வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
ஆள்நடமாட்டம் அற்றுப்போய், வவ்வால்கள் மட்டும் வந்து போகும் கோவில்கள் யாரோ ஒருவரின் கண்களில் பட்டதால் புதுப்பொலிவு பெறுகின்றன.
புறக்கணிக்கப்பட்ட பகவானுக்கு பொங்கலும் பண்டிகையும் அமர்க்களப்படுகின்றன. விலக்கி வைக்கப்பட்ட தெய்வம் வரப்பிரசாதமென்று வணங்கப்படுகிறது.
பகவானுக்கு இந்த நிலை என்றால், மனிதனுக்கு? பின்னடைவுகள் ஏற்பட்டாலும் யார் பொறுமையாய் இருக்கிறார்களோ, அவர்கள் உரிய நேரத்தில் கூடுதல் பலத்துடன் வெளி வருவார்கள்.
அவ்வப்போது நேர்கிற சின்னச் சின்ன பின்னடைவுகளை சகாப்தமே முடிந்தது போல் எண்ணி சஞ்சலம் கொள்ளாதீர்கள். வாழ்க்கை உங்களைப் புதுப்பித்து புதுப்பொலிவூட்டி இன்னும் பளபளப்பாய் முன்னெடுத்துச் செல்லும்.
கால் சறுக்கி விழுவதன் பெயர் வீழ்ச்சி இல்லை. தெய்வத்துக்கிருக்கும் பொறுமை, மனிதனுக்கிருந்தால் மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.




