என்ன நாடகம் இது
வெள்ளிச் செதில்கள் மின்னும் ஒருகயல் வெள்ளப் பெருக்கில் திரிகிறது துள்ளும் நதியின் அலைகள் நடுவே தூண்டில் எங்கோ தெரிகிறது கொள்ளை அழகில் மின்னும் பனியில் கொஞ்சும் ஈரம் உலர்கிறது வெள்ளைப் பனியை விசாரிக்கத்தான் வெய்யில் மெல்ல வருகிறது பொற்குடம் தன்னில் நிறையத் தானே பசும்பால் அன்று பெருகியது கள்குடம் நிறைத்து தீஞ்சுவை திரித்து கடவுளின் நாடகம் தொடங்கியது வேலன் திருவடி சேரத்தானே வண்ணச் சிறுமலர் அரும்பியது காலம் அதனைக் குரங்கின் கைகளில் கொடுத்துப் பார்க்க விரும்பியது அழகாய் ...
தமிழாக மலர்வாள்
வெற்றிக்குத் திருவடிவம் சக்தி-அவள் வீறுகொண்டு வருகின்ற கோலம் முற்றிநிற்கும் அசுரகுணம் வீழும்-ஓம் முந்திவரும் தந்ததிமி தாளம் பற்றுகளை வெட்டிவிடும் சூலம்-அவள் பொறுப்பதில்லை பக்தரது ஓலம் நெற்றிக்கு நடுவிலொளிர் நீலம்-அவள் நிறம்தானே அனைத்துக்கும் மூலம் தாமதங்கள் செய்வதில்லை சக்தி-அவள் தருகின்ற தருணத்தை உணர்வாள் நாமங்கள் ஆயிரமும் சொன்னால்-அந்த நாவினிலே தமிழாக மலர்வாள் காமங்கள் மாற்றுகிற அன்னை-ஈசன் காதலிலே கன்னங்கள் கனிவாள் ஆமவளின் ஆசையிந்தப் பிரபஞ்சம்-எல்லாம் ஆக்கிவிட்டும் கன்னியாக ஒளிர்வாள் நில்லாத அருவியவள் கருணை -அதில் நனைந்தவர்க்கு வினையழுக்கு போகும் ...
வியாச மனம்-10 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)
வியாச மனம் முதல் அத்தியாயத்தில் கைகேயி பற்றிய குறிப்பொன்று தந்திருப்பேன்.முற்றாக முழுதாக விதியின் கருவியாக மட்டுமே இருந்து தன்னிலையில் இருந்து தாழ்ந்து போகும் பாத்திரங்கள் வாசகனின் புரிதலுக்குள் சில சலுகைகளைப் பெறுகின்றன.இராமன் மீது அளவிடற்கரிய பாசம் கொண்ட கைகேயி மனம் மாறியது ஏன் என்ற கேள்விக்கு வெளிப்படையான காரணம் மந்தரையின் போதனை, ‘தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி தூய சிந்தையும் திரிந்தது’ என்கிற கம்பன் அத்துடன் நிறுத்தாமல்,அரக்கர்களின் தீமையும் முனிவர்கள் செய்த அறமும் இராமனை கானகத்திற்கனுப்ப ...
திருவடி சரணம் அம்மா
ஒருபெண்ணைச் சொல்லும் போதோ உன்னைத்தான் உவமை சொல்வார் வரும்பொருள் எல்லாம் உந்தன் விழிபடும் மகிமை என்பார் கருநிறம் கொண்ட மாலின் கமலத்து மார்பில் நின்றாய் திருவெனும் தேவி உந்தன் திருவடி சரணம் அம்மா கடைந்தபாற் கடலை விட்டுக் கிளம்பிய அமுதம் நீதான் நடந்த காகுத்தன் பின்னே நடைபயில் சீதை நீதான் உடைந்துபோய் அழுவோரெல்லாம் ஒருவாறு தேருமாறு அடைந்திடும் ஊக்கம் நீதான் அடையாத கதவம் நீதான் பொன்னிற மாதே நீயும் புயல்வண்ணன் தோள்கள் சேர்ந்தாய் செந்நிறக் ...
கலங்கரை விளக்கம் எங்கே?
கலங்கரை விளக்கம் எங்கே? கல்வியின் கனிவு எங்கே? உலகுக்குத் தமிழர் மேன்மை உயர்த்திய செம்மல் எங்கே? குலவிடும் காந்தீயத்தின் குன்றத்து தீபம் எங்கே? மலையென நிமிர்ந்த எங்கள் மகாலிங்க வள்ளல் எங்கே? என்னென்ன தொழிற்கூடங்கள் எத்தனை கல்விச் சாலை பொன்பொருள் வாரித் தந்த பெற்றிக்கோ எல்லை இல்லை மன்னர்க்கும் மன்ன ராக மண்மிசை ஒருவர் வாழ்ந்தார் அன்னவர் அருட்செல் வர்தான் ...
வியாச மனம்-9 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)
விசித்திர வீரியனை உற்சாகம் மிக்கவனாய் நோயின் தீவிரம் தொட முடியாத தொலைவில் நிற்பவனாய் முதற்கனல் சித்தரித்தாலும் அவன் உண்மையின் தீவிரமும் உணர்ச்சியின் தீவிரமும் ஆட்கொள்ளப்பட்டவன் என்று இரண்டு முக்கிய இடங்கள் நிறுவுகின்றன. அம்பைக்கு இழக்கப்பட்ட அநீதியறிந்து கொதித்துப் போகிற விசித்திர வீரியன்,அவள் தெய்வத்தன்மை எய்திய அதிமனுஷியாய்,தவம் செய்து சிவவரம் பெற்றவளாய் வீறுகொண்டலைவது கேட்டு அவளைத் தேடிப் போகிறான்.ஒரு பிடாரி சிம்மம் ஒன்றைக் கொன்றுண்ணும் காட்சிகண்டு அவளே அம்பையென்றறிந்து தன்னை பலி கொள்ளுமாறு மன்றாடுகிறான். அவளுடைய காலடியில் உறைவாளை ...