Blog

/Blog

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

7.நினைவாற்றலை நம்பாதீர்கள்! நினைவாற்றல் நிறைய உள்ளவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் நினைவாற்றலை நம்பாதீர்கள். படித்த விஷயங்கள், அபூர்வமான சம்பவங்கள், பழகிய முகங்கள், எப்போதோ போன இடங்கள், இவற்றையெல்லாம் நினைவு வைத்துக்கொள்ள நினைவாற்றல் அவசியம்தான். ஆனால், அவ்வவ்போது தோன்றும் யோசனைகள், அன்றாட வேலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றை, நினைவில் வைத்திருந்து, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட்டால் எப்படியோ மறந்துவிடும். நினைவாற்றல் என்பது நிலைக்காத கூட்டணி மாதிரி. எதிர்பாராத நேரத்தில் காலை வாரிவிடும். எனவே முழுக்க முழுக்க நினைவாற்றலை மட்டும் ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

6. 24 மணி நேரம் போதவில்லையா? இதோ… இன்னொரு மணிநேரம்! “எத்தனை வேலைதான் பார்க்கிறது-? இருபத்துநாலு மணிநேரம் போதலை” என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள்-? உங்களுக்குத் தேவைப்படும் இன்னொரு மணி நேரம், உங்கள் இருபத்துநாலு மணிநேரத்துக்குள்ளேயே ஒளிந்து இருக்கிறது. அதைக் கண்டுபிடித்துப் பயன்படுத்த, இதோ… சில எளிய வழிகள்: சற்றுமுன்னதாகக் கண்விழியுங்கள்: நீங்கள் வழக்கமாக எழுவதைவிடவும் கொஞ்சம் முன்னதாகக் கண்விழியுங்கள். ஆறுமணிக்கு எழுபவர் என்றால் ஐந்தரை மணிக்கு எழுந்து பழகுங்கள். நேரம் விரயமாவதைத் தவிர்த்திடுங்கள்: எப்படியெல்லாம் நேரம் வீணாகிறது ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

5.தோல்வி சகஜம்… வெற்றி-? தோல்வி சகஜமென்றால் வெற்றி, அதைவிட சகஜம்! இதுதான் வெற்றியாளர்களின் வரலாறு. இந்த மனப்பான்மை வளருமேயானால் தோல்வி பற்றிய அச்சம் துளிர்விடாது. இதற்கு நடைமுறையில் என்ன வழி? இதைத்தான் உங்களுடன் விவாதிக்கப்போகிறேன். உலகில் பெரும்பாலானவர்கள் செயல்படாமல் இருக்கக் காரணம், தகுதியின்மை அல்ல. தோல்வி அடைவோமோ என்கிற அச்சம்தான். தோல்வி பற்றிய அச்சம் நமக்குக் கூடாதென்றால், முதலில் தோல்விக்கும் வெற்றிக்கும் இருக்கிற சம்பந்தத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் எதைச் செய்தாலும் அதற்கு இரண்டே வழிகள்தான். ஒன்று ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

4. இவர் நீங்களாகவும் இருக்கலாம்! அவர் ஒரு பெரிய தொழிலதிபர். சர்வதேசப் புகழ்பெற்ற பிரமுகர். சுயமுன்னேற்றம் குறித்து இளைஞர்கள் மத்தியில் பேசியும் எழுதியும் வருபவர். விமானப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்வார். அப்படி ஒரு பயணத்தின்போது, விமானப் பணிப்பெண் அவரிடம் வந்தார். தலைமை விமானி, தன்னுடைய விருந்தினராக அந்தத் தொழிலதிபரை ‘காக்&பிட்’டிற்கு அழைப்பதாகக் கூறியதைக் கேட்டதும் தொழிலதிபருக்கு ஆச்சரியம். காக் – பிட்டிற்குள் நுழைந்த அவரை சிரித்த முகத்துடன் வரவேற்றார் விமானி. “நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது உங்கள் பேச்சைக் ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

3. வாழ்க்கைப் பயணத்திற்கு வரைபடம் உள்ளதா? புதிய மாநகரம் ஒன்றில் போய் இறங்கியதுமே நாம் செய்கிற முதல் காரியம், அந்த ஊரின் வரைபடத்தை விரித்து வைத்துக்கொள்வதுதான். நாம் இருக்கும் இடத்திலிருந்து போக வேண்டிய இடம் வரையில், விரலை நகர்த்திப் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்வோம். அப்போதே வந்த காரியம் பாதி முடிந்தது என்கிற நிம்மதி ஏற்படும். இதற்கே இப்படியென்றால், வாழ்க்கைப் பயணத்திற்கு வரைபடம் முக்கியமில்லையா? வாழ்க்கை என்றதும் பிறப்பு முதல் இறப்புவரை எனறு புரிந்துகொண்டு தத்துவார்த்தமாக எண்ணத் தொடங்க ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

2.“முடியாது” என்று சொல்லமுடிகிறதா உங்களால்? “ஓ! அப்படீங்களா… அதுக்கென்ன பண்ணிடலாம்! நிச்சயம்! என்னங்க. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை! உங்களுக்குச் செய்யலாமா? நல்லதுங்க.. வெச்சுடறேன்!” தொலைபேசியை வைத்த மாத்திரத்தில், “வேற வேலை இல்லை! இருக்கிற வேலை போதாதுன்னு இது வேறே” என்று முணுமுணுத்துக்கொண்டே புதிய வேலை ஒன்றை வேண்டா வெறுப்பாகத் தொடங்குபவரா நீங்கள்? அப்படியானால், “முடியாது” என்று சொல்லமுடியாதவர் நீங்கள். பெரும்பாலும், மற்றவர்கள் தவறாக எண்ணிக்கொள்வார்கள் என்கிற பயத்தில்தான் நம்மால்முடியாத வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு கொண்டு சிரமப்படுகிறோம். “நீங்க ...
More...More...More...More...