(24.07.2005 ஈரோடு சி.கே.கே. அறக்கட்டளை 27ஆவது ஆண்டுவிழாக் கவியரங்கம் – தலைமை கவியரசர் இளந்தேவன்) கவியரங்கில் என் தலைப்பு வரும் முன்னால் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருகிறேன் ஓர வஞ்சனை ஒன்று செய்தீர்களே…
(சித்திரைத் திருநாளில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக் கவியரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் பாடிய கவிதை. உடன்பாடிய கவிஞர்கள் – கபிலன், புகழேந்தி, ஆண்டாள் பிரியதர்ஷினி, கனிமொழி) அன்றொரு நாளெங்கள் வள்ளுவக் கிழவனின் அகந்தனில் புகுந்தவள்…
(விழுப்புரம் கம்பன் விழாக் கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை) அன்றும் இன்றும் நடப்பதெல்லாம் ஆம். எங்கள் கம்பன் சொன்ன கதை. அங்கும் இங்குமாய் மாறுதல்கள் ஆனால் அடிப்படை மாறவில்லை. பிரியம் மணக்கும் காதல்முன் பெரிய…
(2003ல் திருக்கோவலூர் கபிலர் விழாவில் வாசித்த கவிதை. கவியரங்கத் தலைவர் சொ.சொ.மீ. சுந்தரம்) மகாராஷ்டிரத்தின் மகளாய்ப் பிறந்தாய்! கர்நாடகத்தில் கால் வைத்துக் கடந்தாய்! ஆந்திர வெளிகளில் ஆடித் திரிந்தாய்! விரிகுடாக் கடலில் விரும்பிக் கலந்தாய்!…
அரங்கம் (கவியரங்கக் கவிதைகள்) (சென்னை பாரதியார் சங்கம் நடத்திய கவியரங்கில் வாசித்த கவிதை. கவியரங்கத் தலைவர் டாக்டர்.பொன்மணி வைரமுத்து) ஏங்கிக் கிடக்கிற இந்தியருக்கு ஏழ்மையும் பிணியும் என்றும் நிரந்தரம்; தேங்கிக் கிடக்கிற அரசியல் குட்டையில்…
என்னளவில் நான் சுதந்திரமானவன்; துயரம்-மகிழ்ச்சி-தொடமுடியாத உயரமென் உயரம்; உலகை முழுதாய் அள்ளிக் கொள்கிற அகலமென் இதயம்; நட்சத்திரங்களின் இருப்பை, மறைவை, நிலவின் நீண்ட பயண வலியை, இரவு நேரக் காற்றின் இசையை, இருட்டு முதல்முதல்…
காமக் கடலலைகள் காதல் முகிலாகி பூமி முழுவதுமே பூத்தூவும் – ஆம் நெஞ்சே! வேகும் தினவெல்லாம் வெந்து தணிந்திருக்கும் போகம் அலுத்துவிட்ட போது. வீட்டுச் சிறைக்குள் வெதும்பும் குருவிக்குக் காட்டுச் சிறகு கொடுத்ததுமே –…
காலம் என்கிற சித்திரக்காரனின் கைவசம் உள்ளது தூரிகை – அது காதல் என்கிற சித்திரம் தீட்டிடத் தேவையெல்லாம் ஒரு நாழிகை! அடிமனம் என்கிற திரைச்சீலை மேல் அந்தச் சித்திரம் தோன்றலாம் – ஒரு முடிவில்லாத…
வழிநடைப் பயணத்தின் நிழற்குடைகள் வாழ்க்கை முழுவதும் வருவதில்லை வழியில் பார்க்க நேர்ந்ததென்று விட்டுச் செல்லவும் முடிவதில்லை! தனித்து நிற்கும் குடைகளுக்கும் துணையின் தேவை இருக்கிறது! தயக்கம் தடுக்கும் காரணத்தால் தனிமையில் வாழ்க்கை கழிகிறது! பாதையும்…
அத்தனை மென்மையும் சேர்த்து வைத்தாய் – ஓர் அழகி உன்போல் பிறந்ததில்லை! மொட்டுக்கள் திறந்த மலர்களெல்லாம் இத்தனை புதிதாய் இருந்ததில்லை! கொடுப்பதும் எடுப்பதும் யாரென்று கூடல் பொழுதில் தெரியாது இழப்பதும் பெறுவதும் ஏதென்று இரண்டு…