முன்பொரு காலத்தில் தமிழ்மொழி மீதான ஈடுபாட்டை வளர்ப்பதில் அரசியல் இயக்கங்களுக்கு பெரிய பங்கிருந்தது. 50 களிலும் 60 களிலும் தேசிய இயக்கங்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் இதில் ஒரு போட்டியே நிலவிற்று. அந்த நாட்களில் தேசிய…
நாளைக்கொரு நந்தவனம் போயிருந்தேன் வந்து சேராத நேற்றுகளுக்காக அங்கேதான் நான் காத்திருந்தேன். நாளையின் நந்தவனம் மிக அழகானது நிறம் நிறமாய்க் கற்பனைகள் கண்பறிக்கும் இடமது. நேற்றுகள் கொண்ட மரண தாக்கத்தைத் தணிக்கிற ஊற்று…
பழைய காலத்துப் போர்வாள் ஒன்றை மலர்க் கூடைக்குள் மறைந்திருந்தார்கள். வீரன் ஒருவன் வெறி கொண்டு சுழற்ற குருதிப்புனலில் குளித்து வந்திருக்கும். தேக்கு தேகங்கள் கிழித்த வாளுக்குப் பூக்களின் ஸ்பரிசம் புதிதாயிருக்கும். வாள்முனையிருந்து வருகிற…
சிறு சிறு டீஸ்பூன் அளவுகளிலேயே பருக வேண்டியதாய்ப் போனது வாழ்க்கை கரைதொடும் பிரவாகம் கண்களில் பட்டால் மிரண்டுபோகிற மனத்துடன் மனிதர்கள். கைகூப்பல்களில் தொடங்கும் அறிமுகம் தோள்தொடும் நட்பாய்த் தொடருவது அபூர்வம். தொலைதூரம் வரை…
ஒவ்வொரு நாளும் உன்னிடம் சொல்ல ஏதேனும் தகவல்கள் என்னிடமிருக்கும். வைகறைப் பூக்களின் வெண்பளித் துளிகளாய்ச் சில்லிடும் தகவல்கள் சேகரித்திருப்பேன். மலர்களைப் பற்றி, குழந்தைகள் பற்றி, கனவுகள் பற்றி, கவிதைகள் பற்றி, தலையணைக்குப் பஞ்சு தேடும்…
“சர் சர் சர்” என உச்சந் தலையில் சவரக் கத்தியின் சடுகுடு ஆட்டம்; காய்ச்சல் காலத்து நேர்த்திக் கடன்தான் முடியிறக்கத்தின் மூல காரணம்; கொத்துக் கொத்தாய் மடியில் விழுந்த கற்றை மயிர்களைக் கைகளில்…
உடைந்து போன உன் கனவுகளெல்லாம் சில்லுகளாக சிதறிக் கிடக்கும் தகவல் தெரிந்துதான் வந்திருக்கிறேன். ரணமாய் உறுத்தும் ரகசிய வலிகளைக் காட்டிவிடுகிற கண்கள் உனக்கு. பத்திய உணவு பிடிக்காத குழந்தையாய் அழுகையை அழுத்தும் உதடுகள் மீது…
சாயங்கால வெய்யிலாய் உன் முகம் தூங்கச் செல்லும் சூரியன்போல. அஸ்தமன நேரத்து அலுப்பிலும்கூட இதமான வெளிச்சம் இருக்கவே செய்யும். எனினும்… அடடா ஏதுனக்கு ஓய்வு? இன்னொரு பயணம் தொடங்கி விட்டாய் நீ. இன்னோ ருலகின்…
ஒன்று தொடங்கிப் பன்னிரண்டு வரையென் எண்ணங்களையே எண்களாக்கினேன். வட்டம் ஒன்றினுள் வரிசையாய்ப் பொருத்தினேன். ராகு காலங்களை ரத்து செய்து நல்ல நேரங்களை நிலை நிறுத்தினேன். கூரிய முனையில் பூக்கள் மலர்த்திய பார்வையின் கனிவை முட்களாக்கினேன்.…




