Blog

/Blog

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 15 நட்பு, காதல் போன்ற தனிமனித உறவுகள், அன்பு காரணமாய் நம் இயல்புக்கேற்ப வளைந்து கொடுக்கக்கூடும். ஆனால், ஒருவர் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் கையாள வேண்டிய உறவுகளில் மிக முக்கியமானது அலுவலகச் சூழலில் ஏற்படும் உறவுகள். தனிமனிதனின் உளவியல் பாங்கை, உளவியல் அறிஞர்கள் இரண்டாகப் பிரிப்பதுண்டு. தனிமைச் சூழலில் தனிமனிதன், சமூகச் சூழலில் தனிமனிதன். சமூகச் சூழலில் முக்கியமானது அலுவலகச் சூழல். இந்த உறவுகள் சரியாகக் கையாளப்படாதபோது இரண்டு வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 14 கடந்த அத்தியாயத்தில் காதலுக்காக உயிரை விடுவதுதான் புனிதமா என்கிற கேள்வியை எழுப்பி இருந்தேன். நட்பானாலும் காதலானாலும், அது வாழ்க்கைக்குத்தான் நம்மை தயார்ப்படுத்த வேண்டும். ஓர் உறவு முறிகிறதென்றால் அங்கே தேர்வு செய்த நபர் தவறானவர் என்று அர்த்தம். காதலே தவறானது என்று அர்த்தமல்ல. எனவே, இவர்கள் தோற்பதால் காதலின் புனிதம் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. காதலின் பெயரால் உயிர்கள் பலியாகும்போதுதான் காதலின் புனிதம் கெடுகிறது. இப்படி யோசிப்போம். காதல் எதை நோக்கி ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 13 இளமையின் காவியத்தில், அபூர்வ அத்தியாயம் நட்பு, அழகிய அத்தியாயம் காதல். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குழந்தை மனம் – முதிர்ந்த மனம் இரண்டும் உண்டு. குழந்தை மனம், யாரிடமாவது ஆதரவு தேடி அலையும். முதிர்ந்த மனம், யாரிடமாவது பரிவையும் அன்பையும் பொழியும். மனிதனின் குழந்தை மனம் – முதிர்ந்த மனம் இரண்டுமே முழுவீச்சில் வெளிப்படுவது காதலில்தான். இளமையில் காதல் வயப்படுவது தவறில்லை. ஆனால், காதல் வராவிட்டால் பரவாயில்லை. பழ.சந்திரசேகரன் என்கிற கவிஞர் ஒருமுறை சொன்னார், ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 12 “நண்பர்களோடு சேர்ந்து கெட்டுப்போய்விட்டேன்” – இது வாலிபர்கள் பலர் வழங்கும் வாக்குமூலம். பொதுவாகப் பார்த்தால் வாழ்வில் நன்மையோ, தீமையோ நம் மூலமாக மட்டும்தான் வரும். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று கணித்துச் சொல்கிறார் கணியன் பூங்குன்றன். வெற்றிகளெல்லாம் நம் மூலமாக வந்ததாகவும், தோல்விகளெல்லாம் பிறர் தந்ததாகவும் கருதிக் கொள்கிறோம். நாம் இத்தகைய மனப்பான்மையில் நம் சுட்டுவிரல் முதல் முதலில் நீள்வதென்னவோ நண்பர்களை நோக்கித்தான்! நண்பர்களால் கெட்டவர்கள் இரண்டு வகை. சில ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 11 கல்விக்காலம், பதவிக்காலம், எல்லாவற்றிலுமே இளைஞர்கள் வாழ்வில் பெரும்பகுதி வகிப்பது நட்பு. 25 வயதை எட்டிவிட்ட இளைஞரைக் கேளுங்கள், “என்னதான் சொல்லுங்க! எத்தனை நண்பர்கள் வந்தாலும் பள்ளிக்கூட நண்பர்கள் அளவுக்கு மனசுக்கு நெருக்கமா வர்றதில்லீங்க!” என்பார். மனிதனை உயர்த்துவதும், கொஞ்சம் அசந்தால் வீழ்த்துவதும் நட்புதான். அதனால்தான் திருவள்ளுவர்கூட நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு என்று அதிகாரம் அதிகாரமாய் அடுக்கிக் கொண்டே போகிறார். நமது வாழ்வில் நண்பர்களுக்கு என்ன இடம் என்பதை ஆராய்ந்தாலே ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 10 “எடுத்த எடுப்பிலேயே ஏகமாய்ச் சம்பளம்.” இது வேலை இல்லாத இளைஞர்களின் வசீகரக் கனவு. இந்தக் கனவு நிலையிலிருந்து விடுபட வேண்டியது அவசியம். ஏனெனில், பயிற்சிக்காலம் முடிந்து பணிக்கு இவர் இன்றியமையாதவர் என்கிற எண்ணம் ஏற்படும்வரை வேலை தருபவரிடம அதிகம் எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலும், நிர்வாகிகளுக்கு திறமையாளர்மீது தனிக்காதலே உண்டு. பணியில் சேர்க்கப்பட்டு, பயிற்சிக்காலம் (Probation) முடியும்முன்னர், தன் தகுதியை நிரூபிக்கிறவர் நிலை நிறுத்தப்படுகிறார். அவர் கேட்பது கிடைக்கிறது. சில இளைஞர்கள் ...
More...More...More...More...