பாம்பின் கண்களில் பதட்டம் பார்க்கையில் பச்சைத் தவளையின் ஆறுதல் மொழியாய் தீப்பற்றும் உன் தீவிரத்தின் முன் முழக்கங்கள் முயன்று முனகவே செய்கிறேன்:  காட்டு நெருப்பு கலைத்த கலவியில் உக்கிரம் பரப்பி ஓடும் விலங்காய் எல்லாத் திசையிலும்…

  மார்கழி மாதத்தின் மகத்துவங்களில் முக்கியமானவை அறிவால் சிவமேயாகிய மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், சூடிக்கொடுத்த  சுடர்க்கொடியாம் ஆண்டாள் பாடிக் கொடுத்த திருப்பாவையும். அவற்றின் ஆன்மத் தோய்வும் பக்தி பாவமும் அளவிட முடியா அற்புதங்கள்.  இந்து சமயத்திற்கு…

ஆதியோகி வந்தமர்ந்த ஆலயம்- நம் ஞானயோகி ஆக்கிவைத்த ஆலயம் ஜோதியாக நின்றொளிரும் ஆலயம்- இதைத் தேடிவந்து சேர்பவர்க்கு ஆனந்தம் யோகமென்னும் கொடைநமக்குத் தந்தவன்-இந்த தேகமென்றால் என்னவென்று சொன்னவன் ஆகமங்கள் தாண்டியாடும் தாண்டவன் -இந்த ஆதியோகி…

தேனமுதம் அலைவீசும் தெய்வீகப் பாற்கடலில் வானமுதின் உடன்பிறப்பாய் வந்தாய்- வானவரின் குலம்முழுதும் வாழவைக்கும் மாலவனின் வண்ணமணி மார்பினிலே நின்றாய் சீதமதி விழிபதித்து செல்வவளம் நீகொடுத்து சோதியெனப் புதுவெளிச்சம் தருவாய் வேதமுந்தன் வழியாக வெண்ணிலவு குடையாக…

தள்ளிநிற்கும் படித்துறையைத் தாவித்தொடும் கங்கைநதி தாளமிடப் பாடுபவளாம் அள்ளிவைத்த பூக்களிடை உள்ளுறையும் விஸ்வேசன் உள்ளமெங்கும் ஆடுபவளாம் கள்ளமுற்ற நெஞ்சினையும் வெண்பளிங்காய் மாற்றியதில் கோயில்கொண்டு வாழுபவளாம் விள்ளலன்னம் கையில்விழ விம்மிவிம்மி நெஞ்சமழ வினைதீர்க்கும் அன்னையவளாம் பேசுமொழி…

காலைவரை காத்திருக்கத் தேவையில்லையே-அவள் கண்ணசைத்தால் காலைமாலை ஏதுமில்லையே நீலச்சுடர் தோன்றியபின் வானமில்லையே-அவள் நினைத்தபின்னே தடுப்பவர்கள் யாருமில்லையே சொந்தமென்னும் பகடைகளை உருட்டச் சொல்லுவாள்-அதில் சோரம்போன காய்களையும் ஒதுக்கச் சொல்லுவாள் பந்தமென்னும் கம்பளத்தைப் புரட்டச் சொல்லுவாள்-இனி படுக்க…

திக்குகள் எட்டிலும் தெரிந்திருப்பாள்-என் திகைப்பையும் தெளிவையும் கணக்கெடுப்பாள் பக்கத்தில் நின்று பரிகசிப்பாள்-என் பார்வையில் படாமலும் ஒளிந்திருப்பாள் நிர்க்கதியோ என்று கலங்குகையில்-அந்த நாயகி நேர்பட நின்றிருப்பாள் எக்கணம் எவ்விதம் நகருமென்றே -அவள் என்றோ எழுதி முடித்திருப்பாள்…

நாவல் பழநிறப் பட்டுடுத்தி-மின்னும் நகைகள் அளவாய் அணிந்தபடி காவல் புரிந்திட வருபவள்போல்-அன்னை காட்சி அடிக்கடி கொடுக்கின்றாள் ஆவல் வளர்க்கும் காட்சியிதும்-என் அரும்புப் பருவத்தில் தொடங்கியது வேவு பார்க்க வந்தவள்போல் -எங்கள் வீட்டு முற்றத்தை வலம்வருவாள்…

அயன்விரல் பிடித்தன்று அரிசியில் வரைந்தாள் அரிநமோத்து சிந்தம் கயல்விழி திருமுகக் கலைமகள் சிணுங்கலே கவிபாடும் சந்தம் உயர்வுற அவளருள் உடையவர் தமக்கோ உலகங்கள் சொந்தம் மயிலவள் மலர்ப்பதம் மனந்தனில் வைத்தால் வேறேது பந்தம் வெண்ணிறத் தாமரை வெய்யிலைச் சுமக்கும் விந்தையைக் காணீரோ பண்ணெனும்…

ஆயிரம் சூரியன் பார்வையில் சுடர்விடும் அன்னையின் திருமுகம் நிலவு தாயவள் கருணையின்பாய்படுத் துறங்கிட துன்பமும் இன்பமும் கனவு பாய்மரக் கப்பலில் போகிற பிள்ளைக்கு பயமில்லை சமுத்திர விரிவு தேய்வதும் வளர்வதும் தன்னியல் பெனும்மனம் தானாய்…