வீசிய பந்தின் விசைபோலே வெய்யில் நாளின் திசைபோலே ஏசிய வார்த்தையின் வலிபோலே எழுதி முடியாக் கவிபோலே பேசிட முடியாத் தீவிரமாய் பேறுகாலத்தின் ஆத்திரமாய் ஓசை எழுப்பும் உள்மனமே உண்மைகள் தூங்கட்டும் உன்னுடனே எல்லாச் சொல்லையும்…
சித்திர மாடத்தின் மேலிருந்து-அந்தச்சீதைதன் தாய்மடி பார்த்திருந்தாள்எத்தனை நெஞ்சுரம் காகுத்தனே-உன்அத்தை மடியினில் நடந்துவந்தாய் கல்லாய்க் கிடந்த அகலிகையும்-உன்கால்துகள் பட்டதும் பெண்ணானாள்முள்ளாய் முளைத்த தாடகையும்-உன்மோதுகணை பட்டேன் மண்ணானாள்? நாத மொழிகேட்ட சபரியுமே-உனைநேர்கொண்டு பார்த்ததில் வீடுபெற்றாள்காதல் மொழிசொன்ன சூர்ப்பநகை-உன்கண்களில்…
திருவடித் தாமரை மலர்ந்தது தேன்துளி என்னுள் நிறைந்தது குருவடிவாக அருளுருவாக குளிர்மழை இங்கு பொழிந்தது-என் கொடும்வினை எல்லாம் கரைந்தது சுடுமணல் வழியினில் தினம்நடந்தேன்-ஒரு தருநிழல் தேடியே தினம்நடந்தேன் திருமுகம் அறிந்ததும் மனம் குளிர்ந்தேன்-உன்…
கீற்று நிலாவினில் பாலினை ஊற்றிக் கிறுக்கன் தலைசுமந்தான் ஊற்றி விடுமென்ற அக்கறை இன்றி ஊர்த்துவம் ஆடுகிறான் ஈற்றினை அறியா வான்வெளியெங்கும் ஈசன் ஆடுகிறான் போற்றி யிசைக்கிற விண்மீன் திரள்களின் பாட்டினுக் காடுகிறான் நாதம் இவனது…
பைரவி வந்தாள் பைரவி வந்தாள் பத்துத் திசையதிர ஷங்கரி வந்தாள் ஷாமளை வந்தாள் எங்கள் உளம் குளிர கண்ணொரு மூன்றிலும் மின்னும் நெருப்புடன் அன்னை உருவெடுத்தாள் எண்ணிய காரியம் யாவும் நடத்திட இங்கு குடிபுகுந்தாள்…
நீவந்த நாளின்றுதானோ-இதை நீசொல்லி நான்நம்புவேனோ வான்வந்த நாள்தானே நீவந்தநாள்-மலரில் தேன்வந்த நாள்தானே உன் பிறந்தநாள் ஆதார சுருதிக்கு ஆண்டேது நாளேது அய்யாநீ அதுபோன்ற சங்கீதமே பேதங்கள் ஏதொன்றும் பாராத திருவேநீ பிரபஞ்சங்கள் முழுமைக்கும் பூபாளமே…
முன்பொரு பிறவியில் முகம்பார்த்தேன் -உன் மோன நெருப்பிலென் வினை தீர்த்தேன் பின்னரும் பிறவிப் பிணிசேர்த்தேன் -உன் பொன்னிழல் சேர்ந்திடும் வழிகேட்டேன் கருவூர் குடிபுகும் உயிருக்கெல்லாம்- நல்ல கதிதர உனக்குத் திருவுளமோ நெரூரில் அமர்ந்த நல்லொளியே-…
சொல்லால் கனத்தமனம் சூனியத்தால் இன்பமுறும் நில்லா நினைவுகள் நின்றுவிடும்-பொல்லாக் குரங்கு மனமிதுவுங் குன்றேறி நிற்கும் விரல்பறிக்கும் ஞானக் கனி. சச்சரவுக் கிச்சையாய் சாடுகிற சாட்டையும் உச்சரிக்கும் சொல்லென் றுணர்வோமே-நச்சரிக்கும் வார்த்தைகளைச் சாடி வரிசையிலே வாவென்று…
1.குமரித் தெய்வம் சின்னஞ் சிறுமியிவள்- நம் செல்வக் குமரியிவள் என்னில் நிறைந்திருக்கும்-ஓர் இன்பக் கவிதையிவள் தன்னந் தனிமையிவள்-உயர் தாய்மைக் கனிவு இவள் பொன்னில் எழுதிவைத்த -ஒரு புன்னகை ஜோதியிவள் வாலைக்குமரியிவள்- நம் வாழ்வின் பெருமையிவள்…
15.10.2009 திருக்கடையூர் அதே முகம்……அதேசுகம்…..அன்று தொலைந்ததே அதே இதம் நெஞ்சில் நிறைந்ததே அவள் பதம் பிறவி பலவாகப் பார்த்த முகம் -என்கனவில் பலநேரம் பூத்த முகம்மறந்து கிடந்தாலும் தேடும் முகம்-ஒருமறுமை இல்லாமல் சாடும் முகம்…




