சின்னஞ் சிறியவளை-ஒளிச் சுடராய்த் தெரிபவளை பென்னம் பெரியவனின்-இடப் பாகம் அமர்பவளை மின்னல் கொடியழகை-உண்ணா முலையாம் வடிவழகை உன்னும் பொழுதிலெலாம்-அவள் உள்ளே மலருகிறாள் கன்னங் கரியவளை-அருட் கனலாய் ஒளிர்பவளை இன்னும் புதியவளை-கண்கள் இமையா திருப்பவளை பொன்னில்…
19.07.2009 ல் ஈரோடு சி.கே.கே.அறக்கட்டளை ஏற்பாட்டில கவியரங்கம். “போனவர்கள் வந்தால்?” என்பது பொதுத்தலைப்பு. எனக்கான தலைப்பு :நேருபிரான். கவியரங்கத்தலைமை : “நாவுக்கரசர்” நெல்லை கண்ணன் அவர்கள். மண்ணைவிட்டுப் போய்விட்ட தலைவர் தம்மை மகத்துவத்தால் புகழ்படைத்த…
கோலாலம்பூரில் கண்ணதாசன் அறவாரியம் நிகழ்த்திய கம்பன் விழாவில் , “பேசாதன பேசினால்”என்ற தலைப்பில்,கவிஞர் இளந்தேவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது.”சூடாமணி பேசினால்” என்பது எனக்களிக்கப்பட்ட கிளைத்தலைப்பு. அந்தத் தலைப்பில் நான் வாசித்த கவிதை இது: சூடாமணி…
ஆசை கெடுப்பவளாம்-அவள் ஆட்டிப் படைப்பவளாம் பேசிச் சிரிப்பவளாம்-நல்ல பேரைக் கொடுப்பவளாம் ஈசனின் பாகத்திலே-அவள் என்றும் இருப்பவளாம் ஓசை கொடுப்பவளாம்-நெஞ்சின் உள்ளில் சிரிப்பவளாம் பாலைக் குடித்த பிள்ளை-வந்து பாடித் தொழுகையிலே ஆலங் குடித்தவனே-தங்கத் தாளங் கொடுத்தானாம்…
திருக்கடவூர் எனக்குத் தாய்வழிப்பாட்டனாரின் ஊர் . எங்கே இருந்தாலும் கனவிலும் நனவிலும் அந்த ஊரோ வீடோ மின்னிக் கொண்டிருக்கும் வைத்தீசுவரன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்னால் ஏடெடுத்துப் பார்த்த போது கடந்த பிறவியில் திருக்கடவூரில்…
கோலாலம்பூர் கம்பன் விழா மேடையில் இருந்த போது கிடைத்த செய்தி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மனைவியார் மரணமடைந்த செய்தி. விழாவில் முதல்நாள் பங்கேற்று அடுத்த சில மணிநேரங்களில் விமானம் ஏற இருந்த கவிப்பேரரசு…
அவள்தான் அவள்தான் அடைக்கலம் அருளே அவளின் படைக்கலம் கவலை முழுதும் எரித்திடும் கருணை அவளின் சூத்திரம் சாகச மனம்செய்யும் சேட்டைகளில் அவள் சாட்சி மாத்திரமே சாட்டை அடிகளும் வாட்டி வதைக்கையில் சாபல்யம் அவள்பதமே…
நேற்றொரு பாதையில் நடக்கவிட்டாள்-இன்று நான்செல வேறொரு திசையமைத்தாள் காற்றினில் இலைபோல் மிதக்கவிட்டாள்-இளங் காட்டுப்புறாவின் சிறகளித்தாள் ஆற்றின் வெள்ளங்கள் கடக்கவிட்டா ள்-அவள் அமிலக் கொதிப்புகள் குளிரவிட் டாள் ஊற்றெழும் வினைப்பயன் தூரவைத்தாள்-அந்த உத்தமி தன்னிழல் சேரவைத்தாள் சூரியன் போகிற வழிபார்த்தே -ஒரு…
வானங் கறுத்தது வானங் கறுத்தது வஞ்சி முகம் போலே-இடி கானமிசைத்தது கானமிசைத்தது காளிகுரல் போலே தேனுமினித்தது தேனுமினித்தது தேவியவள்போலே -இனி நானுந் தொலைந்திட நீயுந் தொலைந்திடு நங்கையருளாலே தேகத்தின் இச்சைகள் தூண்டி விடுவது தாயவள் மாயையன்றோ-உள்ளே நாகத்தின் வேகத்தில் ஓடிடும்…
மாத்திரைப் போதவள் முகந்தெரியும்-ஒரு மின்னற் பொழுதினில் மறைந்துவிடும் ஊர்த்துவம் ஆடிடும் சலங்கையொலி-மிக உற்றுக் கவனிக்கக் காதில்விழும் தீர்த்தக் கரைகள் எங்கணுமே -எங்கள் தேவியின் காலடி பதிந்திருக்கும் வார்த்தைகள் தேடிடும் வேளையிலே-அவள் வண்ணப்பொன் அதரங்கள் முணுமுணுக்கும் சந்நிதி சேர்கிற வேளையினில்-நெஞ்சின் சஞ்சலம் கண்களில் பொங்குகையில் என்கதி…




