(சத்குரு தந்த கருத்தோட்டத்தின் அடிப்படையில் சூர்ய குண்டம் பிரதிஷ்டைக்காக எழுதிய பாடல் இது) பல்லவி தண்ணீரே தண்ணீரே பூமியின் உயிரே நீதானே மண்ணோடும் விண்ணோடும் ஆள்கிற அழகே நீதானே தாகம்தீர தாகம்தீர உன்னைக் குடித்தேனே தீர்த்தமென்று தேடிவந்து உன்னில்…
(நாகப்பாம்பு பற்றிய சத்குருவின் ஆங்கிலக் கவிதையை வாசித்தேன். அதைத் தமிழில் எழுத முயன்றேன்) பூமியிலே தவழ்ந்து போகும் நாகப்பாம்பே- நீ புற்றுக்குள்ளே ஒளிந்திருப்பாய் நாகப்பாம்பே மேனியெங்கும் கோடுகொண்டாய் நாகப்பாம்பே-நீ நீலநஞ்சை சேர்த்துவைத்தாய் நாகப்பாம்பே சாம்பசிவன்தலையிலேஏறும்…
சூர்ய குண்டம் பிரதிஷ்டையின்போது பாம்பு பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு விளக்கமளித்தார்.அப்போது நாகதோஷம் என்றால் என்ன என்றொரு கேள்வியை தியான அன்பர் ஒருவர் கேட்டார். அதற்கு மிகவும் புதிய பரிமாணம் ஒன்றில் சத்குரு வழங்கிய…
அழித்தலுக்கான கடவுளென்று சிவனைச் சொல்வார்கள்.அவன் ஆடுமிடம் சுடுகாடென்பார்கள்.அவனுக்கு தாய்தந்தை இருந்திருந்தால் இப்படி மயானத்தில் ஆட விட்டிருப்பார்களா என்று பாடியவர்கள்சிவனடியார்கள். அடியவர்களிலேயே சிவனுக்கு அம்மா முறை கொண்டாடியவர் காரைக்கால் அம்மையார்.கொண்டாடியவர் அவர் மட்டுமல்ல. சிவனும்தான். பேய்வடிவெடுத்து…
என் பால்ய நண்பன் அருண் அமெரிக்காவின் காதலன்.அவன் பாஸ்டனில் இருந்த நாட்களில் அவனுடன்காரில் டி.எம்.எஸ் பாடல்களைக் கேட்டுக் கொண்டே நயாகரா சென்றபோது அவன் சொன்னது இன்றும் நினைவிருக்கிறது.” America is an Idea”.மனித சமூகம்…
ராதே பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு சத்குரு வருவாரா என்கிற கேள்வி எல்லோருக்கும் உண்டு. ஊரிலிருந்தால் வருவார் என்ற பதில் வரும், “ஊரிலிருக்கிறாரா?”என்ற அடுத்த கேள்வி எழும். அவரையே நேரில் பார்த்து அழைப்பிதழ் தந்தால் உண்மை தெரிந்துவிடும்…
அற்புதரின் பிரதேசம் மௌனத்தால் ஆனது. அங்கெழும் அத்தனை ஓசைகளும் மௌனத்தின் மடியில். நிகழ்பவை. மண்ணில் மழைத்துளி விழுகிற ஓசையும், புல்லில் பனித்துளி படிகிற ஓசையும் துல்லியமாகக் கேட்கும் விதமாய் அங்கே நிலைகொண்டிருந்தது மௌனம். அற்புதரின்…
கோவையில் படைப்பாளர்கள் கலந்துகொண்டு தங்களுக்குள் பல்வேறு விஷயங்களை விவாதிக்கும் ஊஞ்சல் என்னும் அமர்வு ஒவ்வொரு வாரமும் முதல் செவ்வாயன்று நடைபெறும் 20 முதல் 25 பேர்கள் மட்டும் கலந்துரையாடி விருந்துண்டு விடைபெறுவார்கள். ஸ்ரீ கிருஷ்ணா…
மிகச்சமீபத்தில்,முகநூலில் ஒருவரி வாசித்தேன்.”மறைவாகக் கடவுள் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறார்?” இந்தக் கேள்வி ஏறக்குறைய எல்லோருக்குமே உண்டு. கடவுள் நமக்கு என்ன செய்வார் என்ற சுயநலக் கேள்வியில் தொடங்குகிற இந்தத் தேடல், கடவுள் என்ன…
அற்புதரின் வீட்டு முற்றத்தில் அதிர்ந்து கொண்டிருந்தன கால்சதங்கைகள்.பதங்களுக்கேற்ற அபிநயத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்தன பிஞ்சுப் பாதங்கள். அற்புதரின் பாகம்பிரியாள் விதைத்த விதைகளில் இதுவும் ஒன்று. வான்முகிலாய் மாறி அவர் வார்த்த அமுதத்தில் மலர்ந்திருந்தது அந்த ஆனந்த…




