Blog

/Blog

நாகதோஷம் என்றால் என்ன? சத்குரு புதிய விளக்கம்

சூர்ய குண்டம் பிரதிஷ்டையின்போது பாம்பு பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு விளக்கமளித்தார்.அப்போது நாகதோஷம் என்றால் என்ன என்றொரு கேள்வியை தியான அன்பர் ஒருவர் கேட்டார். அதற்கு மிகவும் புதிய பரிமாணம் ஒன்றில் சத்குரு வழங்கிய விளக்கம் அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. “நாகதோஷம் என்பதன் வேறொரு பரிமாணத்தைப் பார்த்தால்,அது பாம்போடு தொடர்பு கொண்டிருக்க வேண்டுமென்று அவசியமில்லை.உங்கள் மூளையின் சிறுபகுதி ஒன்று உங்களை சில எல்லைகளை வகுக்கச் செய்கிறது.அது வாழ்க்கை பற்றிய சில எச்சரிக்கைகளை உங்களுக்கு வழங்குகிறது.சில அச்சங்களை ஏற்படுத்துகிறது.மூளையின் உட்பகுதி ...

உலகம் அழிகையில் சிவனென்ன செய்வார்?

அழித்தலுக்கான கடவுளென்று சிவனைச் சொல்வார்கள்.அவன் ஆடுமிடம் சுடுகாடென்பார்கள்.அவனுக்கு தாய்தந்தை இருந்திருந்தால் இப்படி மயானத்தில் ஆட விட்டிருப்பார்களா என்று பாடியவர்கள்சிவனடியார்கள். அடியவர்களிலேயே சிவனுக்கு அம்மா முறை கொண்டாடியவர் காரைக்கால் அம்மையார்.கொண்டாடியவர் அவர் மட்டுமல்ல. சிவனும்தான். பேய்வடிவெடுத்து காரைக்கால் அம்மையார் கயிலாயம் செல்லும்போது பார்வதி இவர் யாரென்று கேட்க,”வருமிவள் நம்மைப்பேணும் அம்மை காண்”என்றாராம் சிவபெருமான். பார்வதிக்கு மாமியாரைத் தெரியாத போதும் காரைக்காலம்மையாருக்கு மருமகளைத் தெரிந்தே இருக்கிறது. “நீதான் சுடுகாட்டில் ஆடிப் பழகி விட்டாய்.அவள் சின்னப்பெண்.அவளையும் உன் இடப்பாகத்தில் வைத்துக் கொண்டு ...

துப்பாக்கி எப்போது பூப்பூப்பது

என் பால்ய நண்பன் அருண் அமெரிக்காவின் காதலன்.அவன் பாஸ்டனில் இருந்த நாட்களில் அவனுடன்காரில் டி.எம்.எஸ் பாடல்களைக் கேட்டுக் கொண்டே நயாகரா சென்றபோது அவன் சொன்னது இன்றும் நினைவிருக்கிறது.” America is an Idea”.மனித சமூகம் ஒவ்வொன்றுமே தன் இலட்சிய வாழ்முறையை வடித்தளிக்க முற்பட்டுக் கொண்டேயிருக்கிறது.அப்போது தனக்கிருக்கும் அமெரிக்கக் காதலையும் மீறி அருண் கவலைப்பட்ட விஷயம் தனிமனிதர்களும் பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக் கொள்ளக் கூடிய உரிமை. அநேகமாக அந்த சட்டம் 2005ல்தான் முன்வரைவு கண்டதாக ஞாபகம். யாரேனும் ...

12.12.12.மதியம் 12 மணிக்கு சத்குருவுடன்…!!

ராதே பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு சத்குரு வருவாரா என்கிற கேள்வி எல்லோருக்கும் உண்டு. ஊரிலிருந்தால் வருவார் என்ற பதில் வரும், “ஊரிலிருக்கிறாரா?”என்ற அடுத்த கேள்வி எழும். அவரையே நேரில் பார்த்து அழைப்பிதழ் தந்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் சத்குருவை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். தோம் என்றால் திரு.கிருஷ்ணனும் நானும். புதன்கிழமை மதியம் 12.00 மணிக்கு சத்குருவை நீங்கள் சந்திக்கலாம் என்று தகவல் வந்தது. புதன்கிழமை 12.12.12 என்பது நினைவுக்கு வந்தபின்தான் மதியம் 12.00 மணி என்பதன் பொருத்தமும் புத்தியைத் ...

அற்புதர் – 18

அற்புதரின் பிரதேசம் மௌனத்தால் ஆனது. அங்கெழும் அத்தனை ஓசைகளும் மௌனத்தின் மடியில். நிகழ்பவை. மண்ணில் மழைத்துளி விழுகிற ஓசையும், புல்லில் பனித்துளி படிகிற ஓசையும் துல்லியமாகக் கேட்கும் விதமாய் அங்கே நிலைகொண்டிருந்தது மௌனம். அற்புதரின் மௌனமோ  சுழலும் வாளின் கூர்மைகொண்டது. நாலாதிசையிலும் சுழலும் அந்த வாளின் முனைபட்டு விம்மி வெடிக்கும் உயிர்களின் வெற்றுக் கவசங்கள் விழுந்தன. கெட்டிப்பட்ட அழுக்கையே கவசமென்று கருதிய அறியாமை பொடியாகும் ஆனந்த கணங்களை அற்புதர் நிகழ்த்திக் கொண்டேயிருந்தார்.அவருடைய மௌனத்தின் மேற்பரப்பில் முத்துதிர்த்த சொற்களின் ...

வைகையைப் பாடிய வைரமுத்து

கோவையில் படைப்பாளர்கள் கலந்துகொண்டு தங்களுக்குள் பல்வேறு விஷயங்களை விவாதிக்கும் ஊஞ்சல் என்னும் அமர்வு ஒவ்வொரு வாரமும் முதல் செவ்வாயன்று நடைபெறும் 20 முதல் 25 பேர்கள் மட்டும் கலந்துரையாடி விருந்துண்டு விடைபெறுவார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் விருந்தோம்பலில் இந்நிகழ்ச்சி சில ஆண்டுகளாய் நடைபெறுகிறது. இவர்களில் தங்கவேல் சரவணன் என்றோர் இளைஞர். மரபாளர்களுக்கே மறந்து போன பழந்தமிழில் திருமுகம் வரைவது தொடங்கி வெண்பா கட்டளைக் கலித்துறை என்று வெளுத்து வாங்குவார். அம்பாசமுத்திரம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரம் அவருடைய சொந்த ஊர். ...
More...More...More...More...