No Title
கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் அறக்கட்டளை சார்பில்,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ஜுலை30 மற்றும் 31 ஆகிய நாட்களில் மதுரை தியாகராசர் கல்லூரியில் என் உரைகள் நிகழ்கின்றன..அழைப்பிதழ் இத்துடன்..அருகிலிருக்கும் நண்பர்கள் வாய்ப்பிருப்பின் வருகைதர வேண்டுகிறேன்.. ...
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் எழுதிய கவிதை
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் முதுகு வலி காரணமாக கோவை கங்கா மருத்துவமனையில் ஜுலை 22 அன்று அனுமதிக்கப்பட்டார். முதுகுவலி மற்றும் மூட்டு அறுவை சிகிச்சையில் உலகப் புகழ் பெற்ற மருத்துவர் திரு.எஸ்.ராஜசேகர் ஜூலை 23 அதிகாலை அறுவை சிகிச்சை நிகழ்த்தினார். மூன்றே நாட்களில் முழுமையாக குணமடைந்த கவிஞர்,இன்று மாலை (ஜுலை 26) மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.இன்று காலை கங்கா மருத்துவமனையை வாழ்த்தி கவிஞர் எழுதிய கவிதை தத்ரூபா கிராஃபிக்ஸ் நிறுவனத்தாரால் வடிவமைக்கப்பட்டு மருத்துவர் திரு.ராஜசேகரிடம் வழங்கப்பட்டது. கங்கா மருத்துவமனையின் ...
பட்சி சொன்னால் சரியாயிருக்கும் (மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)
தைப்பூசம் முடிந்துஒருநாள் இடைவெளிக்குப் பின் மகாத்மா காந்தி நிறுவனத்தில் நான் உரை நிகழ்த்த வேண்டும்.அந்த நாளை அனைவருமே வெகு ஆவலாய் எதிர்பார்த்திருந்தனர்.ஏதோ என்னுடைய உரைக்காக அப்படி காத்திருந்தனர் என்று நீங்களாக நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.மொரீஷியஸில் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தைப்பூசத்திற்காக நெடுநாட்கள் நோன்பு நோற்கின்றனர். மொரீஷியஸ் நாட்டின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருடன் அந்த நோன்பை அவர்கள் நிறைவு செய்வது கொடியிறக்கத்திற்குப் பின்புதான் என்பதால் அந்தநாள் அவ்வளவு முக்கியம்.அந்த நாளும் வந்தது.ச்னிக்கிழமை காலை 10.30 ...
கண்டதுண்டோ இவன் போலே
கவிதையின் உயரம் ஆறடி-எனக் காட்டிய மனிதனைப் பாரடி செவிகளில் செந்தேன் ஊற்றிய கவிஞன் சேய்போல் வாழ்ந்ததைக் கேளடி எடுப்பார் கைகளில் பிள்ளைதான் -அவன் எதிர்கொண்ட தெல்லாம் தொல்லைதான் தொடுப்பான் சொற்களை சரம்சரமாய் அதில் நிகராய் ஒருவர் இல்லைதான் நெற்றியில் நீறுடன் குங்குமம்-அவன் நிற்கும் கோலமே மங்கலம் பற்றுகள் ஆயிரம் உற்றிருந்தாலும் பரம்பொருளுடனவன் சங்கமம் அழுததும் சிரித்ததும் ஆயிரம்-அவன் அவஸ்தையும் மகிழ்ச்சியும்காவியம் பழுதுகள் அறியாப் பாடல்கள் தந்தவன் பொன்மனம் தமிழின் ஆலயம் மண்மிசை கவிஞர்கள் தோன்றுவார்-தங்கள் மேதைமை மிளிர்ந்திடப் ...
கோவையில் கண்ணதாசன் விழா
கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் வழங்கப்படும் கண்ணதாசன் விருது இசைக்கலைஞர் வாணிஜெயராம் அவர்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. கண்ணதாசன் கழகம் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் 87ஆம் பிறந்ததினத்தை முன்னிட்டு 22.06.2014 அன்று மாலை 5.30 மணியளவில் கண்ணதாசன் விழா கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நிகழ்கிறது. இவ்விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன், பாடகி வாணிஜெயராம் ஆகியோருக்கு கண்ணதாசன் விருதுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 பொற்கிழியும்பட்டயமும் கொண்ட இவ்விருது கண்ணதாசன் கழகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களால் நிறுவப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கு மதுரை தியாகராஜர் குழு நிறுவனங்களின் ...
சத்குரு சத்சங்கம்
ஸ்வரங்களில் எழாத சங்கீதம்-உன் அருளெனும் ராக சஞ்சாரம் குரல்கள் அதன்சுகம் காட்டவில்லை-எந்த விரல்களும் அதன்லயம் மீட்டவில்லை மேகங்கள் தொடாத முழுவானம்-எந்த மேதையும்பெறாத திருஞானம் யோகங்கள் உணர்த்தும் சிவரூபம்-இங்கு யாரறிவார் உன் முழுரூபம் உந்திய கருணையில் ஓடுகிறேன் -நான் உன்பேர் சொல்லிப் பாடுகிறேன் விந்தைகள்நிகழ்த்தும் விடுகதையே-உன் விரல்தொடும் போதிலென் விடுதலையே பன்னிரு திருமுறை பாடுவதை-அருள் பரமானந்தர்கள் நாடுவதை உன்னிரு கண்களில் காணுகிறேன் -இந்த உன்னதம் உயிரினில் பேணுகிறேன் விந்தியம் இமயம் கைலாயம்-அந்த வேதவேதன் இருக்குமிடம் உந்தன் இதயம் அவைபோலே-அந்த ...