கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலுள்ள ஈஷா யோக மையத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்புண்டு. அங்கே அமைந்திருக்கும தியானலிங்கம், பிராணப் பிரதிஷ்டையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.யோக மரபில் , மனித உடலில் ஏழு சக்கரங்கள் இருப்பதாகச் சொல்வார்கள். அந்த ஏழு சக்கரங்கள் தியானலிங்கத்திலும் அமைந்துள்ளன. எழு சக்கரங்களும் முழுவீச்சில் தூண்டப்படுவதே பிராணப்பிரதிஷ்டை.. சக்தி முழுவீச்சில் தூண்டப்படுகையில் சிவம் எனும் அம்சம் அங்கே நிகழ்கிறது. இதுதான் பிராணப் பிரதிஷ்டையின் தாத்பர்யம்..
ஆனால் யோகமரபில் இதற்குச் சொல்லப்படுகிற காரணம் வேறு. முருகன் என்னும் யோகி, ஓருடலுக்குள் ஆறு உயிர்களை நிலைநிறுத்தி கடுந்தவம் இயற்றியவர். அந்த ஆறு உயிர்களேஆறுமுகங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
இப்பாடலின் முத்தாய்ப்பு வரி, உனது தந்தை பரமனுக்கோ வேலும் மயிலும் புதியது என்பதுதான். வேலும் மயிலும் சிவபெருமானுக்குப் புதியதா?அவற்றை அவர் பார்த்ததேயில்லையா? சிவபெருமான் அழிக்கும் கடவுள்.அவருடைய கையிலிருப்பது சூலாயுதம். அதற்கு அழிக்கத்தான் தெரியும்.ஆனால் மாமர உருவில் சூரன் நிற்க முருகன் எறிந்த வேல்பட்டு சேவலாகவும் மயிலாகவும் சூரன் உருமாறினான் என்பது புராணம். பகைவனை அழிக்க வேண்டிய ஆயுதம், வனை உருமாற்ற, வாகனமாகவும் கொடியாகவும் ஆட்கொண்டார் முருகன். அழிக்கும் கடவுளாகிய சிவபெருமானுக்கு ஆயுதம் கொண்டு ஆக்கவும் முடியும் என்று காட்டியதால் பரமனுக்கு வேலும் மயிலும் புதியது…
இந்த மூலப்பாடலையே தொகையறாவாகக் கொண்டு திருவருட் செல்வர் திரைப்படத்தில்
மனக்கதவம் திறந்த பரம்பொருளே
கதைச்சூழலும் இங்கே வந்துவிடுகிறது.








