“நிறைய வேலை பண்ணுங்கப்பா”
” அந்தக் காலத்துல அந்தம்மா பேச்சைக் கேட்க நாங்கல்லாம் 12 மைல் சைக்கிளில போவோம்.தொ.மு.சி. ரகுநாதனும் அந்தம்மாவும் பேசினா மேடை கிடுகிடுக்கும்.பெரிய புரட்சிக்காரி” கவிஞர்புவியரசு என்னிடம் தொலைபேசியில் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டிருந்த போது ‘அந்தம்மா”வைக்கடைசியாகப் பார்க்க தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தேன். ஜீவா அவர்களால் மார்க்சீய மார்க்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு,ஆழ்ந்த தமிழறிஞராய் வளர்ந்து,வள்ளலார் நெறியில் வாழ்வை இணைத்து முதிர்ந்த தாய்மையின் கனிந்த வடிவமாய் வாழ்ந்து22/11/2012ல் காலமான முனைவர் சு.சிவகாமசுந்தரி அவர்கள்தான் “அந்தம்மா”. சின்னஞ்சிறு வயதிலேயே அனல்பறக்கும் பேச்சாளராய் அறிமுகமான சிவகாமசுந்தரியின் ...
கம்பனில் சுழலும் சொற்போர்
நடுவர் :”கலைமாமணி”மரபின்மைந்தன் முத்தையா கற்பவர் மனங்களைப் பெரிதும் கவர்பவன் அயோத்தி இராமனே– முனைவர்.குரு.ஞானாம்பிகை ஆரண்ய இராமனே- முனைவர்.து.இளங்கோவன் கோதண்ட இராமனே- திருமதி மகேஸ்வரி சற்குரு இடம்:அருள்மிகு கோதண்டராமசுவாமி ஆலயம் ராம்நகர், கோவை -641009 நாள்: 24.11.2012 சனிக்கிழமை மாலை 6.00 மணி சொற்போர் வெடிக்கும்! சூடு பறக்கும்! (அமரர் டி.எஸ்.சங்கர ஐயர் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி) தங்கள் வருகை……..எங்கள் உவகை அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!! ...
அற்புதர்-14
ஆண்டின் மிக இருண்ட இரவை அற்புதரின் முன்னிலையில் அணுஅணுவாய் உள்வாங்க பல இலட்சம்பேர் வந்துகொண்டிருந்தனர். மிகநீண்ட மலைப்பாம்பாய் வந்து கொண்டிருந்த அந்த வரிசையைப் பார்த்த அற்புதர் புன்னகைத்த வண்ணம் வணங்கினார்.அவருக்கு அன்றிரவு முழுவதும் தன் பங்குதாரருடன் ஒரு பணியிருந்தது.. ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கும் உயிர்ச்சுருளை உசுப்பிவிட்டு சீண்டிவிட்டு சீறவிட்டு வேடிக்கை பார்ப்பதில் அற்புதருக்கு அளவிட முடியாதஆனந்தம். தங்களுக்குள் இருக்கும் அந்த உயிர்ப்பை உணர்ந்தவர்கள்,உணராதவர்கள் அனைவருக்கும் அற்புதரின் சபையில் ஆசனங்கள் இர்ருந்தன.உலகின் வெவ்வேறு திசைகளிலிருந்தும் குழலோடும் யாழோடும்முரசுகளோடும் அங்கமெங்கும் தாண்டவத் துகள்களோடும் ...
அற்புதர்-13
அற்புதரின் இரவுகள் ஏகாந்தமானவை.அவரின் அறிதுயில் பொழுதுகளில் அகலத் திறந்த அவரின் ஆன்மவாசல்வழி தங்களுக்கானசொர்க்கவாசல் தென்படுகின்றதா என்று வடிவிலாத் துளிகள் வந்து நிற்பதுண்டு. பெருவழிக்கான பாதை திறக்க நெடுங்காலமாய் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் மீது அற்புதரின் கண்ணோக்கம் படும்போதே அவர்களின் பயணப் பொழுது முடிவாகிவிடும். கையிலிருக்கும் மூட்டை முடிச்சுகளைக் களவு கொடுப்பதே அந்தப் பயணத்துக்கான அடிப்படைத் தகுதி என்றறிந்தவர்கள் அற்புதர் அவற்றைக் களவாடும் கணத்திற்கென்று ஆவலுடன் காத்திருப்பார்கள்.நெடுங்காலமாய் சுமக்கும் அந்த மூட்டை முடிச்சுகளை அவர்களிடமிருந்து தனியே பிரித்தறியும் அற்புதமே ...
அற்புதர்-12
சின்ன வயதிலிருந்தே சிகரங்கள் என்றால் அற்புதருக்கு மிகவும் பிரியம்.அவரது பாதங்களிலும் பாதுகைகளிலும் வாகனச்சக்கரங்களிலும் மலைவாசனையும் வனவாசனையும்வந்து கொண்டேயிருக்கும்.முன்பொரு காலத்தில் பரமனின் பாதங்கள் பதிந்த மலைத்தடங்களில் அற்புதர் தன் குருநாதரை தரிசித்தார்.எனவே மலைகளின் தரிசனம், அவருக்கு தாய்முலை கரிசனம். அன்று தொடங்கி எல்லாச் சிகரங்களிலும் அவருக்கான பாதைகள் விரியத் தொடங்கின.சமவெளிகளில்அற்புதர் நடந்து வரும்போதெல்லாம் ஒரு சிகரம் நடந்து வருவதைப்போலவே இருக்கும். மலையேறும் மனிதர்கள் அடிவாரங்களில் இளைப்பாறி அதன்பின் தொடங்குவதுபோல் அவருடைய திருவடிகளில்இளைப்பாறி ஆன்மீகச் சிகரங்கள் நோக்கி ஆயிரமாயிரம்பேர் தங்கள் ...
அற்புதர்-11
ஆகாயத்தைக் குறிவைப்பவர்களில் அற்புதரும் ஒருவர். ஆனால் அவர் குறிவைப்பது, தான் ஏற்கெனவே வென்றுவிட்ட ஆகாயத்தை. நெற்றிப் புருவங்கள் நடுவே வந்து நின்ற வெட்டவெளியின் விரிவை வெளியிலும் காண்பதால் அவர்பார்க்கும் ஆகாயம், அவருடைய ஆகாயம். ஆனால் ஆகாயத்தைக் குறிவைத்து அவர் எய்யும் அம்புகள் எதையும் கிழிக்கும் அம்புகளல்ல.கிழிந்த ஆகாயத்தைத் தைக்கும் அம்புகள்.பூமியை நாணாக்கி மேல்நோக்கி மெல்ல மெல்ல எழும் அம்புகளை அவர் எய்த வண்ணம் இருக்கிறார். அற்புதரின் படைவீரர்கள் அல்லும்பகலும் அந்த அம்புகளை எய்தவண்ணம் இருக்கிறார்கள். அகஆகாயத்தின் ஆனந்தம் ...