சொல்லால் கனத்தமனம் சூனியத்தால் இன்பமுறும் நில்லா நினைவுகள் நின்றுவிடும்-பொல்லாக் குரங்கு மனமிதுவுங் குன்றேறி நிற்கும் விரல்பறிக்கும் ஞானக் கனி. சச்சரவுக் கிச்சையாய் சாடுகிற சாட்டையும் உச்சரிக்கும் சொல்லென் றுணர்வோமே-நச்சரிக்கும் வார்த்தைகளைச் சாடி வரிசையிலே வாவென்று…

1.குமரித் தெய்வம் சின்னஞ் சிறுமியிவள்- நம் செல்வக் குமரியிவள் என்னில் நிறைந்திருக்கும்-ஓர் இன்பக் கவிதையிவள் தன்னந் தனிமையிவள்-உயர் தாய்மைக் கனிவு இவள் பொன்னில் எழுதிவைத்த -ஒரு புன்னகை ஜோதியிவள் வாலைக்குமரியிவள்- நம் வாழ்வின் பெருமையிவள்…

15.10.2009 திருக்கடையூர் அதே முகம்……அதேசுகம்…..அன்று தொலைந்ததே அதே இதம் நெஞ்சில் நிறைந்ததே அவள் பதம் பிறவி பலவாகப் பார்த்த முகம் -என்கனவில் பலநேரம் பூத்த முகம்மறந்து கிடந்தாலும் தேடும் முகம்-ஒருமறுமை இல்லாமல் சாடும் முகம்…

2009 அக்டோபர் 15. திருக்கடையூரை நெருங்க நெருங்க அதிகாலை வேளையில் செந்நிலவாய் எழுந்தது சூரியன்.அங்கேயே நிகழ்ந்தது அபிராமி தரிசனம் புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை…. கதிரை நிலவாக்கினாள் அதிரும் மனம் ஓய அருளும் அபிராமி…

நீரலையின் சாட்டைகொண்டு ஆடுகிறாள் அன்னை நேரவரும் யாவரையும் சாடுகிறாள் அன்னை பேரொலியின் தாளமிட்டுப் பாடுகிறாள் அன்னை பாய்ந்துவந்து எனையணைக்கத் தேடுகிறாள் அன்னை ஆடுகிறாள் அன்னை-அவள் -தேடுகிறாள் என்னை வான்கருணை அருவியாக வந்து இறங்கும்-அதில் ஊன்நனைந்து…

காசிநகரில் கங்கை வீசும் நதியலைகள் பேசும் மொழிநமசி வாயம் கீசுகீசெனவே பூசலிடுங்கிளிகள் பாஷை அதுநமசி வாயம் ஆசைவிடும்தருணம் ஆகிவரும் மரணம் வாசல் வரும்நமசி வாயம் பாசம் விடும்மனதும் பாரம் சுடும்நொடியில் ஈசன் குரல்நமசி வாயம்…

நண்பர் சுகா எழுதிய கட்டுரை ஒன்றைக் குழுமத்தில் படித்த நண்பர் துகாராம், சோடா தமிழர் பானமா என்ற கேள்வியை எழுப்பினார்.அது தமிழர் பானமே, கோலி சோடாவில் அடைபட்டிருப்பது தமிழர் மானமே என்று நிறுவி நான்…

என் வீட்டுக்காரி தீவிரமான மாரியம்மன் பக்தை சார்!” என்னைப்பார்க்காமல், டைமண்ட் ஹோட்டல் அறையிலிருந்த நிலைக்கண்ணாடியைப் பார்த்தபடியே மெல்லிய குரலில் சொன்னார் நண்பர். நிலைக்கண்ணாடி மேசையில் வைக்கப்பட்டிருந்த பையில்தான் அவருடைய மனைவியின் அஸ்தி இருந்தது.காசி டைமண்ட்…

எத்தனையோ குளறுபடிகளுக்கு நடுவிலும் கவியரசு கண்ணதாசன் நினைவு மன்றம் முறையாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது.கவியரங்கிற்குக் கோமகனை அழைத்து வந்தவரும், கண்ணதாசன் விழாக்களுக்கு தாராளமாக செலவுசெய்தவரும்/செய்பவருமான அந்த குறுந்தாடிக்காரர் கிருஷ்ணகுமார், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வலம்புரி ஜான் அவர்களை…

கண்ணதாசன் மறைவுக்காக நடந்த இரங்கல் கூட்டத்தில்,”கண்ணதாசனின் வரிகளுக்கு இதுவரை காணாத பொருள்களையெல்லாம் அவருடைய ரசிகர்கள் காண்பார்கள் “என்று பேசினாராம் ஜெயகாந்தன்.உண்மைதான்.கவிஞரின் வரிகளுக்கு புதிய நயங்களையும் விளக்கங்களையும் தேடித் தேடிச் சொல்லத்தஒடங்கியவர்கள் பலர்.அவர்களில் நானும் ஒருவன்.…