கல்லையும் கனிவிக்கும் கடைவிழி பதிந்ததால் கவிபாடிச் சபையேறினேன் கள்ளென்ற போதையும் முள்ளென்ற வாதையும் காணாமல் ஆளாகினேன் நில்லென்று சொல்கையில் நின்றதால் குழிவிழல் நிகழாமல் கடந்தேகினேன் நிகழ்பவை யாதென்று நினைத்திடும் முன்னரே நன்மைகள் நிதங்காண்கிறேன் அல்லென்ற நிறத்தினாள் அம்பிகை கரத்தினால் அள்ளினாள்…
இருபது வருடங்களுக்கு முன்னால் கோவையில் ஓர் இலக்கியக் கூட்டம். உளறுவதே உரைப்பொழிவு என்று திட்டவட்டமாக நம்பிய ஒரு பெண்மணி மேடையில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார். அவையினருக்கு, அது உளறல் என உரைக்கத் தொடங்குவதற்கு முன்னரே முன்வரிசையிலிருந்து…
எழுதப் படாத என் கவிதையை ரசித்து தூரத்து மரங்கள் தலையசைத்தன. தட்டுப்படாத பிரம்பின் அசைவுக்குக் கட்டுப்படுகிற குழந்தைகள் போல ஒரே சீராகக் கிளைகள அசைந்தன. பசிய மரங்களின் பேச்சுக் குரலாய் சலசலத்தன தளிர்களும்…
கப்பல் வருகிற திசையைப் பார்த்துக் கண் விழித்திருக்கும் கலங்கரை விளக்கம். வெளிச்சக் கூக்குரல் வீசி வீசித் திரை கடல் முழுவதும் தேடிப் பார்க்கும். தொலைந்துபோன பிள்ளையைத் தேடும் தாயின் தவிப்பு அதிலே தெறிக்கும்.…
அருவிகள் நடந்த வழித்தடமிருக்கும் மலையின் மீது தழும்புகள் போல. கரும்பாறைகளில் கசிவின் தடயங்கள் இராணுவ வீரனின் கண்ணீர் போல. மெல்லிய கீற்றாய் பறவையின் பாடல் நேற்றைய கனவின் நிழலைப்போல. மெளனப் பூக்கள் மலர்கிற உச்சியில்…
நெற்றியில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளை ஒற்றியெடுக்கிற கைக்குட்டைகளாய் வேற்று முகமின்றி… எதிர்ப்படும் எவரையும் பற்றிக்க கொள்கிற பிஞ்சுவிரல்களாய் உயிரில் உறைந்த உண்மைகளெல்லாம் உருகி வழிந்ததில் பெருகும் வெள்ளமாய் பரிவு வறண்ட பாலைவனத்திடைப் பயணம்…
உன்… தோள்பை நிறையத் தங்கக்காசுகள். ஈதலுக்கானதோர் கர்வமில்லாமல் விரல்களை இழுத்து வலியப் பிரித்து எல்லார் கையிலும் திணித்துப் போகிறாய். கொடுப்பது உனக்குக் கடமை போலவும் வாங்கிக் கொளபவர் வள்ளல்கள் போலவும் பணிவும் பரிவும் பொங்கப்…
சிரிக்காதவர்கள், அல்லது சிரிப்பார்கள் என்று நாம் நினைக்காதவர்கள் சிரித்தால் வியப்பாகத்தான் இருக்கும். 90ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பேரறிஞர் ம.ரா.போ.குருசாமி அவர்களிடம் திருவள்ளுவரின் நகைச்சுவை பற்றிக் கேட்டபோது, ‘இருக்கு! ஆனா போலீஸ்காரர் சிரிச்ச மாதிரி இருக்கு!’ என்றார். நகைச்சுவை என்பது…
ஊர்கொடுத்த வரிகளை உதடுகளில் தாங்கியே உலகத்தைச் சுற்றி வந்தேன் உரங்கொடுத்த உணர்வினை வரங்கொடுத்த பலரையும் உள்ளத்தில் ஏற்றி நின்றேன் பேர்கொடுக்கும் பண்புகள் பிறர்தந்த பரிசோநீ பிறவியில் தந்த கொடையோ பழக்கத்தில் வந்தவர் நெருக்கத்தில் இணைந்திடும் பெற்றிமை…
கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.50,000 ரொக்கப் பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருதுகள் கடந்த ஆண்டு, திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கும், பாடகர் அமரர் டி,ஆர்.மகாலிங்கம் அவர்களின் புதல்வியும் பாடகியுமான…




