இறையடியாரின் இயல்பு இப்பாடலில் விரிவாகப் பேசப்படுகிறது. சிவசிந்தையில் தம்மையே பறிகொடுத்தவர்கள் பற்றிய வர்ணனை திருவாசகத்தில் பல இடங்களில் காணப்படுகிற ஒன்றுதான்.அடியவர் தனியே இருக்கையில் என்னுடைய இறைவனென்று சொல்லி மகிழ்வதும், அடியார் திருக்கூட்டத்தின் நடுவே இருக்கையில்…

மாணிக்கவாசகர் சொல்லும் இறையனுபவத்தின் அடையாளங்களில் ஒன்று,”மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்தல்”.மார்கழியில் குளிர்ந்த நீர்நிலையில் இறங்கினாலே மெய் நடுங்குகிறது.சிவசக்தியின் கருணையாகிய பொய்கையில் இறங்கினால் !! இன்றளவும் இறையனுபவத்திற்கு ஆட்படுபவர்கள் உடலில் அத்தகைய விதிர்விதிர்ப்புகளை நாம் காணலாம். இறையனுபவத்தில்…

எந்தவொன்றை மிகுதியாக சிந்திக்கின்றோமோ அதுவே எங்கும் புலப்படுவது இயல்பு. இறைசிந்தையிலேயே இதயம் தோய்ந்த இப்பெண்கள்,நீராடப் போய்ச்சேர்ந்த பொய்கையிலும் அம்மையப்பனையே காண்கிறார்கள். குவளை மலரின் கருமை நிறம்,அம்மையை நினைவூட்டுகிறது. செந்தாமரை சிவப்பரம்பொருளை குறிக்கிறது.வினை நீக்கும் உடல்…

முந்தைய பாடலின் நீட்சியாகவும் சிவானந்தம் என்னும் அற்புதத்தில் ஆழ்ந்து திளைக்கும் ஆனந்தத்தின் வெளிப்பாடாகவும் இப்பாடல் அமைகிறது.சிவமாகிய தீர்த்தத்தில் நீந்திக் களித்து விளையாடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை. தானே தீர்த்தனாய் வினைகளை தீர்ப்பவனாய் விளங்கும் இறைவன் சிற்றம்பலத்தில் அனலேந்தி…

சிவத்தின் பெருங்கருணையே ஒரு பொய்கையாய் பெருகி நிற்கிறது.அதுவும் வண்டுகள் மொய்க்கும் பொய்கை. அதாவது பொய்கையை வண்டுகள் மொய்க்கக் காரணம் அதில் பூத்திருக்கும் தாமரைகள். சிவப்பொய்கையில் குதிக்கும் இந்த மனித வண்டுகள் அவனுடைய திருவ்டித் தாமரைகளைத்…

பன்முகப் பண்புகள் என்னும் ஈடிலாத தன்மையின் பிரம்மாண்டமாகவும் எல்லைகளைக் கடந்த வியாபகமாகவும் சிவன் விளங்குவதை சிந்தித்து வியக்கும் விதமாய் திருவெம்பாவையின் பத்தாம் பாடல் அமைந்துள்ளது. எல்லோருக்கும் எல்லாமாக நிற்கும் சிவனை எவ்வாறு வரையறுப்பது என்னும்…

எது பழையது எது புதியது என்கிற கேள்வியை உன்னிப்பாகப் பார்த்தால் ஒன்று நமக்குத் தோன்றும்.காலம் எத்தனை பழையது! ஆனால் எப்போதும் புதியது. காலமே அப்படியென்றால், காலகாலன். இன்னும் பழையவன்.என்றும் புதியவன். பலரிடம், “எது உங்கள்…

திருவெம்பாவையில் சூட்சுமத் தன்மை மிக்க பாடல்களில் இதுவும் ஒன்று.பறவைகள் சிலம்பும் சங்கம் இயம்பும் என்கிற நயங்களைத் தாண்டி வருகையில் பறவைகள் சிலம்பும் ஒலியும் சங்கம் இயம்பும் ஒலியும் கடந்துபரஞ்சோதியின் ஒளி எழுகிறது. ஒளிக்கும் ஒலிக்குமான…

தோழிகளிடையே ஆன உரையாடல் என்னும் எல்லை கடந்து சிந்திக்கும் போத,திருவெம்பாவையின் சூட்சுமப் பரிமாணங்கள் பலவும் புரிபடுகின்றன. “நாளை எங்களை எழுப்புவேன் என நேற்று சொல்லிச் சென்ற தோழியசின்னும் விடியவில்லையா?நாணமேயின்றி அச்சொல் எந்தத் திசையில் தொலைந்ததுவோ?…

வெளிப்படையாய் இந்தப் பாடலுக்குத் தென்படும் உரை,ஒரு பெண்ணைப் பழிப்பதுபோல் உள்ளது. திருமாலும் நான்முகனும் அறியா சிவனை நாம் அறிவோம் என்று இனிய சொற்களால் பொய்யுரைத்த பெண்ணே !கதவைத்திற!அண்ணும் விண்ணும் அறியவொண்ணா மகாதேவன் நம்மை ஆட்கொண்டு…