Blog

/Blog

மரபின் மைந்தன் பதில்கள்

பெரியவர்களைப் பார்த்து வியக்கக்கூடாதென்று சங்க இலக்கியம் சொல்கிறதாமே? டி.சுரேஷ், மதுரை ஆமாம். சிறிய குணங்கள் உள்ளவர்களை இகழவே கூடாதென்றும் சொல்கிறது. மனிதர்களின் செயல்களைப் பாராட்டவோ இகழவோ செய்யலாம். மனிதர்களைப் பாராட்டுவதோ இகழ்வதோ அவசியமில்லை என்றுதான் இதைப் பொருள் கொள்ள வேண்லிம். “பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்கிறார் சங்கப்புலவர்.   நீங்கள் இசை ரசிகர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்குப் பிடிக்காத இசைக் கருவி எது? இளங்கோவன், தஞ்சை. ஜால்ரா!   இதுவரை நீங்கள் ...

மரபின் மைந்தன் பதில்கள்

ஒரு மனிதருக்கு குரு தேவையா? முத்துக்குமார், கணபதி குரு தேவை என்கிற தெளிவு ஏற்பட்டுவிட்ட மனிதருக்கு கண்டிப்பாகத் தேவை. தேவை ஏற்படும்போது தேடல் தானாக ஏற்படும். கண்ணும் கருத்துமாய், ஒரு வேலையைச் செய்தால்கூட அப்படிச் செய்யும் எல்லோர்க்கும் அதற்கான வெற்றியோ அங்கீகாரமோ கிடைத்துவிடுவதில்லை. இதுதான் தலைவிதியா? தனுஷ்கோடி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், ஸ்ரீவில்லிபுத்தூர். இதை விதி என்று ஒதுக்கிவிட முடியாது. எந்த ஒரு செயலுக்குமான அங்கீகாரத்திற்கென ஓர் அடிப்படை விதி உண்டு. செய்யப்படும் செயல், அதை செய்கிற ...

மரபின் மைந்தன் பதில்கள்

நேர நிர்வாகத்தை நீங்கள் யாரிடமிருந்து கற்றுக்கொண்டீர்கள்? கே.பைரவன், சென்னை – 24 நேரத்திடம் இருந்துதான். சில விஷயங்களைத் திட்டமிடுகிறோம். ஆனால் நடைமுறைப்படுத்துகையில் சொதப்பி விடுகிறோமே… ஏன்? ஆர்.சந்திரன், சிவகாசி திட்டமிடும்போது நம்முடைய கோணத்தில் மட்டுமே பார்க்கிறோம். நடைமுறைப் படுத்தும்போது அடுத்தவர்கள் கோணமும் முக்கியப் பங்கு வகிக்கையில் சில தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தை மற்றவர்களுடைய கோணத்திலிருந்தும் பார்த்து திட்டமிடத் தெரிந்தால் தவறுகள் நேராது. ...

அன்புள்ள ஆசிரியர்களே! – 7

கல்வித்துறைக்கு மிகவும் சவாலான சூழல் இது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் தொடங்கி, துணை வேந்தர் பொறுப்பு வரை விசித்திரமான சூழல்கள் விளைந்திருக்கின்றன. ஏற்படும் நிகழ்ச்சிகள் எதைக் காட்டுகின்றன? எங்கேயோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைத்தான். ஆனால், இந்த சூழலின் பாதிப்பு, எங்கேயோ தவறு என எண்ணத் தூண்டாமல் எல்லாமே தவறு என்பதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. சமூகப் பார்வையும் பொறுப்பும்மிக்க ஆசிரியச் சமூகம் தன் அத்தனை மன உறுதியையும் மலைபோல் திரட்டி நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரமிது. இந்த இக்கட்டான நிலையை ...

இந்த நாளில் அன்று

ஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889 1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான எக்ஸ்பொசிசன் யூனிவர்செல் என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு நுழைவாயில் வளைவாக ஈபிள் டவர் கட்டப்பட்டது. 1889-ம் வருடம் மார்ச் மாதம் இதே தேதியில் இதன் தொடக்கவிழா நடைபெற்று, மே 6-ந் தேதி திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி, 18,038 உருக்கு துண்டுகளை ...

அன்புள்ள ஆசிரியர்களே! -6

ஒரு மாணவனை மகத்தான மனிதனாய் ஆசிரியரே வடிவமைக்கிறார் என்பதை முன்னர் சொல்லியிருந்தேன். “அது சரிதான். ஆனால், இது இந்த சமூகத்திற்கு எப்படித் தெரியவரும்” என்றோர் ஆசிரியர் வினவினார். அடிப்படையில் அது ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் என்பதால் ஏராளமான ஆசிரியர்கள் குழுமி இருந்தனர். எல்லோருமே பதிலுக்குக் காத்திருந்தனர். “அந்த மகத்தான மனிதர்கள் மூலம்தான் தெரியவரும். அதாவது, அந்த மாணவன் மகத்தான மனிதனாய் வாழ்வில் வரும்போது, தன் ஆசிரியர்களைப் பற்றி அவசியம் சொல்வான். அதன்மூலம் சமூகம் அந்த ஆசிரியரின் மாண்புகளை அறியும்” ...
More...More...More...More...