தமிழக முதல்வர் ம.கோ.இரா.
இப்படித்தான் உலகத்தமிழ் மாநாட்டின்போது எம்.ஜி.ஆர்.தனித்தமிழ் ஆர்வலர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். அவருக்கு தமிழறிஞர்களுடன் நெருங்கிய தொடர்பும் பற்றும் இருந்தது. சில தமிழ்ச்சொற்களைப்பற்றி அவர் வேடிக்கையாகக் கேட்டதையும் அதற்கு முதல்வர் மனம் புண்படாமல் தான் விடைதந்த விதம் குறித்தும் அவ்வை நடராசன் அவர்கள் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஓட்டுநரை “காரோட்டி”என்று சொல்வதை எம்.ஜி.ஆர். ஒருமுறை கிண்டல் செய்தாராம்.”அது என்ன காரோட்டி கா..ரோட்டி” என்று கேலி செய்ய உடனே அவ்வை நடராசன்,”எனக்கென்னங்க தெரியும்? எனக்கு படகோட்டிதான் தெரியும்” என்று சொல்ல, ஒருகணம் திகைத்த எம்.ஜி.ஆர், வெடித்துச் சிரித்திருக்கிறார். அவர் முதல்வராக இருந்த காலத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாவதில் காட்டிய அக்கறை,பாரதியார் ...
அற்புதர்-10
வானம் வைக்கும் வண்ண வண்ண வரவேற்பு வளைவுகளும் மேகங்கள் தெளிக்கும் பன்னீர்த் துளிகளும் அற்புதரின் குடிலுக்கு கடவுள் வருவதை உலகுக்கு உணர்த்தின.அற்புதரின் செயல்கள் அனைத்திலும் அறிவிக்கப்படாத பங்குதாரராகிய கடவுள்,அற்புதரின் குடிலில் நுழையும்முன் வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த காலணிகளின் வரிசையில் தன் காலணிகளையும் கழற்றி வைத்தார். அப்புறம் அற்புதரின் குடிலில் வரவேற்பறையிலிருந்த விருந்தினர் பதிவேட்டில் மின்னல் கொண்டு வெளிச்சக் கிறுக்கல் கிறுக்கினார் எழுத்தேதும் அறியாமல் எல்லாம் அறிந்த பல ஞானியரின் பெருவிரல் ரேகைப்பதிவுகளும் அந்த வருகைப்பதிவேட்டில் இருப்பதைக் கண்ட கடவுள்அந்த ரேகைகளை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார். கடவுள் வருகிற தேதியறிந்து கூட்டம் கூட்டமாய் திரண்டிருந்த பல்லாயிரம் மனிதர்கள் வெள்ளாடையணிந்து ...
அற்புதர் – 9
அற்புதரின் பிரதேசத்திற்குள் புதிதாய் வந்தார் அந்த மனிதர். அவர் புதியவர் என்ற எண்ணம் அவருக்கு மட்டுமே இருந்தது. அற்புதரின் அங்க அடையாளங்களை அவர் ஏற்கெனவே விசாரித்தறிந்திருந்தார். அற்புதர் ஆடைகள் அணியும் பாங்கு பற்றி, அவர் கேள்விப்பட்டிருந்தார்.யாரையும் கேட்காமலே அற்புதரை அடையாளம் கண்டுவிட வேண்டுமென்று அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். முதிய தோற்றமுள்ள எளிய மனிதர் ஒருவர் அந்த மனிதருக்கு சற்று முன்பாக சென்று கொண்டிருந்தார். சுயதேடலின் பாதையில் செல்வதாலேயே சுடர்பொங்கும் வடிவுடைய இளைஞர்கள் சிலர் அந்த முதியவர் ...
அற்புதர் – 8
அற்புதருக்கு வாகனங்கள் ஓட்டப் பிடிக்கும். கரடுமுரடான சாலைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் அடிக்கடி பயணம் செய்யும் முரட்டு சாலையொன்றில் ஒருநாள் ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது..” ஆட்கள் வேலை செய்கிறார்கள்”என்று.அந்தப்பலகையைப் பார்த்ததும் அற்புதரின் இதழ்களில் குறுநகை அரும்பியது. அடுத்த சில மாதங்களில் கண்ணாடிபோல் வழுக்கிக் கொண்டு போன அதே சாலையில் அற்புதர் வெகுவேகமாக சென்று கொண்டிருந்தார். அந்த நெடுஞ்சாலையில் அவருடைய விரல்கள் மானசீகமாய் ஒரு வரியை எழுதிப் பார்த்தன,” ஆட்கள் வேலை செய்தார்கள்”. சிறிது தொலைவிலேயே ...
முடிவில்லாத கணங்கள்
எழுதித் தீராக் கணங்களை எல்லாம் எப்படித் தாண்டுவது எழுத்தில் சேராக் கணங்களை எல்லாம் எங்கே தொடங்குவது பழுதாய்ப் போன பழைய கணங்களை எங்கே வீசுவது முழுதாய் வாழ மறந்த கணங்களை எங்கே தேடுவது கணையொன்று வில்லைக் கடக்கும் கணத்தின் கணக்கெங்கு காணுவதோ இணைப்பறவைகளில் ஒன்றை வீழ்த்தும் நொடியெங்கு தோன்றியதோ அணையினைக் கண்ணீர் தாண்டி நடக்கும் அபூர்வ கணமெதுவோ கணங்களில் நடக்கும் காலத்தின் கால்களில் துணைமுள் குத்தியதோ ஒவ்வொரு நொடியையும் உள்ளே வாங்கி உயிரில் சேமித்தேன் கவ்வி இழுக்கும் ...
வெத்தல வெத்தல வெத்தலயோ
மலேசியா வாசுதேவனின் ஆகிருதிக்குப் பொருந்தாத அப்பாவிக் குரலில், சிவக்குமாரின் வெள்ளந்தி முகத்திற்கு மிகவும் பொருந்தும் பாவத்தில் கங்கை அமரனின் வரிகளில் விளைந்த அற்புதமான பாடல் ‘வெத்தல வெத்தல வெத்தலயோ”. கிராமத்து மனிதர்களையே சார்ந்து வாழ்ந்து அவர்களுக்குப் பயன்கருதாமல் கைங்கர்யம் செய்யும் எளிய மனிதர்களின் பிரதிநிதியான வண்டிச்சோல செம்பட்டையின் குரல் அந்தப் பாடலில் துல்லியமாய் ஒலிக்கும். ஆதுரமாய் அழைத்து வேலைவாங்கும் யாரோ ஒரு பாட்டி,கல்யாணம் முடித்ததும்””மொத ஆசீர்வாதத்துக்கு” அழைக்கும்யாரோ ஒரு தாத்தா,அதட்டி வேலைவாங்கும்போதே அக்கறையை உணர்த்திவிடும் பயில்வான், இவர்களிடம் ...