வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-12
மாற்றம் ஒன்றே முன்னேற்றம்! அந்த முதல் குரங்கு மட்டும் மனிதனாய் மாற மறுத்திருந்தால், இத்தனை முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்குமா என்ன? பழைய அணுகுமுறைகளையும், நம்பிக்கைகளையும் குரங்குப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேளுங்கள். அப்புறம் அவர்களுக்குச் சொல்லுங்கள்… மாற்றம் ஒன்றே முன்னேற்றம்! புறாக்களில் கட்டி அனுப்பிய கடிதம் ஃபேக்ஸில் பறப்பது முதல், கல்லில் எழுதிய மனிதன் கணிப்பொறியில் எழுதுவது வரை, எல்லா முன்னேற்றங்களுமே முதல் மாற்றத்தை அனுமதித்ததால்தான் ஆரம்பமானது. இன்று வந்திருக்கும் நவீன கருவிகள் எல்லாம் அதிசய ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-11
முதல் வெற்றிக்குப் பிறகு… முதல் வெற்றி கொடுக்கும் மனத்துணிவு, அபாரமானது. பாராட்டு மழை, பணம், புகழ் என்று முப்படைகளும் அணிவகுத்து மரியாதை செய்யும்போது, குதூகலத்திற்குக் கேட்கவா வேண்டும்? நிற்க முடியாத அளவு வெற்றியின் கனம் அழுத்தும் நேரத்தில், இதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமே என்ற எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டவர்களுக்கு முதல் வெற்றியே முன்னேற்றப் பாதை. அந்த உணர்வை இழந்தவர்களுக்கு முதல் வெற்றியே மூழ்க வைக்கும் போதை! ஓங்கி ஒலிக்கும் பாராட்டுக் குரல்களுக்கு நடுவே, “இப்போதுதான் எச்சரிக்கையாய் இருக்க ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-10
இலக்குகள் நிர்ணயிப்பது எதற்காக? “எங்கே செல்லும் இந்தப் பாதை” என்று பாடிக்கொண்டே போகிறவர்கள் முன்னேற்றப் பாதையில் போகிறவர்கள் அல்ல. எங்கே – எதற்காக – எப்படி – எந்த நேரத்திற்குள் போய்ச் சேரப்போகிறோம் என்று தெரிந்திருந்தால், அதுதான் வெற்றிப் பயணம். இதைத்தான் “இலக்குகள் நிர்ணயித்தல்” (Goal setting) என்று சொல்கிறார்கள். ஒரு மனிதன் செயல்படுவது தனித்தீவாகவா? இல்லை! அவனுடைய செயல்பாடுகள் வெவ்வேறு விதங்களில் வெளிப்படுகின்றன. வணிகம், உறவுகள், சமூகத் தொடர்புகள் என்று வெவ்வேறு தளங்களில் இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டால், அவற்றை நோக்கித் தெளிவாக ...
விளையாட்டுக்காரி
காலமெனும் சோழிகளை கைகளிலே குலுக்குகிற காளியவள் விட்டெறியும் தாயம் நீலநிறப் பேரழகி நீட்டோலைக் குறிப்பலவோ நீயும்நானும் ஆடுகிற மாயம் கோடுகளைப் போட்டுவிட்டு கபடியாட விட்டுவிட்டு காலைவாரிக் கைகள்கொட்டு வாளே ஓடவிட்டு வாடவிட்டு ஓலமிட்டு நாமழுதால் ஓடிவந்து மண்ணைத்தட்டு வாளே குழிநிரப்பி குழிவழித்து குதூகலமாய் கலகலத்து காளிஆடும் பல்லாங்குழி ஆட்டம் அழிப்பதுவும் ஆக்குவதும் அவள்புரியும் ஜாலமன்றோ ஆதிமுதல் ஆடுபுலி ஆட்டம் பாண்டியாட சொல்லித்தந்து பாய்ந்து போக எத்தனித்தால் பாதமொன்று தூக்கச்சொல்லு வாளே தாண்டிப்போக வழியில்லாமல் தட்டழியும் வேளையிலே தாவிப்போக ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-9
“உள்ளுணர்வின் குரல்” . இந்தக் குரல் எந்த மூலையிலிருந்து எழும்? இந்தக் கேள்விக்குப் பதில், “மூளை”யிலிருந்து எழும் என்பதுதான். மனித மூளை இடது வலதாக தனித்தனியே செயல்படுகிறது. இடதுசாரி, வலதுசாரி இரண்டின் ஆதரவும் இருந்தால்தான் மனிதனின் “மேல் சபையில்” நிலையான ஆட்சி நடக்கும். இடதுமூளை தர்க்கரீதியான விஷயங்கள் தொடங்கி, பிசிறில்லாமல் ஒரு கடிதத்தை அழகான ஆங்கிலத்தில் “டிக்டேட்” செய்வதெல்லாம் இடதுபக்க மூளையின் இலாகா. ஆனால் வலது மூளை வித்தியாசமானது. உள்ளுணர்வு “பளிச்”சிடும் சமயோசிதம். புதுமையான கண்ணோட்டங்கள், கவிதை, இசை, ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!
8. தாண்டி வாருங்கள் தாழ்வு மனப்பான்மையை! உங்களைப் பற்றிய அவநம்பிக்கை உங்களுக்குள்ளேயே தலைதூக்குமென்றால், அதற்குப் பெயர் தாழ்வு மனப்பான்மை. வாழ்வின் ஆரம்பப் பொழுதுகளில் வரும் தாழ்வு மனப் பான்மையை, அடுத்தடுத்து வருகிற வெற்றிகள் சரி செய்துவிடும். ஆனால், வளர்ந்து கொண்டே வருகிறபோது, சில தோல்விகள் காரணமாக வரும் அவநம்பிக்கையும், அந்த அவநம்பிக்கை மெல்ல உருவாக்கும் தாழ்வு மனப்பான்மையையும் கவனமாகக் கையாள்வது அவசியம். இந்த இரண்டாவது வகை தாழ்வு மனப்பான்மைக்கு மருந்து, உங்களை நீங்களே மதிப்பது. சுய மதிப்பு ...