Blog

/Blog

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 3 பத்தாம் வகுப்புக்கு உங்கள் குழந்தை வந்தாகி விட்டதா? இந்தக் கட்டுரையை உங்கள் குழந்தையே படிக்கட்டுமே! இதுவரை விதம்விதமான பாடப் பிரிவுகள் பற்றிய விரிவான அறிமுகம் கிடைத்தாகி விட்டது. தனியாகப் படித்தோ, டியூசனும் சேர்த்துப் படித்தோ உங்கள் விருப்பப் பாடத்தில் நல்ல பயிற்சியும் பெற்றாகிவிட்டது. இனிதான் உங்கள் வாழ்க்கையில் முதல் முக்கிய முடிவை எடுக்கப்போகிறீர்கள். டீன் ஏஜின் தொடக்கமிது. உங்கள் திறமை என்ன? உங்கள் கனவு என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 2 குழந்தை பிறந்துவிட்டது. நல்வாழ்த்துகள்! உங்கள் மகனோ, மகளோ, எதிர்கால டாக்டர் – என்ஜினியர் – என்று விதம்விதமாய்க் கனவுகளை வளர்த்துக் கொண்டிருப்பீர்கள். அது உங்கள் கனவில் மட்டும் சாத்தியமாகிற விஷயமில்லை. உங்கள் குழந்தை வளர்ந்த பிறகு, அதன் விருப்பம், கனவு ஆகியவற்றையும் சார்ந்தது. ஆனால் ஒன்று உங்கள் குழந்தை எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் சரி, அதில் சிகரம் எட்டும் விதமாக உருவாக்குவது, உங்கள் கைகளில் இருக்கிறது. ஒரு சாதாரணப் ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 1 கல்யாணமாகிக் கொஞ்ச காலம் ஆனதுமே எல்லோரும் கேட்பது, “ஏதும் விசேஷமா?” என்றுதான். விசேஷம் என்றால் தீபாவளி பொங்கலையா கேட்கிறார்கள்? குழந்தைப் பேறு பற்றித்தான் கேட்கிறார்கள். குழந்தையின் சிரிப்பும் பேச்சும் இருந்தால் தினமும் தீபாவளிதான். மகிழ்ச்சிப் பொங்கல்தான். உங்கள் குடும்ப வாரிசு குருத்து விடுகிற சம்பவம் மட்டுமல்ல, குழந்தைப்பேறு. அது, இந்த சமூகத்தோடு சம்பந்தப்பட்டது. கருவிலிருக்கும் குழந்தையை பெற்றோர் அவரவர் வாழ்க்கைமுறைக்கும் அணுகுமுறைக்கும் ஏற்ப பாதிக்கவோ, சோதிக்கவோ செய்யலாம் என்பது மருத்துவ ...

21. சவால்கள் சுகமானவை

சின்ன வயதில் தேர்வுக்குத் தயாரான நினைவு இருக்கிறதா? ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் விழுந்து விழுந்து படிக்கும்போதோ எழுதிப் பார்க்கும் போதோ மானசீகமாக தேர்வைத்தான் எழுதிக் கொண்டிருப்போம். எது தயாரிப்பு? எது தேர்வு என்று தெரியாத அளவு தீவிரம் மனதில் குடி கொண்டிருக்கும். தேர்வுக்கு முன்பே தேர்வெழுதும் நிமிஷங்களை மானசீகமாக வாழ்கிற மாணவன் வெற்றிக்கனியை எட்டிப் பறிப்பது போல, ஒரு தயாரிப்பின் உருவாக்க நிலையிலேயே அதன் மார்க்கெட்டிங் அம்சங்கள் பற்றியும் எந்த நிறுவனம் சிந்திக்கிறதோ அந்த நிறுவனம் வெற்றி ...

20. முயற்சித்துப் பார்க்கலாமே!

மார்க்கெட்டிங் என்ற சொல்லின் உட்பொருளை விரிவுபடுத்திக்கொண்டே போனால் அதன் அடிநாதம், நம்பிக்கையைப் பெறுவதுதான். இந்த உலகம் யாரை நம்புகிறது ஏன்ற கேள்விக்கு விடை தெரிந்தால் இதில் அடுத்தடுத்த படிகளை வெகு சுலபமாகக் கடந்து விடலாம். தனித்தன்மை உள்ளவர்களை உலகம் நம்புகிறது. தனித்தன்மையை யாரெல்லாம் வெளிப்படுத்துகிறார்களோ, அவர்களையெல்லாம் உலகம் நம்புகிறது. இந்தியச் சூழலில் ஒரு மனிதருக்கு ஒவ்வொரு வாரமும் 56 மணிநேரங்கள் வேலையில் கழிகின்றன. மேலும் 10 மணி நேரங்கள் வேலை சார்ந்த பயணங்களில் கழிகின்றன. இது தவிர ...

19.பொருளின் தேவையை உணர்த்துங்கள்

“ஏங்க! இது என்ன விலை?” என்ற கேள்வி ஒலிக்காத கடைகளே இல்லை. இது பேரம் பேசும் பொருட்டாகக் கேட்கப்படும் கேள்வியல்ல. ஒவ்வொருவரும் தன்னுடைய வாங்கும் சக்தியை எடைபோடவென கேட்கும் கேள்வி. சந்தைக்கு வந்த ஒரு பொருளின் விற்பனைக்கான சாத்தியக் கூறுகள் இந்தக் கேள்வியிலிருந்தே ஆரம்பமாகின்றன. ஒருவர் ஒரு பொருளையும் தன் வாழ்வையும் முதலில் ஒப்பிட்டுப் பார்க்கிறார். அந்தப் பொருள் தன் வாழ்வுக்குள் வந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்கிறார். பிறகு அதனை வாங்குவதற்கான சாத்தியக் கூறு பற்றி ...
More...More...More...More...