உடல்சூட்டில் புயலடித்து மழைபொழிந்து போகும் கடல்சூட்டில் கதகதப்பாய் கட்டுமரம் வேகும் மடல்சூட்டில் ரோஜாவின் முன்னிதழ்கள் வாடும் தொடும்சூட்டில் தீப்பிடிக்கும் தண்ணிலவுக் காலம் யாரிட்ட விறகினிலோ யாகத்தின் நெருப்பு வேர்விட்ட மௌனங்கள் விளைகின்ற தகிப்பு போரிட்ட…
இன்று (25.04.2014) இரவு 7.30 மணியளவில் கோவை அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவிலில் “சகலமும் தருவாள் அபிராமி”என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறேன்.இரவு 9 மணிக்குள் நிகழ்ச்சி நிறைவு பெறும்…வாய்ப்பிருப்போர் வருகைதர வேண்டுகிறேன்..
“அண்ணா! உங்களை வாணிம்மா கூப்பிடறாங்க”! பல்லாண்டுகளுகளுக்கு முன்னர் ஒரு செப்டம்பர் 23ல் ஈஷா திருநாள் விழாப்பந்தலருகே ஈஷா பிரம்மச்சாரி ஒருவர் அழைத்தார். ஈஷா திருநாளில் “ஷாந்தி உத்ஸவ்”என்ற பெயரில் திருமதி வாணி ஜெயராம் அவர்களின்…
பேயைத்தா யென்பாய் பிடிசாம்பல் பூசுவாய் சேயைப்போய் உண்பாய் சிவக்கொழுந்தே-தீயைப்போய் ஏந்திக் களிப்பாய் எழிலார் அமுதிருக்க மாந்துவாய் நஞ்சை மகிழ்ந்து முப்புரங்கள் உன்சிரிப்பில் முற்றும் எரிந்ததாம் அப்புறமேன் மேரு வளைத்தாய்நீ-இப்படித்தான் பாசக் கயிறுபடப் பாய்ந்துதைத்தாய் இங்கெமது…
அவர்களிடமிருக்கிறது அக்கினிப்பரிட்சையின் கேள்வித்தாள் அவனிடமிருப்பதோ அலைமேல் மிதப்பதற்கான சூத்திரம்…. அவர்களிடமிருக்கிறது ஆயிரம் இரைப்பைகளின் அசுரப்பசி அவனிடமிருப்பதோ ஆதிரை உடைத்த அட்சய பாத்திரம்….. அவர்களிடமிருக்கிறது தேய்த்துத் தேய்ந்த அற்புத விளக்கு அவனிடமிருப்பதோ அந்த பூதத்தின் விருப்ப…
பத்தில் ஆனந்தம் புத்தகம் பயில்வது இருபதில் ஆனந்தம் காதலில் விழுவது முப்பதில் ஆனந்தம் கல்யாணம் ஆவது நாற்பதில் ஆனந்தம் நன்மைதீமை உணர்வது ஐம்பதில் ஆனந்தம் அனுபவங்கள் சேர்வது அறுபதில் ஆனந்தம் வலிபழகிப் போவது எழுபதில்…
(சற்று முன்னர் கோவை பாலிமர் சேனலில் வாசித்த கவிதை) புத்தம் புதிதாய் இன்னோர் ஆண்டு புறப்படத் தொடங்கும் வேளையிலே சித்திரைத் திங்கள் முதல்நாள் எனது வாழ்த்துகள் ஏற்பீர் நேயர்களே காலையில் எழுந்து கண்கள் திறந்ததும்…
கடந்த சில மாதங்களாகவே கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழாக்களில் பங்கேற்று வருகிறேன். மாணவர்களுக்குப் பேசுவது என்பதும் ஆண்டு விழாக்களில் பேசுவதும் வெவ்வேறு தன்மைகள் வாய்ந்தவை.மாணவர்கள் மட்டுமே நிறைந்த அவையில் அவர்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லலாம்.…
வாசல்தேடிக் கும்பிடுவோர் விரலகள் பாருங்கள்-அவர் விரல்களிலே என்ன கறை என்று தேடுங்கள் பேசும்பேச்சில் உண்மையுண்டா என்று கேளுங்கள்-ஒரு புதுவெளிச்சம் வரும்சுவடு தன்னைத் தேடுங்கள் ஆட்டம்காணும் ஆட்சியிங்கு தேவையில்லையே-வெறும் ஆள்பிடிக்கும் உத்திக்குநாம் அடிமையில்லையே ஓட்டு வாங்கி…
புகைப்படம்: சுகா (இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ஒவ்வொரு பிறந்தநாளிலும் என் வாழ்த்துக் கவிதை சில ஆண்டுகளாய் இணைய வெளியிலே உலா வரும்.இந்தமுறை அவர் பிறந்தநாளையொட்டி”ஆனந்தம் ஆரம்பம்” என்னுந் தலைப்பில் அவருடைய மணிவிழா கவியரங்கிலேயே வாழ்த்துக்…




