எனது கவிதைகள் நெற்றியில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளை ஒற்றியெடுக்கிற கைக்குட்டைகளாய் வேற்றுமுகமின்றி… எதிர்ப்படும் எவரையும் பற்றிக் கொள்கிற பிஞ்சுவிரல்களாய் உயிரில் உறைந்த உண்மைகளெல்லாம் உருகி வழிந்ததில் பெருகும் வெள்ளமாய் பரிவு வறண்ட பாலைவனத்திடைப்…
இதற்கு முன்னால் நான் இறைவனாயிருந்தேன். படைத்துக் குவிப்பதும், பராமரிப்பதும் துடைத்து முடிப்பதும் தொழில்களாயிருந்தன. நதிகள், கடல்கள், நிறையத் துப்பினேன். மண், கல் பிசைந்து மலைகள் படைத்தேன், புலர்வதும் மறைவதும் பொழுதுகளென்பதும், மலர்வதும் உதிர்வதும்…
எத்தனை இரவுகள் விடிந்தாலென்ன? எனது கனவுகள் கலைவதாயில்லை. இடைவெளியின்றி இந்த நீளத்தில் எவருக்கும் கனவுகள் வந்திருக்காது. பூமியில் முதன்முதல் புலர்ந்த விடியலைக் கண்கொண்டு பார்த்ததாய்த் தொடங்கிய கனவு யுகங்கள் கடந்த பின்வழிப் பயணமாய்…
புலரிபோல் வெளிச்சம் பொய்யாத் தோன்றிய பின்னிராப் போழ்தினில் பெய்தது பேய் மழை. கரிய முகிலின் கனவுகள் கலைந்து தரையில் விழுந்தன தண்ணீர்த் தாரைகள். உறக்கத்திலிருந்து உசுப்பப்பட்ட தாவரங்கள் தலைக்குக் குளித்தன. பறவைக் கூட்டில்…
போர்க் களத்திற்குப் போகும்போது கத்தியைப் போலவே கவசமும் முக்கியம். ஒருதுளி கூட இரக்கமில்லாமல் உயிர்கள் குடிக்கும் கத்தியை விடவும், காயம் செய்யும் கொள்கையில்லாமல் குத்துகள் தடுக்கும் கவசமாயிருக்கலாம். மொத்த விலைக்கு உயிர்களை வாங்கும்…
இழந்த உறவின் ஏக்கத் தழும்புகள் இதயத்துக்குள் இல்லாமலில்லை. எதிர்பாராத நொடிகளில் திடீரென எழுகிற வலியை எழுதுவதெப்படி? வருடிக் கொடுக்கிற விசிறிக் காற்று வந்து கொண்டே இருக்கிற போதும் வீசிப்போன தென்றலின் நினைவு…
சத்சங்கத்தின் சரண தியானத்துடன் புத்த பூர்ணிமா பொழுதின் துவக்கம். மூடிய இமைகள் மெதுவாய்த் திறந்ததும் வானக் கவிதையாய் வண்ண வெண்ணிலவு கிழக்கிலிருந்து கிளர்கிற ஞானமாய் தகதகக்கின்ற தங்க அற்புதம்; பூஜ்ய வடிவம், பூரண…
ஆகாயத்தின் அடுத்த பக்கம் என்ன நிறமாய் இருக்கக் கூடும்? வானம் பார்க்க வாய்க்கும் போதெலாம் பௌர்ணமிக் கடலாய்ப் பொங்குமிக் கேள்வி. சூரிய முதுகு சுட்டுச் சுட்டுக் காய்ந்த பழம்போல் கறுத்துக் கிடக்குமா? வெள்ளை…
வெற்று வானத்தில் வண்ணம் குழைக்கும் நெற்றித் திலகமாய் நிலவின் சித்திரம். பௌர்ணமிப் பொழுதில் பார்வையைக் குவித்து நிலவுடன் மனிதன் நின்றிடலாகுமா? வெண்ணிலா என்பது விண்ணையும் சேர்த்துதான். கண்கள் சிமிட்டும் நட்சத்திரங்களைக் கணக்கில் கொள்ளாத…
ஜல்லிக் கலவையின் சட்டியைக் கவிழ்த்த மல்லிகாதான் அதை முதலில் பார்த்தது. “ரோடு ரோலர்” ஏறி நகர்ந்ததும் பாதை தானாய்ப் போகத் தொடங்கிற்று. வீதி மெதுவாய்ப் புரண்டு புரண்டு வேறுதிசையில் விரையலாயிற்று. மேஸ்திரி…




