எழுதப் படாத என் கவிதையை ரசித்து தூரத்து மரங்கள் தலையசைத்தன. தட்டுப்படாத பிரம்பின் அசைவுக்குக் கட்டுப்படுகிற குழந்தைகள் போல ஒரே சீராகக் கிளைகள் அசைந்தன. பசிய மரங்களின் பேச்சுக் குரலாய் சலசலத்தன தளிர்களும் இலைகளும்.…

  அருவிகள் நடந்த வழித்டமிருக்கும் மலையின் மீது தழும்புகள் போல. கரும்பாறைகளின் கசிவின் தடயங்கள் இராணுவ வீரனின் கண்ணீர்போல. மெல்லிய கீற்றாய்ப் பறவையின் பாடல் நேற்றைய கனவின் நிழலைப் போல. மௌனப் பூக்கள் மலர்கிற…

  பிரிவு நேர்வதை உறுதி செய்கிற விருந்து நமக்கும் ஒருநாள் நிகழலாம். சிற்றுண்டித் தட்டை ஸ்பூனால் கிளறி வெற்றுப் பார்வையில் விநாடிகள் போகலாம். மௌனப் பாறைகள் மனதில் சுமந்து கண்ணீர் மறைத்துக் கதைகள் பேசலாம்.…

கல்லைப் புரட்டி நிமிர்த்திய நொடியில் கூரிய முனைகள் குத்தியிருக்கும். சில்லுகள் பட்டு விரல் கிழிந்திருக்கும் சிற்றுளி அழுத்தியே கை சிவந்திருக்கும்; கண்களில் கூடக் கல் தெறித்திருக்ம் கால்களில் பொடித்துகள் நரநரத்திருக்கும். இரவுநேரக் கனவுகள் முழுவதும்…

கெண்டைக் கால்கள் குறக்களி இழுக்கையில் எந்தக் கடவுளும் என்னுடன் இல்லை. ஒரே நேரத்தில் இரண்டு கால்களிலும் பரவிய வேதனை… பெரிய கொடுமை. பகல்நேரத்து ரயில் பயணத்தில் காலிப் பலகையில் கால்கள் நீட்டிய சயன எத்தனத்தில்…

வெள்ளைக் காகிதம் வைத்திருக்கிறேன் நான். ஆயிரமாயிரம் எழுத்துக்கள் எழுதியும் இன்னும் வெள்ளையாய் இருக்குதக் காகிதம். உயில்கள், கவிதைகள், ரகசியக் குறிப்புகள், மிரட்டல் கடிதங்கள்கூட எழுதினேன். இறந்து போனவர்கள் எதிர்ப்பட்டபோது எடுத்த பேட்டிகள் அதில்தானிருந்தன. எத்தனை…

என்றைக்கேனும் பசுக்களின் தாய்மை கன்றுகளோடு நின்றதுண்டா? கன்றுகளை வெறும் காரணமாக்கி அன்பைப் பொதுவாய் அளிப்பவை பசுக்கள்; வைக்கோல் கன்றின் வக்கிரம் பொறுத்து மடி சுரக்கின்ற மகத்துவம் போதுமே! உயிர்கள் எதனையும் உதறிவிடுகிற பயங்கர மூர்க்கம்…

என்னுடைய பந்தயம் எவரோடுமில்லை. சமாதானம் வாங்கத்தான் மைதானம் வருகிறேன். மோது களங்களில் மலர்ச்செடி நடுகிறேன். நீதி மொழிகளின் போதனை மேடையாய் சூது களங்களை மாற்றி விடுகிறேன். நடுவர்களேயில்லாத விளையாட்டில் இறங்குகிறேன். உதைபடும் பந்தை ஓடியெடுத்து…