கவியரசு கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்த வேளையில் எழுதிய நூல் தைப்பாவை. சமயப்பற்றுள்ள குடும்பத்தில் பிறப்பு,சமய நூல்களில் லயிப்பு ஆகியன அவரிடம் திருப்பாவை,திருவெம்பாவை ஆகிய நூல்களைக் கொண்டு சேர்த்திருந்தது. அவற்றின் யாப்பழகும் ஓசைச் செப்பமும்…

திருமாலுக்கும் நான்முகனுக்கும் சிவபெருமானை நேரில் பார்த்து ஆக வேண்டிய காரியங்கள் எவ்வளவோ உண்டு. கயிலாயத்திற்குப் போகும் போதெல்லாம் அவர் இருந்தால் தானே! 64 திருவிளையாடல்கள் செய்ய ஓயாமல் மதுரைக்குப் போவது, நாயன்மார்கள் அறுபத்து மூவரை…

இறைவன் தன் அடியவர்களை நெருங்கி வர அனுமதிக்கும் இடம் பூமிதான்.வானகத்தில் தேவர்களுக்குஅவனை நெருங்கக் கூட துணிவு கிடையாது. தன் அடியார்களுடன் தான் நெருங்கிப் பழக வேண்டும் என்பதற்காகவே அவர்களை மண்ணில் வந்து வாழச் செய்தானாம்…

மூவராலும் தேவராலும் அறிய முடியாத சிவபெருமான் தன் பாகம்பிரியாளோடு தன்னடியார்களின் மன வீடுகளில் தொடர்ந்து எழுந்தருள்கிறார். இந்த எளிவந்த தன்மையைப் பாடும் போதே சிவபெருமான் குருவடிவாய் திருமேனி கொண்டு வந்ததையும் ,திருப்பெருந்துறையில் தன்னை ஆட்கொண்டதையும்,குருவடிவு…

தேவர்கள் அமுதத்தை அறிந்தவர்கள். அதன் சுவையை அறிந்தவர்கள். ஆனால் அவர்கள் ஒரு பழத்தின் சுவையை அறிந்தவர்களில்லை என எள்ளல் தொனிபடப் பாடுகிறார் மாணிக்கவாசகர். எந்தப் பழம் அது? திருமூலர் சொன்ன பழம்தான். ”ஒன்று கண்டீர்…

தேர்வில் வெல்ல விரும்பும் மாணவர்களைப் பாருங்கள்.பொழுது போக்குகள்,கேளிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் படிப்பிலேயே கவனமாயிருப்பார்கள். இவர்களே இப்படியென்றால் முக்தியை நினைக்கும் அடியார்கள் எப்படி இருப்பார்கள்? “பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்” என்கிறார் மாணிக்கவாசகர். “பப்பற”…

சிற்சில பதவிகளுக்கென்று சில தகுதிகள் உண்டு.ஆனால் முன் தகுதி எதுவுமே இன்றி இருந்தாலும் பக்தி இருந்தால் இறைவனுடைய கருணை ஆட்கொண்டு விடுகிறது.”சிவன் பஞ்ச பூதங்களிலும் நிறைந்து நிற்கிறான்.அவன் எங்கும் இருப்பவன் என்பதால் செல்வதோ வருவதோ…

பக்தி கனிகையில் வருகிற பணிவு, அற்புதமானது. மனிதன் ஓர் எல்லை வரையில் தான் எவ்வளவு பெரியவன் என்பதை நிறுவவே முற்படுகிறான்.ஆனால் அவன் பக்குவம் அடைகிற போது தன்னினும் மேம்பட்ட இறையடியார்கள் பலரும் இருப்பதைக் கண்டு…

இந்தப் பாடலுக்கான மரபான உரைகளில் ஒன்று, பக்தியின் பரிணாமத்தை சுட்டுவதை பள்ளி மாணவனாக இருந்த போது வாசித்தேன். மகாவித்வான் தண்டபாணி தேசிகரின் உரை அது. “கூவின பூங்குயில்” என்று பாடல்தொடங்குகிறது.பொழுது புலர்வதற்கு முன் கூவக்…

சிவபெருமான் திருப்பள்ளியெழும் கோலத்தை நுணுக்கமாக விவரிக்கிறார் மாணிக்கவாசகர். ஒரு குழந்தை பிற நாட்களில் துயில் எழுவதற்கும் தன் பிறந்த நாளில் துயில் எழுவதற்கும் வேற்றுமை உண்டு. கண்களைத் திறக்கும் முன்னரே அந்தநாளைக்குறித்த உவகைச் சித்திரங்கள்…