பன்முகப் பண்புகள் என்னும் ஈடிலாத தன்மையின் பிரம்மாண்டமாகவும் எல்லைகளைக் கடந்த வியாபகமாகவும் சிவன் விளங்குவதை சிந்தித்து வியக்கும் விதமாய் திருவெம்பாவையின் பத்தாம் பாடல் அமைந்துள்ளது. எல்லோருக்கும் எல்லாமாக நிற்கும் சிவனை எவ்வாறு வரையறுப்பது என்னும்…

எது பழையது எது புதியது என்கிற கேள்வியை உன்னிப்பாகப் பார்த்தால் ஒன்று நமக்குத் தோன்றும்.காலம் எத்தனை பழையது! ஆனால் எப்போதும் புதியது. காலமே அப்படியென்றால், காலகாலன். இன்னும் பழையவன்.என்றும் புதியவன். பலரிடம், “எது உங்கள்…

திருவெம்பாவையில் சூட்சுமத் தன்மை மிக்க பாடல்களில் இதுவும் ஒன்று.பறவைகள் சிலம்பும் சங்கம் இயம்பும் என்கிற நயங்களைத் தாண்டி வருகையில் பறவைகள் சிலம்பும் ஒலியும் சங்கம் இயம்பும் ஒலியும் கடந்துபரஞ்சோதியின் ஒளி எழுகிறது. ஒளிக்கும் ஒலிக்குமான…

தோழிகளிடையே ஆன உரையாடல் என்னும் எல்லை கடந்து சிந்திக்கும் போத,திருவெம்பாவையின் சூட்சுமப் பரிமாணங்கள் பலவும் புரிபடுகின்றன. “நாளை எங்களை எழுப்புவேன் என நேற்று சொல்லிச் சென்ற தோழியசின்னும் விடியவில்லையா?நாணமேயின்றி அச்சொல் எந்தத் திசையில் தொலைந்ததுவோ?…

வெளிப்படையாய் இந்தப் பாடலுக்குத் தென்படும் உரை,ஒரு பெண்ணைப் பழிப்பதுபோல் உள்ளது. திருமாலும் நான்முகனும் அறியா சிவனை நாம் அறிவோம் என்று இனிய சொற்களால் பொய்யுரைத்த பெண்ணே !கதவைத்திற!அண்ணும் விண்ணும் அறியவொண்ணா மகாதேவன் நம்மை ஆட்கொண்டு…

திருவெம்பாவையின் நான்காம் பாடல் இன்னொரு பெண் வீட்டு வாசலில் தொடங்குகிறது. அவளும் முத்தனைய சிரிப்பழகிதான். ஒளிவீசும் நித்திலமோ ,உறங்குவதால்,ஒளிந்திருக்கும் நித்திலமோ–ஒண் நித்தில நகையாய் இன்னும் உனக்கு விடியவில்லையா என அழைக்கிறார்கள். உடனே அவள் “வண்ணக்…

திருவெம்பாவையின் மூன்றாம் பாடலை முந்தைய இரண்டு பாடல்களின் தொடர்ச்சியாகக் காண முற்படுவோமேயானால்,வழக்கமாகப் பொருள் கொள்ளும் விதத்திலிருந்து சற்றே மாறுபட்ட சிந்தனை ஒன்று தோன்றுகிறது.வீட்டினுள் உறங்குகிற பெண்ணை கடைதிறவாய் என்று வெளியே உறங்கும் பெண்கள் கேட்க,அவர்களை…

ஈஷாவில் சூன்ய தியான தீட்சை பெற்ற புதிது.மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சென்றிருந்தேன். தரிசனத்துக்குப் பின்னர் ஓர் ஓரமாக தியானத்தில் அமர்ந்தேன். சில நிமிடங்கள் சென்றிருக்கும். யாரோ ஒருவர் என்னை உலுக்கி எழுப்பினார்.நான் உறங்குவதாய் எண்ணி…

மார்கழியின் விடியற்காலைகளை பாவையர் கோலங்களும் பாவை பாடல்களும் புலர்வித்த காலங்கள் உண்டு..பெண்கள் கூடி பெருமான் பெருமை பேசி நீராடப் போவதாய் பாவை பாடல்களின் கட்டமைப்பு. இது சங்க இலக்கியங்களின் “தைந்நீராடல்” மரபின் நீட்சி என்பார்கள்.…

இன்னொரு மனிதன் எழுதிய சீலையில் உன் தூரிகையை ஓட்டலாகாது; மௌனம் பரப்பிய மேடையில் ஏறி யவன சாஸ்திரம் இயம்பலாமா நீ; புராதனசிலைகளின் பக்கவாட்டில் கிறுக்குவதி லேயா கிளர்ச்சி உனக்கு? நீவிழிக் கும் வரை நிதானித்…