வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!
நமது வீட்டின் முகவரி – 12 “நண்பர்களோடு சேர்ந்து கெட்டுப்போய்விட்டேன்” – இது வாலிபர்கள் பலர் வழங்கும் வாக்குமூலம். பொதுவாகப் பார்த்தால் வாழ்வில் நன்மையோ, தீமையோ நம் மூலமாக மட்டும்தான் வரும். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று கணித்துச் சொல்கிறார் கணியன் பூங்குன்றன். வெற்றிகளெல்லாம் நம் மூலமாக வந்ததாகவும், தோல்விகளெல்லாம் பிறர் தந்ததாகவும் கருதிக் கொள்கிறோம். நாம் இத்தகைய மனப்பான்மையில் நம் சுட்டுவிரல் முதல் முதலில் நீள்வதென்னவோ நண்பர்களை நோக்கித்தான்! நண்பர்களால் கெட்டவர்கள் இரண்டு வகை. சில ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!
நமது வீட்டின் முகவரி – 11 கல்விக்காலம், பதவிக்காலம், எல்லாவற்றிலுமே இளைஞர்கள் வாழ்வில் பெரும்பகுதி வகிப்பது நட்பு. 25 வயதை எட்டிவிட்ட இளைஞரைக் கேளுங்கள், “என்னதான் சொல்லுங்க! எத்தனை நண்பர்கள் வந்தாலும் பள்ளிக்கூட நண்பர்கள் அளவுக்கு மனசுக்கு நெருக்கமா வர்றதில்லீங்க!” என்பார். மனிதனை உயர்த்துவதும், கொஞ்சம் அசந்தால் வீழ்த்துவதும் நட்புதான். அதனால்தான் திருவள்ளுவர்கூட நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு என்று அதிகாரம் அதிகாரமாய் அடுக்கிக் கொண்டே போகிறார். நமது வாழ்வில் நண்பர்களுக்கு என்ன இடம் என்பதை ஆராய்ந்தாலே ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!
நமது வீட்டின் முகவரி – 10 “எடுத்த எடுப்பிலேயே ஏகமாய்ச் சம்பளம்.” இது வேலை இல்லாத இளைஞர்களின் வசீகரக் கனவு. இந்தக் கனவு நிலையிலிருந்து விடுபட வேண்டியது அவசியம். ஏனெனில், பயிற்சிக்காலம் முடிந்து பணிக்கு இவர் இன்றியமையாதவர் என்கிற எண்ணம் ஏற்படும்வரை வேலை தருபவரிடம அதிகம் எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலும், நிர்வாகிகளுக்கு திறமையாளர்மீது தனிக்காதலே உண்டு. பணியில் சேர்க்கப்பட்டு, பயிற்சிக்காலம் (Probation) முடியும்முன்னர், தன் தகுதியை நிரூபிக்கிறவர் நிலை நிறுத்தப்படுகிறார். அவர் கேட்பது கிடைக்கிறது. சில இளைஞர்கள் ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!
நமது வீட்டின் முகவரி – 9 நேர்முகத்தேர்வு பற்றி கடந்த இரண்டு அத்தியாயங்களில் நிறையவே பேசினோம். நேர்முகத் தேர்வுக்குத் தயார் செய்வதென்பது, நம்மை நாமே பலப்படுத்திக் கொள்ள யாரோ தருகிற வாய்ப்பு. அயல்நாட்டு இசைக் கலைஞர்கள் மத்தியில் பரவலாக ஒரு வாசகம் உண்டு. “பயிற்சியை ஒரு நாள் நிறுத்துகிறாயா? உனக்கு மட்டும் வித்தியாசம் தெரியும். பயிற்சியை இருநாள் நிறுத்துகிறாயா? விமர்சகர்களுக்கு அந்த வித்தியாசம் தெரியும்.” ஆம்! பயிற்சியின்மையின் அறிகுறிகள் வெளிப்படையானவை. பலவீனத்தின் ஆரம்பக்கட்டம் அது. தொடர்ந்து தகுதிப்படுத்திக் ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!
நமது வீட்டின் முகவரி – 8 விற்பனை சார்ந்த துறைகளில் இப்போதெல்லாம் வேலை வாய்ப்புகள் அதிகம். பேச்சுத்திறன், பணிந்துபோகும் குணம் போன்ற இதற்கான அடிப்படைத் தகுதிகள். இத்தகைய பணிகளுக்கு இண்டர்வியூ நேரத்திலேயே ஓர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. “மாதம் ஒன்றுக்கு எந்த இலக்கு வரை உங்களால் எட்ட இயலும்?” என்கிற கேள்விக்கு, சாத்தியமாகக்கூடிய பதில்களையே சொல்லவேண்டும். கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மாதத்திற்கு நான்கு கம்ப்யூட்டர்கள்தான் விற்கமுடியும் என்று நீங்கள் கருதினால், அதையே சொல்லலாம். வேலையைப் பெற்றுவிடும் ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!
நமது வீட்டின் முகவரி – 7 எதிர்காலம் பற்றிய உத்திரவாதம் நிகழ்காலத்திலேயே கிடைப்பதற்குப் பெயர்தான் கேம்பஸ் இண்டர்வியூ. அதில் எல்லோர்க்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம் என்கிற கேள்விக்கே இடமில்லை. “பூமி பொதுச்சொத்து; உன் பங்கு தேடி உடனே எடு” என்றார் கவிஞர் வைரமுத்து. எதிர்காலத்தை எதிர்கொள் உற்சாகமாகக் கிளம்ப வேண்டியதுதான். நேர்முகத் தேர்வுகள் என்றாலே, அவை இளைஞர்களுக்கு எதிரானவை என்பதுபோல ஒரு தவறான அபிப்பிராயம், தமிழ் சினிமாக்களின் தயவால் உருவாகிவிட்டது. சம்பந்தம் இல்லாத அசட்டுக் ...