ஈடாக ஒருதெய்வமோ?
பெருங்கொண்ட வனந்தனில் பசிகொண்ட வேங்கையின் பார்வைக்குக் கனல்தந்தவள் கருக்கொண்ட சிசுவுக்கு பசிதாகம் போக்கவே கொடியொன்று தருவித்தவள் உருக்கொண்டு வந்தாலும் அருவமாய் நின்றாலும் உயிருக்குத் துணையானவள் சரக்கொன்றை சூடுவோன் சரிபாதி மேனியில் சரசமாய் அரசாள்பவள் சுடர்வீசும் தீபத்தில் சுந்தர நகைகாட்டி சூழ்கின்ற ஒளியானவள் இடரான பிறவியும் இல்லாமல் போகவே இறுதிநாள் இரவானவள் கடலாடும் அலையெலாம் கைநீட்டும் நிலவினில் கலையாவும் அருள்கின்றவள் படையோடு வரும்வினை அடியோடு சாயவே பாசாங்குசம் கொண்டவள் நாமங்கள் ஆயிரம் நாவாரச் சொன்னாலும் நாயகி பேராகுமோ ஆமெந்த ...
வியாச மனம்-5 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)
21 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் நெருங்கிய உறவில் ஒரு திருமணம்.என் ஒன்றுவிட்ட சகோதரர்தான் மணமகன். திருமணம் முடிந்து மறுநாள் மாலை வேறோர் ஊரில் வரவேற்பு.மணமகளுக்கு அப்பா மட்டும்தான்.அம்மா இல்லை. அவர் மணமகன் வீட்டிற்கு வரவில்லை.மறுநாள் நேராக வரவேற்புக்கு வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார். வரவேற்பு மேடைக்கு போவதற்கு முன்னர்,இப்போது எனக்கு அண்ணியாகிவிட்ட மணமகள்(பெயர் வண்டார்குழலி) தலைவலிக்கிறது என்று சொல்ல,பொறுப்புள்ள கொழுந்தனாய் மாத்திரை வாங்கிக் கொண்டு வருவதற்குள் மணமக்கள் மேடையேறியிருந்தனர். அப்போதுதான் உள்ளே நுழைந்திருந்த மணமகளின் தந்தைமண்டப வாயிலில் இருந்து தொலைவிலிருந்த ...
பைரவி திருக்கோலம்
குங்குமத்தில் குளித்தெழுந்த கோலமடி கோலம் பங்கயமாய் பூத்தமுகம் பார்த்திருந்தால் போதும் அங்குமிங்கும் அலைபாய்ந்து அழுதநிலை மாறும் தங்குதடை இல்லாமல் தேடியவை சேரும் கைகளொரு பத்தினிலும் காத்தணைக்க வருவாள் நெய்விளக்கின் நடுவினிலே நித்திலமாய் சுடர்வாள் வெய்யில்மழை சேர்த்ததுபோல் வெப்பமாகிக் குளிர்வாள் பைரவியாள் தேரிலேறி பவனிவந்து மகிழ்வாள் ஆயகலை யாவுமவள் வாயிலிலே கூடும் தாயவளின் பார்வையிலே நின்றுவிளையாடும் ஓயும்வினை ஓடவரும் ஓங்கார ரூபம் வேய்குழலில் வீணையினில் வித்தகியின் நாதம் பக்தரெல்லாம் பரவசத்தில் பாடியாடி சிலிர்க்க முக்தரெல்லாம் மூன்றுவிழி மோகனத்தில் லயிக்க ...
வியாச மனம்-4 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)
கடலின் அக அடுக்குகளிடையே உப்புச்சுவையின் திண்மையிலும் பாசிகளிலும் பவளங்களிலும் ஊடுருவி வெளிவரும் மீனின் அனுபவம்,ஒரு நீச்சல் வீரனுக்கு ஒருபோதும் வாய்க்காது. வாழ்வின் அத்தனை அம்சங்களுக்கும் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்துவிட்ட ஒருவன் கணங்களின் சமுத்திரத்தில் மீனாகிப் போகிறான். தனக்கான இரையையும் தனக்கான வலையையும் அவன் ஒன்றே போல் அறிகிறான். இந்த மனோலயத்திற்கு மிகச்சிறந்த உதாரணம்,பீஷ்மர்.விதம்விதமான மனப்போராட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்தாமல் காலம் முதுகில் சுமத்தும் காரியத்தை மட்டுமே முன்னெடுத்துச் செல்பவர் அவர். பீஷ்மரின் பிரம்மச்சர்யமும்,அரசபதவியில் அமர்வதில்லை என்னும் சங்கல்பமும் ...
கண்திறக்கும் கருணை
வைத்திருக்கும் கொலுநடுவே வைத்திடாத பொம்மையொன்று மைத்தடங்கண் விழிதிறந்து பார்க்கும் கைத்ததிந்த வாழ்க்கையென்று கண்கலங்கி நிற்பவர்பால் கைக்கரும்பு கொண்டுவந்து சேர்க்கும் மெய்த்தவங்கள் செய்பவர்கள் பொம்மையல்லஉண்மையென்று மேதினிக்குக் கண்டறிந்து சொல்வார் பொய்த்ததெங்கள் பாழும்விதி பேரழகி பாதம்கதி பற்றியவர் பற்றறுத்து வெல்வார் மான்மழுவை ஏந்துகரம் மாலையிட நாணும்முகம் மாதரசி போலழகி யாரோ ஊன்பெரிதாய் பேணியவர் தேன்துளியைஉள்ளுணர்ந்தால் உத்தமியைத் விட்டுவிடு வாரோ வான்பெரிது நிலம்பெரிது வாதமெல்லாம் எதுவரையில்? வாலைமுகம் காணும்வரை தானே! நான்பெரிது என்றிருந்த பேரசுரன், நாயகியாள் நேரில்வர சாய்ந்துவிழுந் தானே! ...
வியாச மனம்-3 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)
ஆளுமைகள் மீது நாம் கட்டமைக்கும் பிம்பங்கள் அளவில்லாதவை. அவர்களின் எல்லா பக்கங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்வதென்பது, அவர்களின் படுக்கையறையில் எட்டிப் பார்ப்பதல்ல. அவர்களை நிறைகுறைகளுடன் புரிந்து கொள்வது. மகத்துவம் பொருந்தியவர்களாய் மட்டுமே சித்தரிக்கப்படுபவர்கள் ,மறுவாசிப்பில் பகிரங்கமாகிற போது நம்முடன் இன்னும் நெருக்கமாகிறார்கள். சந்தனு தன் மகன் தேவவிரதனின் இளமையை வாங்கிக் கொண்டு வாழ்ந்தார் என்பதும் ஒர் உபசார வழக்குதான். ஒருவகையில்.தேவவிரதனின் பிரமச்சர்யம் அவனை என்றும் வளரிளம் சிறுவனாக மட்டுமே கற்பனை செய்து தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் சலுகையை சந்தனுவுக்கு ...