Blog

/Blog

நம்நோக்கம் மீறியும் நம்நாக்கு பேசினால்…..

சிற்றெறும்புப் பேரணியைசீர்குலைக்க ஒப்பாது சற்றுநின்று பார்க்கின்ற செங்கண் களிறேபோல் சொற்கள் பெருகி சலசலத்தல் பார்த்திருக்கும்… முற்றி முதிர்ந்தமௌ னம்!!  நம்நோக்கம் மீறியும் நம்நாக்கு பேசினால் நம்வாக்கு நம்வசம் இல்லையே-தன்போக்காம் காட்டுக் குதிரை கடிவாளம் நீங்கினால் வீட்டுக்கும் உண்டோ வழி. வழிப்போக்கர் நாமெல்லாம்; வீதி நம தில்லை குழிமேடு தாண்டுதல் கொள்கை-பழியென்னும் சேறு படாவண்ணம் செல்லட்டும் நம்பயணம் மாறுபா டெல்லாம் மறந்து. மறந்தும் பிறர்முன்னே முள்ளைப்போ டாது திறந்த திசைகளைத் தேடு-கறந்தபால் போல மனமிருந்தால் போதும் அதுவேதான் ஆலமுண்ட ...

ஆவேனோ ஆளாய் அவர்க்கு

காரைக்கால் அம்மைகை கொட்டிக் கவிபாட ஊரைவிட் டோரமாய் ஓமென்று-காரிருளில் தாண்டவம் ஆடும் திருவாலங் காட்டீசன் பூண்டகழல் தானே பொறுப்பு. இமயம் அதிர இமைகள் அசைப்பான் டமருகங் கொட்டிதிசை யெட்டும்-உமையும் இசைந்தாட ஆடும் இறைவனென் நெஞ்சம் அசையச்செய் வானோ அருள். தேகத்தில் யானையுரி தன்னிடையி லேபுலித்தோல் நாகங்கள் பூணும் நகைகளாம்-ஆகட்டும் மண்டயோ டேந்தும் மகேசனொரு மானிடனை அண்டவிடு வானோ அருகு. அந்தரத்தில் வாழும் அமரர் நெருங்குங்கால் நந்தி பிரம்பு நிறுத்துமாம்-வந்திக்காய் வாங்கிய ஓரடியை வாரி வழங்கியவர் ஆங்கும் தொடர்வார் ...

இது வேறு மழை

உடல்சூட்டில் புயலடித்து மழைபொழிந்து போகும் கடல்சூட்டில் கதகதப்பாய் கட்டுமரம் வேகும் மடல்சூட்டில் ரோஜாவின் முன்னிதழ்கள் வாடும் தொடும்சூட்டில் தீப்பிடிக்கும் தண்ணிலவுக் காலம் யாரிட்ட விறகினிலோ யாகத்தின் நெருப்பு வேர்விட்ட மௌனங்கள் விளைகின்ற தகிப்பு போரிட்ட காயத்தில் பூப்பூத்த சிலிர்ப்பு கார்தொட்ட பெருமழையில் கொடிமின்னல் சிரிப்பு பேச்சுரைத்த அமளியிலே பித்துச்சொல் முளைக்கும் மூச்சிரைத்த உச்சத்தில் முக்திகொண்டு களைக்கும் வீழ்ச்சியெது?வெற்றியெது?விளங்காமல் தவிக்கும் காட்சியெலாம் தொலைந்துவிட  காலமங்கே உயிர்க்கும் நான்தீண்டும் இடமெல்லாம் நதிநெளிந்த குளுமை வான்தீண்டும் முகில்முதுகாய் வாஞ்சைகொண்ட புதுமை கான்தீண்டும் ...

சகலமும் தருவாள் அபிராமி

இன்று (25.04.2014) இரவு 7.30 மணியளவில் கோவை அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவிலில் “சகலமும் தருவாள் அபிராமி”என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறேன்.இரவு 9 மணிக்குள் நிகழ்ச்சி நிறைவு பெறும்…வாய்ப்பிருப்போர் வருகைதர வேண்டுகிறேன்.. ...

குயிலின் கூட்டில் கொஞ்ச நேரம்

“அண்ணா! உங்களை வாணிம்மா கூப்பிடறாங்க”! பல்லாண்டுகளுகளுக்கு முன்னர் ஒரு செப்டம்பர் 23ல் ஈஷா திருநாள் விழாப்பந்தலருகே ஈஷா பிரம்மச்சாரி ஒருவர் அழைத்தார். ஈஷா திருநாளில் “ஷாந்தி உத்ஸவ்”என்ற பெயரில் திருமதி வாணி ஜெயராம் அவர்களின் இசைநிகழ்ச்சி. அதில் என் இரண்டு பாடல்களுக்கு அவரே இசையமைத்துப் பாடுவதாக ஏற்பாடு. பாட்ல்களை எழுதி அனுப்பியிருந்தேனே தவிர   அவர்களை நேரில் சந்தித்ததில்லை. மேடைக்குப் பின்னால் இருந்தார்.பரஸ்பர அறிமுகத்திற்குப்பின் என் பாடலின் ஒரு சொல்லில் ஒரேயோர் எழுத்தை மாற்றிக் கொள்ள அனுமதி ...

ஏகாம்பரனுக்கு ஏதாடை?

பேயைத்தா யென்பாய் பிடிசாம்பல் பூசுவாய் சேயைப்போய் உண்பாய் சிவக்கொழுந்தே-தீயைப்போய் ஏந்திக் களிப்பாய் எழிலார் அமுதிருக்க மாந்துவாய் நஞ்சை மகிழ்ந்து முப்புரங்கள் உன்சிரிப்பில் முற்றும் எரிந்ததாம் அப்புறமேன் மேரு வளைத்தாய்நீ-இப்படித்தான் பாசக் கயிறுபடப் பாய்ந்துதைத்தாய் இங்கெமது பாசம் அறுபடவே பார் பெண்கொடுத்தான் பர்வதன் கண்கொடுத்தான் வேடனும் பண்கொடுத்தார் நால்வர்! பயனென்ன?-மண்ணெடுத்து தின்ற திருமால் திரைகடலில் போய்த்தூங்க நின்றாய் சுடலையிலே நீ. பீதாம் பரம்பட்டு போர்த்தத் திருமாலாம் ஏகாம்பரனுக்கு ஏதாடை? வாகாக கொஞ்சிவெண்ணய் ஊட்டினார் கோபியர் மைத்துனர்க்கு- நஞ்சருந்த மட்டுமோ ...
More...More...More...More...