காற்றில் தவழ்கிற ஒருபாடல் -அது காதில் விழுந்தால் நல்லநாள் நேற்று மலர்ந்து ஒருதேடல் – அது நெஞ்சில் இருந்தால் நல்லநாள் ஊற்றெனப் பொங்கும் உற்சாகம் -அது உந்தித் தள்ளினால் நல்லநாள் போற்றிய கனவுகள் நிஜமானால்…
வானம் உன் செயல்களைப் பார்க்கிறது – அதன் விழிகள் சூரியர் சந்திரராம் கானம் உன்குரல் கேட்கிறது – வரும் காற்றுக்கும் உள்ளன காதுகளாம் ஞானம் உனைத்தொட நினைக்கிறது – இங்கே நிகழ்பவை அதற்கு வாசல்களாம்…
பல்லவி ———— ஒரு பார்வை….ஒரு புன்னகை உயிரையும் தருவான் சீடன் குருமேன்மை …அறியாமல் குதர்க்கம் சொல்பவன் மூடன் பலர்வாழ்வில் இருள்நீங்க ஒளியாய் வந்தவன் ஈசன்… நலம்யாவும் நமதாக தனையே தருகிற நேசன் சரணம்-1 ————…
கானல் தாகங்கள் உனக்கெதற்கு – உன் கங்கையைத் தேடிப் புறப்படு! கூனல் நினைவுகள் நமக்கெதற்கு – நல்ல கூரிய உணர்வுகள் படைத்திடு! தானாய்க் கிடைப்பது எதுவுமில்லை – நீ தகுதிகள் பெரிதாய் வளர்த்திடு! போனால்…
ஆயிரம் எரிமலை எரிக்கிற எதையும் அன்பெனும் மழைத்துளி அணைத்துவிடும் காயங்கள் எத்தனை மனம் கொண்டாலும் கனிவே நம்பிக்கை மலர்த்திவிடும் மாயங்கள்ௐ செய்வது மானிட நேயம் மனதில் இதனைப் பதித்துவிடு சாயம் போனவர் வாழ்வினில் நீயே…
வீணையை உறையிட்டு மூடிவைத்தும் வீணை என்பதை வடிவம் சொல்லும்! பூணும் உறையினுள் வாளிருந்தும் புரிபடும் வாளென்று… பார்த்ததுமே! காலம் வரும்வரை காயாக காலம் கனிந்ததும் கனியாக கோலங்கள் மாற்றும் தாவரங்கள் கூடிச் சுவைத்திடும் பறவையெலாம்!…
உருட்டிய தாயத்தின் எண்ணிக்கை ஒவ்வொரு தடவையும் கலந்துவரும் விரட்டிய பாம்பால் விழுந்தவரும் ஏணியில் ஏறவே பரமபதம்! தோற்பதும் வெல்வதும் தொடருவது தொடக்கத்தில் யாருக்கும் இருப்பதுதான் ஆட்டத்தின் சூட்சுமம் விளங்கிவிட்டல் அதன் பின்னர் வெற்றி தொடர்கதைகள்…
சூரிய வாளியில் வெய்யிலை நிரப்பி சூட்டைத் தெளிக்கும் வானம் காரியம் இதனைப் பார்த்துக் கொண்டே காத்துக் கிடக்கும் மேகம் பேரிகை போல இடியை முழக்கிப் பொழிய வளர்த்து வேளை வருகையில் வீசியடிப்பதே ஞானம்! உன்னில்…
கோடையென்றும் குளுமையென்றும் பருவநிலை மாறும் வாடிநின்ற நிலைமையொரு வீச்சினிலே தீரும் தேடுவதை எட்டும்வரை தொடர்ந்திருக்கும் பாடு நாடியதை எட்டியபின் நாளையென்ன? தேடு! வீசுபுயல் நிலநடுக்கம் வந்துப்போகும் பூமி ஏசுதலே இல்லாமல் வாழ்ந்தவன்யார் காமி தேசமெல்லாம்…
மின்னல் கிழித்த கோடுக ளெல்லாம் மழையின் கோலங்கள் ஆகும் செந்நெல் செழித்த வயல்களின் நடுவே தென்றல் கோலங்கள் போடும் தன்னில் பிறந்த எண்ணக் கோடுகள் சிந்தனைக் கோலங்கள் ஆகும் இன்னும் இன்னும் உள்ளே அமிழ…