Blog

/Blog

12.வாய்ப்புகளின் வாசல்

சரக்கு மாஸ்டரும் சப்ளையரும் சம்பந்தம் செய்த கதை உங்களுக்குத் தெரியுமா? சரக்கு மாஸ்டர் பெண்ணை யாருக்குக் கட்டி வைக்கலாம் என்று கேள்வி வந்தபோது, தான் பணிபுரியும் உணவகத்திலுள்ள சப்ளையருக்குத் தான் கல்யாணம் செய்துகொடுக்க வேண்டும் என சரக்கு மாஸ்டர் ஒற்றைக்காலில் நின்றாராம். “வேறு மாப்பிள்ளை பார்க்கலாமே” என்றால், “வேண்டவே வேண்டாம்” என்று மறுத்துச் சொல்லி விட்டாராம். காரணம் கேட்டபோது, “நான் செய்து தரும் உடைந்த இட்டிலி, வேகாத ஊத்தப்பம் இதையெல்லாமே காரணங்கள் சொல்லி வாடிக்கையாளரை சாப்பிடவைத்து விடும் ...

11.சந்தையில் வெல்ல சரியான வழி

“விற்பனை செய்வதில் முன்னனுபவம் உண்டா?” நேர் காணலில் கேட்டார், அதிகாரி. “நிறைய உண்டு சார்! எங்க பூர்விக வீட்டை வித்திருக்கேன். வயலை வித்திருக்கேன்.மனைவி நகைகளை வித்திருக்கேன். என் ஸ்கூட்டரைக் கூட நேத்துதான் வித்தேன்” என்றாராம். வேலை கேட்டுவந்தவர். உள்ளதையெல்லாம் விற்றுவிட்ட சோகமல்ல விற்பனை. உற்சாகத்துடன் மேற்கொள்வதுதான் விற்பனை. கொடுக்கப்பட்ட இலக்கை எட்டுவது என்பது மார்க்கெட்டிங் துறையின் அடிப்படை. ஆனால், முழு மனநிறைவை வாடிக்கையாளர்களுக்குத் தருவதுதான் நிரந்தரமான, தொடர் வெற்றிகளுக்குத் துணை. மார்க்கெட்டிங் மன்னாதிமன்னராக வருபவர்கள், முதலில் தங்கள் ...

10.வெற்றிக்கு எல்லையே இல்லை

மார்க்கெட்டிங், விற்பனை இரண்டும் சில விநாடிகள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டையர்கள். இந்தியச் சூழலில் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. மக்கள் மனதில் ஒரு தயாரிப்பை ‘பச்சக்’ என்று பச்சை குத்த மாங்கு மாங்கென்று உழைப்பவர்கள் மார்க்கெட்டிங் துறையினர். அதை களத்தில் எடுத்துக்கொண்டு போய் இலக்கை முடிப்பவர்கள் விற்பனையாளர்கள். எப்படி இரட்டையர்களை சரியாகப் பிரித்தறிவது கடினமோ அதேபோல இப்போதெல்லாம் மார்க்கெட்டிங் துறையினர்க்கும் விற்பனைத் துறையினருக்கும் வித்தியாசம் காண்பது கடினமாகிவிட்டது. இந்த நேரத்தில், மார்க்கெட்டிங் துறைக்கு மட்டுமில்லாமல் வாழ்வுக்கென்றே வகுக்கப்பட்ட ஒரு ...

9.நுகர்வோர்களை உணருங்கள்

நுகர்வோர் மத்தியில் சில நம்பிக்கைகளும் உண்டு. சில மூட நம்பிக்கைகளும் உண்டு. ஆனால், அந்த மூட நம்பிக்கைகள் அறியாமையிலிருந்து பிறந்தவை அல்ல. அசாத்தியமான நம்பிக்கையில் பிறந்தவை. உதாரணமாக, ஒரே நேரத்தில் பலரையும் சோதனை போடுகிற பணியில் இருக்கும் காவலர்கள்கூட, ஒவ்வொருவரையும் பிரித்து மேய்ந்து அனுப்புவதில்லை. சிலரைப் பார்த்த மாத்திரத்தில் லேசாகப் பரிசோதித்து அனுப்பி விடுவார்கள். பல்லாயிரக்கணக்கானவர்களில் பார்த்துக்கொண்டே வருவதால் தங்கள் உள்ளுணர்வில் எடை போடும் திறனை மிக வலிமையாக ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதே உள்ளுணர்வுதான், வாடிக்கையாளர்களின் அசாத்தியமான நம்பிக்கையில் ...

8.எல்லாமே ரைட் நம்பர்

நிறைய நிறுவனங்களில் டெலிபோன் ஆபரேட்டர்கள் ஒவ்வொரு நாளும் அடிக்கடி சொல்கிற ஒன்று,  “சாரி! ராங் நம்பர்”. ஆனால் அமெரிக்காவின் மார்க்கெட்டிங் நிபுணர் ரோசென் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தின் படி, ஒரு நிறுவனத்திற்கு வருகிற எந்த அழைப்புமே ராங் நம்பர் இல்லை! ஒருவர் தவறாகவே அழைத்தாலும் அந்த அழைப்பைப் பயன்படுத்தி வாடிக்கையாளராக மாற்றுகிற உத்தி தெரிந்தால் அந்த நிறுவனம் மார்க்கெட்டிங் துறையில் மலை போல் நிமிர்ந்து நிற்பதாக அடையாளம். இது சாத்தியமா என்ற சந்தேகம் எழலாம். ரோசென் சொன்னது பற்றி ...

7.நேனோ பெயர் ஏனோ?

குறைந்த விலையில் சிறந்த தரம் என்பது சாத்தியமே இல்லாத விற்பனை சாமர்த்தியம் என்பது பொதுவான எண்ணம். சொல்லப் போனால், பாமரர்களை நம்பும் வியாபாரங்களில் பேசப்படுகிற ஆசை வார்த்தைகள் என்றும் அவற்றை சொன்னவர்கள் உண்டு. கோடாரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஒரு குண்டூசி வாங்கினால்கூட அந்த செலவு வாடிக்கையாளர்கள் தலையில்தான் விழும் என்பது நுகர்வோர்களின் நம்பிக்கை. இதையெல்லாம் கடந்து, நியாயமான விலை, நிகரில்லாத தரம் என்பதை ஒரு நிறுவனத்தின் கோட்பாடாக மக்களை நம்பவைப்பதும், அதன்படியே நிற்பதும், சந்தையில் நிற்கும் ...
More...More...More...More...