Blog

/Blog

18. சாதிக்க வாய்ப்புகள் எக்கச்சக்கம்

விழிப்புணர்வுடன் கூடிய துணிச்சலுக்கே விவேகம் என்று பெயர். மார்க்கெட்டிங் துறையில் இந்தக் கலவை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வெற்றி இருக்கிறது. மார்க்கெட்டிங் உலகின் வினோதமான உண்மை என்னவெனில் ஒரு வட்டாரத்தில் வெகு பிரபலமாக இருக்கும் பெயர், வேறொரு வட்டாரத்தில் அறிமுக நிலையில் மட்டுமே இருக்கும்.தான் தலையில் சுமக்கும் கிரீடங்கள் கண்ணுக்குத் தெரியாத பிரதேசத்தில் அறிமுக நிலையில் ஓர் அரசரை நிறுத்தினால் அவஸ்தைப்படுவாரா இல்லையா? பல தயாரிப்புகள் அப்படிதான் புதிய பிரதேசங்களில் கால்வைக்கும் போது, தங்கள் பழைய பெருமைகளை ...

17.மாற்றங்களே வெற்றியைத் தரும்

ஹார்லிக்ஸ் என்கிற ஆரோக்கிய பானம் கடந்து வந்திருக்கும் தூரம் பற்றி, கடந்த அத்தியாயத்தில்   பேசினோம். சில தயாரிப்புகள் தாமாகவே சந்தையில் கட்டமைத்துக் கொண்ட  அபிப்பராயங்களை தலை கீழாக மாற்றவேண்டிய  சூழ்நிலை ஏற்படும். அப்படியோர் அக்கினிப் பரிட்சையை ஹார்லிக்ஸ் கடந்து வந்திருக்கிறது. பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஹார்லிக்ஸ் என்றாலே உடல்நலம் குன்றியவர்களைக் காணப்போகும்போது வாங்கிப்போகும் பானம் என்று தான் எல்லோரும் சொல்வார்கள். வீட்டில் முதியவர்களுக்குத் தரும் ஆரோக்கிய பானம் என்ற நிலை மாறி, குழந்தைகளுக்குத் தரும் ஊட்டச்சத்து ...

16.போட்டிகளை எதிர்கொள்ளும் சாமர்த்தியம்

விரித்து வைக்கப்பட்ட சதுரங்கப் பலகையில் அணிவகுத்திருக்கும் காய்களின் அடுத்த கட்ட நகர்வு குறித்த திட்டமிடுதல் யுத்தமா? விளையாட்டா? தீர யோசித்தால் இரண்டும்தான் என்றே தோன்றும். அதை விளையாட்டாகவே நாம் நினைத்தாலும் கூட எதிர்க்காய்களின் வீழ்ச்சியில்தான் இன்னொரு தரப்பின் வெற்றி இருக்கிறது. போட்டிகளை எதிர்கொள்வதில் சதுரங்கம் விளையாட்டின் சாமர்த்தியம் மார்க்கெட்டிங் அலுவலருக்கு முக்கியம். போட்டித் தயாரிப்பின் பலங்களை அறிந்துகொள்வது போலவே தன்னுடைய தயாரிப்பைக் குறித்த உண்மைகளை எதிர்கொள்ளும் உரமும் முக்கியம். பலருக்கும் தங்கள் தயாரிப்பின் பலங்களைப் பேசுவது பிடிக்கும் ...

15.வெற்றிகரமான மார்க்கெட்டிங் உத்திகள்

இளம் மார்க்கெட்டிங் அலுவலர்கள் மத்தியில் எஸ்.எம்.எஸ். ஒன்று மின்னல் வேகத்தில் பரிமாறிக் கொள்ளப்படுகிறதாம். நமது நம்பிக்கை வாசகர் ஒருவர், என் எண்ணை எப்படியோ கண்டுபிடித்து எனக்கும் அதனை அனுப்பியிருந்தார். ஒரு பார்ட்டியில் அழகான இளம்பெண்ணை சந்திக்கும் ஒருவர், அந்தப் பெண்ணிடம் போய், “நான் பெரிய பணக்காரன். என்னைத் திருமணம் செய்துகொள்” என்று கேட்டால் அது டைரக்ட் மார்க்கெட்டிங். வேறொரு நண்பரை அனுப்பி, அந்த நண்பர் இவரை சுட்டிக்காட்டி, “இவர் பெரிய பணக்காரர். இவரைத் திருமணம் செய்து கொள்” ...

14.கற்பனைகள் விற்பனைக்கு….

ராமுவும் குமாரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அடிமட்ட ஊழியர்களாய் இளமையிலேயே பணியைத் தொடங்கி, ஒன்றாகவே தொழில் கற்று, பின்னர் இருவரும் சேர்ந்து தனியாக தொழில் தொடங்கினார்கள். சிறிய முதலீடு அளவில்லாத ஆர்வம். குமாருக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம். ராமுவுக்கு கனவுகள் அதிகம். குமாருக்கு கேள்விகள் அதிகம். நிறுவனம் வளரும்போதே முப்பதுகளின் இறுதியில் இருந்தனர் இருவரும். சொந்த வீடு கட்டிக் கொள்வது, இருவருக்குமான கனவு, தன் சின்னஞ்சிறிய குடும்பம் நாளை வளரும்போது, எவ்வளவு அறைகள் தேவைப்படும்? எந்தெந்த அறைகளுக்கு ...

13.விற்பதற்கு ஒன்றுமில்லை

உலகின் மிகச்சிறந்த விற்பனையாளர்கள் தங்களை விற்பனையாளர்கள் என்று கருதியே கிடையாது. ஏனெனில், தங்களிடம் விற்பதற்கு ஒன்றுமில்லை என்றே அவர்கள் கருதினார்கள். ஒரு பொருளுக்கான தேவை என்பது, வாடிக்கையாளர்களின் வாழ்வில் காணப்படும் ஓர் இடைவெளி. அந்த இடைவெளியை இட்டு நிரப்ப தரம் மிக்க பொருள் தம்மிடம் இருக்கிறது, அந்தத் தேவையை நிறைவேற்றும் சேவையே தனது வாழ்வின் இலட்சியம் என்று உறுதியாக நம்பியவர்கள், உலகின் உயர்ந்த விற்பனையாளர்கள் ஆனார்கள். சில அம்சங்களை தங்கள் இயல்பாகவே ஆக்கிக் கொள்ளும் போது வெற்றிப்படிகளில் ...
More...More...More...More...