காரிருள் நிறத்துக் காரிகை ஒருத்தி காலடி சலங்கை கேட்கும்-அவள் மூரி நிமிர்ந்து முதலடி வைத்ததும் மூளும் வினைத்தொடர் தீரும் கூரிய முனையினில் குருதியின் சிவப்பினில் குங்கும சூலம் ஒளிரும் மாரி அவள்வரும் வேளையில் தீநிறம் மேலைத் திசையினில் மலரும்  ஒன்பது…

 காலம் தனக்கென வைத்திருக்கின்றது கால காலமாய் உண்டியல் ஒன்று; முதன்முதல் வானம் உதிர்த்த விண்மீன், முதல்முகில் பொழிந்த மழையின் முதல்துளி வளைத்த தனுசு முறிந்த பொழுது தெறித்து விழுந்த தங்க மணிகள். கொடைக்கரம் இழுத்த மேகலையிருந்து நகைத்துச் சிதறிய நன்முத்துக்கள்; கந்தையில் மீந்த…

நீர்க்குடத் தளும்பலின் நிமிஷத் தெறிப்பாய் வேர்த்தடம் தெரியும் வேம்பின் நிழலாய் பூத்துச் சிரிக்கப் போகிற அரும்பாய் சேர்த்து வைத்த மயிலிறகுகளாய் உள்ளே சிலிர்க்கிற சிலுசிலுப்புக்குள் ஊடே வருபவை உன்ஞாபகங்கள்.. பிரியாப் பிரிவின் பார இலகுவை சரியாய்…

பத்திரம்  மிக்கது பத்திரம் அற்றது உன் கருணை   நித்தியம் மிக்கது நிச்சயம் அற்றது என்நிலைமை   பூவென மலர்வது பூகம்பம் அதிர்வது உன் கருணை   சுடரென ஒளிர்வது சருகென அலைவது என் நிலைமை…

கம்பிகள் நடுவே பாம்பாய் -அவள் கால்தொட நெளிகிற கூட்டம் செம்பொன் சிங்கா தனத்தே-எங்கள் சுந்தரி ஆள்கிற கோட்டம் நம்பி வருபவர்க்கு அன்னை-எங்கள் நாயகி மதுரை மீனாள் கும்பிடும் கைகளில் அவளே -துள்ளிக் கொஞ்சிடும் குழந்தையென்றானாள்…

அலைவீச்சு

September 27, 2010 1

(26.09.2010) மதுரையில் ஈஷாவின் மகாசத்சங்கம். அருகே அழைத்த சத்குரு வாஞ்சையுடன் நலம் வினவி மிகுந்த கனிவுடன் தோள்களில் தட்டிய நொடியில் உள்ளே எதுவோ உடைய, அந்தத் தாக்கத்தில் எழுந்த கவிதை இது:                 தோளில்…

சொல்லாத வார்த்தைரொம்ப சூடு -அதை எல்லோரும் சுமப்பதில்லை பாரு நில்லாத ஆற்றுத்தண்ணீர் போலே-இங்கே நீளுதடி நீளுதடி வாழ்வு ஆசையின்னும் கோபமுன்னும் ஆட்டம்-இது அத்தனையும் வெத்துப்பனி மூட்டம் பேசுறதை ஒருநிமிஷம் எண்ணு-எல்லாம் மீசையோட ஒட்டிக்கிட்ட மண்ணு…

சிப்பிகள் கிடக்கிற கரையோரம் -நான் சிரத்தையில்லாமல் நடக்கின்றேன் உப்புக் கடலலை கூச்சலிட்டும்- நான் ஒன்றும் சொல்லாமல் கடக்கின்றேன் கலங்கரை விளக்குகள் கப்பலெல்லாம்-என் கண்களில் பட்டிடப் போவதில்லை பலமுறை வருடிய ஓடங்களை-நான் பார்த்தினி ஏதும் ஆவதில்லை…

தூரிகைக் கொடியில் துளிர்க்கும் தளிர்களாய் பேரறியாத நிறங்களினுலகில் என்ன நிறமாய் இப்போதிருக்கிறேன்? ஒற்றைப் புள்ளியில் உராய்ந்த சூரியன் மற்றொரு புள்ளியாய் சுருங்கிய பொழுதில் என்னுள் எழுந்த நிலவை என்செய? வாங்கி வைத்திருந்த வானைச் சுருட்டி…

பல வருடங்களுக்கு முன்,நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்திற்காக திருச்சியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கினேன்.அறைக்குள் நுழைந்தபோது காதுகளில் வாக்மென் ஒலித்துக் கொண்டிருந்தது.தொலைக்காட்சியை இயக்கியபோது,டயானாவின் இறுதி ஊர்வலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. வாக்மென்னை அணைப்பதற்கு பதில் தொலைக்காட்சி…