்கை சிறக்கும் நாற்பதாண்டுகளுக்கு முன்னர், சிதம்பரம் பகுதியில் “ஹேப்பி நாராயணன்” என்றொருவர் இருந்தார். திருமண வீடுகளுக்கு அவரைப் பணம் கொடுத்து அழைப்பதுண்டு. அவர் சமையல் கலைஞரா? நாதசுவரக் கலைஞரா? இல்லை. சிரிப்புக் கலைஞர். கையில் கவுளி வெற்றிலை யோடு கல்யாண மண்டபத்துக்குள் நுழைவார் மனிதர். பத்துப் பதினைந்து பேராக உட்கார்ந்திருக்கும் இடத்தில் போய் மத்தியில் அமர்ந்து கொள்வார். வெற்றிலை போட்டுக் கொண்டே சிரிப்பார். மெதுவாக ஆரம்பித்து “கட கட”வென்று சிரிக்கத் தொடங்குவார். அருவிபோல், அலைபோல், ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-19
என்ன பெயர் வைக்கலாம்? குழந்தை பிறக்கவில்லை என்று கோவில் கோவிலாக ஏறி இறங்குபவர்கள், குழந்தை பிறந்தவுடன் “என்ன பெயர் வைக்கலாம்” என்று ஒவ்வொரு ஜோதிடர் வீடாக ஏறி இறங்குகிறார்கள். நட்சத்திரத்தின்படி, நியூமராலஜியின்படி, நேமாலஜியின்படி என்று எல்லாம் பார்ப்பதால்தான் படிப்படியாக ஏறி இறங்க வேண்டி வருகிறது. சிலர் வம்பே வேண்டாம் என்று குலதெய்வத்தின் பெயரையோ, பெற்றோர் பெயரையோ வைக்க முடிவெடுத்து விடுகிறார்கள். அதிலேயும் சில குடும்பங்களில் சிக்கல் வருவதுண்டு. மாமனார், மாமியாருடன் மனத்தாங்கல் உள்ள மருமகனோ, மருமகளோ குழந்தைக்கு ...