எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் எல்லா வசதிகளும். ஆனால், தொட்டுப் பேசும் உரிமையில் பலருக்கும் தோழமை வாய்ப்பதில்லை. தோள் தொட்டுப் பேசுவது உறவுக்கும் உரிமைக்கும் அடையாளம். பரிவுக்கும், நட்புக்கும் அடையாளம். தோழனே! உனது தோள்களைத் தொட்டு நான்,…

திருவாரூர் அம்மானை ஒன்றில் இப்படி ஒரு பாடல் உண்டு. “ஈசன் பசுவாகி ஏமன் ஒரு கன்றாகி வீசுபுகழ் ஆருரின் வீதி வந்தார் அம்மானை” என்றொருத்தி பாடுகிறாள். பசுவும் கன்றுமாக வந்தார்கள் என்றால் அந்தப் பசுமாடு.…

சமயங்கள், மனித உயிரை உய்விப்பதற்கான ஏற்பாடுகள். ஆனால் காலப்போக்கில் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்த்துகிற அற்புதங்களை அடிப்படையாகக் கொண்டு மதங்களையும் மகான்களையும் மதிப்பிடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. யோகப் பயிற்சியை ஒருவர் கையாள்கிறபோது அந்தக் கலையில் ஏற்படுகின்ற…

அறிவுக்கான அளவுகோல்கள் கால மாற்றத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். முறை சார்ந்த கல்வி முறை சாறாக் கல்வி என்றெல்லாம் பலவகையாக இன்றைய சமூகம் பேசுகின்றது. ஒரு மனிதனின் மிகப் பெரிய பலம் அவனுக்கு இருக்கிற இயல்பான…

அறிவு என்கிற சொல்லை திருவள்ளுவர் எங்கெல்லாம் கையாள்கிறார் என்று பார்த்து அந்த குறட்பாக்களைக் கொண்டு வந்து கண்ணப்ப நாயனார் வரலாற்றோடு பொருத்திப் பார்த்தால் அத்தனையும் ஆங்கே ஆழகாகப் பொருந்துகின்றன. எடுத்துக்காட்டாக சிலவற்றை நாம் பார்க்கலாம்.…

நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பரமனுக்கு இப்படி ஒரு துன்பம் நிகழ்ந்துவிட்டதே. என் உயிரினும் இனிய இறைவனுக்கு என்ன ஊறு நேர்ந்ததோ என்றெல்லாம் அவர் பதறுகிறார். “பாவியேன் கண்ட வண்ணம் பரமானார்க்கு அடுத்ததென்னோ ஆவியேன்…

பொத்தப்பி என்கிற நாட்டில் வேடுவர் குலத்திற்கு தலைவராக நாகன் என்றொரு வேடுவ மன்னன் இருந்தான். அவனுடைய மனைவியின் பெயர் தத்தை. குழந்தைப் பேறு இல்லாமல் முருகப் பெருமானிடம் வேண்டினார்கள். ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.…

மொத்தப் பிரபஞ்சங்கள் எத்தனையோ அத்தனைக்கும் மூச்சாகி நின்றவளே வாழ்க பித்தனின் நடனத்தைப் பக்கத் திருந்தபடி பார்க்கின்ற பேரழகி வாழ்க வித்தைகள் அனைத்துக்கும் வித்தாகி நிற்கின்ற வித்தக சக்தியே வாழ்க யுத்தங்கள் நிகழ்த்திடும் இடதுகால் சிறுவிரல்…

  உருவா அருவா அருவுருவா உண்மையில் யார்தான் பராசக்தி? அருளா சினமா ஆதரவா அண்மையில் நிற்பாள் பராசக்தி; ஒருவாய் உணவின் ஊட்டமுடன் ஒவ்வாமையும்தான் பராசக்தி; இருளா ஒளியா இடைநிழலா எல்லாம் எல்லாம் பராசக்தி! வேம்பின் கொழுந்தாய் முளைவிடுவாள் வீசும் காற்றாய் வருடிடுவாள் தேம்பும் மகவாய் தெரிந்திடுவாள் தேசுடைக் கதிராய் எழுந்திடுவாள் பாம்பின் படத்தினில் பீடமிடும் பராபரை வடிவுகள் கொஞ்சமல்ல; சாம்ப சதாசிவன் இறைஞ்சுகிற சாம்பவி எங்கள் பராசக்தி! திரிபுரை கரத்தினில் திரிசூலம் திருமுகம் தன்னில் திரிநேத்ரம் பரிபுரை படைத்தாள் முக்காலம் பரிந்தருள் செய்தால் பொற்காலம் எரிதழல் அவளது வடிவாகும் எண்திசை அவளின் உருவாகும் சரிவுகள் நீங்கி நிமிர வைப்பாள்…

செவ்வண்ணக் கமலமென சிவந்திருக்கும் வதனம் ஸ்ரீமாயன் கழல்வருடி சிவந்த கரக் கமலம் எவ்வண்ணம் விழுந்தாலும் ஏற்றிவிடும் அபயம் எம்மன்னை மஹாலக்ஷ்மி எழில்பதங்கள் சரணம்! கருணைக்கே ஊற்றுக்கண் கமலைமலர்க் கண்கள் கவலையெலாம் துடைக்கிற களிநகையோ மின்னல்…