நவராத்திரி கவிதைகள் 10 (7/10/19) (06.10.2019அன்று சென்னையில் நிகழ்ந்த “முப்பெருந் தேவியர்” எனும் தலைப்பிலான கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை) பட்டாக இருள்போர்த்து பராசக்தி நடக்கின்ற பண்டிகைதான் நவராத்திரி பக்கத்தில் கலைமகளும் அலைமகளும் கைகோர்த்து…

நவராத்திரி கவிதைகள் 9(6/10/19) வெண்ணிறப் பாற்கடல் மத்தியிலே வெண்ணிலவாக எழுந்தவளாம் தண்ணந் துழாயணி கேசவனின் திருமார் பினிலே அமர்ந்தவளாம் எண்ணிய யாவையும் நிகழ்ந்திடவே என்றும் இன்னருள் பொழிபவளாம் வண்ணத் திருமகள் திருவடிநம் வாசலில் வைத்தால்…

நவராத்திரி கவிதைகள் 8(6/10/19) காலை திருவாரூர் மாலை திருக்கடவூர் கோலங்கள் காணக் கிடைத்ததே – சீலமாய் அங்கே கமலாம்பா இங்கே அபிராமி மங்கலத்தே ஆழும் மனம் . யோகா சனத்தே இருந்தாள் கமலாம்பா ஏகாந்த…

நவராத்திரி கவிதைகள் 7(5/10/19) சூரியனை சந்திரனை சூடுகிற தோடாக்கி சுந்தரி நீ நிற்கிறாய் சூட்சுமங்கள் நிகழ வைத்து சாட்சியங்கள் இல்லாமல் சுடராக ஒளி பூக்கிறாய் காரியங்கள் அத்தனையும் கணப்பொழுதில் ஆக்கிவிட்டு கல் வடிவில் ஏன்…

நவராத்திரி கவிதைகள் 6(3/10/2019) புத்தகம் என்பது கோயிலென்றே -அதை[ புரட்டிடும் நொடியினில் நினைந்திடுக புத்தம் புதிய கலைகளெல்லாம் -அந்த பாரதி கொடைஎன மகிழ்ந்திடுக தத்துவ முட்டல்கள் வாதங்கள்- நிகழ் தர்க்கங்கள் தீர்ப்புகள் எல்லாமே சத்திய…

நவராத்திரி கவிதைகள் 4(2/10/19) தோகை விரித்திடும் பொன்மயில் அழகில் தென்படும் பசுமை அவள்கொடைதான் வாகைகள் சூடிட நீதியும் எழுகையில் வெறிகொண்டு தொடர்வது அவள் படைதான் யாகங்கள் யாவிலும் ஆடிடும் கனல்மிசை ஏகி நடப்பது அவள்…

நவராத்திரி கவிதைகள் 3(1/10/2019) வாலை இதழ்களில் வளரும் நகை-அது வானத்துப் பொய்கையில் மலரும் முகை பாலா விழிகளில் சுடரும் நகை- அதில் பரவும் நெருப்பினில் அழியும் பகை சூலத்தின் முனைகளில் ஒளிர்வதென்ன -விரல் சொடுக்கிடும்…

நவராத்திரி கவிதைகள் – 2(30-9-2019) இடைவெளியே இல்லா இவள் கருணை கிட்ட தடை – வெளியே இல்லை தனக்குள் – மடையை அடைக்கும் அகந்தை அடித்தே உடைத்தால் கிடைக்குமே சக்தி கனிவு . சிறகசைத்துப்…