பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-4 (மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)
மொரீஷியஸ் பற்றி எழுதுகிற போது தலைப்பிலேயே பட்சியைக் கொண்டு வந்ததும் ஒருவகையில் பொருத்தமாகத்தான் இருக்கிறது.மொரீஷியஸின் சின்னமே டோடோ என்கிற பட்சிதான்.இந்த டோடோ பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பாகமொரீஷியஸின் பின்புலம் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம். மொரீஷியஸ் தீவு எரிமலையின் எச்சம்.அரிய வகை தாவரங்களும் பறவைகளும் மொரீஷியஸில் தோன்றின. அவற்றில் ஒன்றுதான் பழுப்புநிற டோடோ.வெவ்வேறு நாடுகளிலிருந்து அடிமைகளும் புலம் பெயர்ந்தோரும் மொரீஷியஸில் குடியேறினர். பதினாறாம் நூற்றாண்டில் டச்சு தேசத்தின் கிழக்கிந்திய கம்பெனி மொரீஷியஸில் காலூன்றியது.தொடர்ந்துகாலனிகளால் கைமாற்றப்பட்ட நாடு ...
அன்பும் சிவம்
புவனங்கள் எல்லாமே சிவசந்நிதி பிரபஞ்சங்கள் முழுமைக்கும் அவனேகதி தவறென்றும் சரியென்றும் சுழலும்விதி சுடர்வீசும் மலர்ப்பாதம் சரணாகதி அன்பேதான் சிவமென்று சிலர்பாடுவார் அழிப்பேதான் தொழிலென்று சிலர்கூறுவார் கண்மூன்று கொண்டானை யார்காணுவார் கண்மூடி அமர்ந்தோரே சிவம்பேணுவார் அடங்காத இருளோடு அவன்ராஜ்ஜியம் அலைபாயும் மனதோடும் அவன்நாடகம் ஒடுங்காத வரைதானே நவகாவியம் ஒடுக்கத்தில் அசைவில்லா உயிரோவியம் சங்கீதம் எல்லாமும் சிவன்பாடலே சங்காரம் உயிர்ப்பெல்லாம் அவனாடலே ஓங்காரப் பெண்ணோடு அவன் கூடலே நீங்காத துணையிங்கு அவன்நீழலே சித்தர்க்கும் முத்தர்க்கும் நெறிசொன்னவன் பித்தேறும் நரிதன்னைப் பரியென்றவன் ...
எழிலேயென் அபிராமியே-2
புகைப்படத்தை புகைப்படம் எடுத்தவர் இசைக்கவி முச்சந்தி நடுவிலொரு மலர்வீழ்ந்த தருணமந்த மென்காற்று பதறிடாதோ உச்சரிக்கும் சிறுமழலை ஒலிமிழற்ற வாணியின் உயிர்வீணை அதிர்ந்திடாதோ பச்சைமயில் கால்மாற்றி பூந்தோகை விரிக்கையில் பொன்னம் பலம் மிளிருமே உச்சம்நான் தொடும்நேரம் உள்ளபடி மலைச்சிகரம் ஓரங் குலம்வளருமே அச்சமிலை அழுகையிலை அத்தனைக்கும் ஏற்பாடு அன்றைக்கே செய்துவைத்தாய் இச்சையுடன் சிவன்பார்க்க இருவிழிகள் மண்பார்க்கும் எழிலேயென் அபிராமியே வீசுமொரு கவரியுடன் விதம்விதமாய் உபசாரம் விருப்பமுடன் ஏற்றவள் நீ தேசுசுகனல் ஐந்தினிடை திகழுமருட் கனலாக தூயதவம் நோற்றவள் ...
வித்தகக் குழந்தை
ஆவின் மடியில் மாயனின் இதழ்கள் அமுதம் பருகும் நேரம் தாவி யணைக்கும் கன்னியருக்கும் தாய்முலைகனிந்தே ஊறும் கோவில் சிலையாய் கோதையும் நின்றாள் கோலினை ஓங்கிய படியே நாவில் வருடும் பசுவிடம் பெருகும்.. பாலும் ஆயிரம் படியே பசுவின் காலைப் பற்றிய படியே பரமன் பருகும் அழகு கசியும் மடியில் கண்கள் பதித்த கோபிகை நெஞ்சம் மெழுகு திசைகள் எல்லாம் சலனம் இன்றித் தாய்மைத் தவிப்பில் கரையும் இசைக்கும் குழலும் இதழ்கள் பிரிந்த ஏக்கம் பெருகிப் பதறும் மதுரா ...
குருசிவ அந்தாதி
பின்ன முடியாத பொன்வலையை வீசியே என்னையும் உன்னையும் யார்பிடித்தார்?-சின்ன இழையும் சுமையாய் இறுகும்,நாம் செய்யும் பிழைகள் மலியும் பொழுது. பொழுது புலருங்கால் பூவின் அரும்பு தொழுதகை போலே திகழ -அழுததுளி வெண்பனியாய் மின்ன, வருமே விடியலும்; கண்பனித்தால் உள்ளே கனல் கனலெரிய உள்ளே களங்கம் எரியும் புனலொன்றும் ஊறிப் பெருகும்-அனலேந்தி ஆடும் அழகன் அருட்கழலை எண்ணியெண்ணிப் பாடும் பணியே பணி பணிப்பொன்னில் தூசாய் பரமாநான் உன்னில் அணியாயா வேனோ அறியேன் -பிணித்தவலை தள்ளாத என்னையும் தாங்குகிற உன்கருணை ...
தீபத்தில் கொஞ்சும் தயை.
லம்யம் எனுமோர் லயமும் அதிர்வுடன் நம்குரு நாதன் நவிலவே-செம்பிது பொன்னாய்ப் புடமாக பொன்னம் பலமாக அன்னான் நடமாடு வான். வான்மின்னல் கீற்றாய் வெயில்நிலவாய் நீர்த்தழலாய் தேன்மெல்ல உள்ளே துளிர்க்குமே-நானென்னும் ஒற்றைஅடை யாளம் உலகெங்கும் தானாக பற்றோ கரையும் பனி. பனிதங்கும் வேணியன்; பக்தை கரத்தே கனிதங்க வைத்தகா ருண்யன் -இனியிங்கு வந்துவந்து போகும் விதிமாற்றித் தன்கழலை தந்துவந்து காக்கும் திறம் திறம்தந்தான் பாடத் தமிழ்தந்தான் வாழ அறம்தந்தான் அத்தனையும் தந்தான்- விறண்மிண்டர் கோபத்துக் கஞ்சும் குணக்குன்றன் ஆரூரில் ...